இவன் புத்திரன் கிள்ளிவளவனும் அவன் சகோதரன் பெருநற்கிள்ளி என்பவனும் கி. பி. 105 முதல் 150 வரையும் அரசாண்டார்கள். பெருநற்கிள்ளி என்பவர் காலத்தில் திருச்சிராப்பள்ளிக்கு சமீபத்திலுள்ள உறையூர் ராஜதானியாக்கப்பட்டது போலும், மேலும் பெருநற்கிள்ளி என்பவர் ஒரு ராஜசூயயாகம் செய்தாரென்றும் அதற்கு சோழராஜனும் பாண்டிய ராஜனும் இலங்கை அரசனும் வந்திருந்தார்களென்றும் தெரிகிறது. இவருக்குப்பின் இரண்டு தலைமுறை ராஜ்ய மிருந்ததாகத் தெரிகிறது. கி. பி. 130-246 வருஷம் வரை உறையூர் சோழ ராஜ்யத்தின் தலைநகராயிருந்தது. அதன் பின் சோழராஜர்களைப்பற்றி விபரம் காணோம். சுமார் கி. பி. 600-ம் வருஷத்தில் கோச்செங்கண்ணான் என்னும் சோழராஜன் ஒரு வரிருந்ததாகவும் இவர் மிகவும் தெய்வபக்தியுடையவராய் சிவாலயங்களும் விஷ்ணு ஆலயங்களுமாக 70-க்கு மேற்பட்ட ஆலயங்கள் கட்டினதாகவும் "Tanjore District Gazetteer" என்னும் புஸ்தகத்தில் தெரிகிறது. இவர்பின் விஜயாலயன் என்னும் சோழராஜன் காஞ்சிபுரத்திலிருந்து தஞ்சாவூரை ஜெயித்து பரகேசரிவர்மன் என்னும் பட்டப்பெயருடன் உக்கல், காஞ்சிவரம், திருக்கோயிலூர், சுசீந்திரம் முதலிய இடங்களைக்கட்டிக்கொண்டு ஆளுகை செய்து வந்தாரென்று அங்குள்ள கல் சாசனங்களால் தெரிகிறது. கி. பி. 846 முதல் 880 வரையும் இவர்காலமாம். இவருக்குப்பின் இவர் பிள்ளையாகிய முதல் ஆதித்திய ராஜகேசரிவர்மன் கி. பி. 880-ம் வருஷ முதல் 907-ம் வருஷம்வரை அரசாட்சிசெய்தார். இவர் பாண்டியராஜனாகிய வரகுண பாண்டியனையும் பல்லவ் அபராஜித்தையும் ஜெயித்து நாட்டையும் தன் ஆளுகைக் குட்படுத்தினார். இவருக்குப்பின் பராந்தகர் 1 அல்லது பரகேசரிவர்மன், வீரநாராயணன் என்ற பட்டப்பெயருடன் கி. கி. 907-முதல் 947-வரையும் அரசாட்சி செய்தார். இவர் பாண்டியராஜ்யத்தில் ராஜசிம்மனோடு கி. பி. 910-ல் சண்டை செய்து ஜெயித்தார். சிதரம்பரம் கோயில் பெரிய சபைக்கு தங்க ஓடுகள் போட்டிருக்கிறார். இவர் ஆட்சி செய்த 40-வருஷத்தில் 7-ம் வருஷம் இலங்கைக்குப் படையெடுத்துச்சென்று அவ்விராஜனோடு சண்டை செய்து அதைத் தன் ஆளுகைக்குட் படுத்தினார். இவருக்கு ஐந்து புத்திரர்களிருந்தார்கள். இவர்களில் முதல்வனான ராஜாதித்யன் என்ற பட்டப்பெயருள்ள ராஜகேசரிவர்மன் பட்டத்துக்கு வந்தான். இவர்களுக்குப்பின் இவர் தம்பியாகிய கண்டராதித்தன் பட்டத்துக்கு வந்தார். இவர்இறந்தபின் இவர் மனைவி கோனேரி ராஜபுரத்தில் ஒரு கோயில் கட்டி அதில் தன் புருஷன் சிலையையும் ஸ்தாபித்து வைத்தாள். இவர் தம்பி அருஞ்செயன் அல்லது அருச்சுனா. இவர் பிள்ளை பராந்தகன் II அல்லது சுந்தரசோழன். இவருக்குப்பின் ஆதித்தியர் II அல்லது கரிகாலன் II. இவருக்குப் பின் பரகேசரிவர்மன் அல்லது உத்தமச்சோழன் கி. பி. 970 முதல் 985 வரையும் அரசாண்டார். இவர் தனக்குப்பின் ராஜராஜன் பட்டத்துக்கு வரவேண்டுமென்று வாக்குக்கொடுத்து அவர் மைனராய் (Minor) இருக்கும் பொழுது ஆண்டு வந்ததாகத் தெரிகிறது. ராஜராஜசோழன் என்பவர் சோழராஜர்களுள் மிகச்சிறந்தவராகத் தெரிகிறது. பூர்வம் சோழராஜ்யத்தின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தில் ஆண்டு கொண்டிருந்த முதலாம் கரிகால் சோழன் எவ்வளவு பிரபல ராஜனாயிருந்தானோ அப்படியே இவனுமிருந்தானென்று
|