சொல்லவேண்டும். இவன் யுவ ராஜனாயிருக்குங்காலத்தில் அருமொழித்தேவன் என்று பெயர். தான்ராஜ்யத்திற்கு வந்த மூன்றாம் வருஷத்தில் மும்முடிச்சோழன் என்று பெயர் வைத்துக்கொண்டான். பன்னிரண்டாம் வருஷத்தில் காந்தளூர் முதலிய கரைப்பட்டணங்களைப் பிடித்துக்கொண்டான். பதினாலாம் வருஷத்தின் துவக்கத்தில் கங்கபாடி, நுளம்பபாடி, தடிகை பாடி, வெங்கைநாடு முதலியவைகளை ஜெயித்தான். பதினாலாம் வருஷத்தின் பின் பாகத்தில் பாண்டியராஜ்யத்தையும் பதினாறாம் வருஷம் கொல்லத்தையும் கலிங்கத்தையும் 20-ம் வருஷத்தில் இலங்கையையும் ஜெயித்தான். 29-ம் வருஷத்தில் லக்கதீவுகளைச் சேர்ந்த 12,000 தீவுகளையும் பிடித்துக்கொண்டானென்று சொல்லப்படுகிறது. கடைசிக்காலங்களில் இவனுக்கு ஜெயங்கொண்டானென்றும் ராஜாஸ்ரயன் என்றும் பெயர் வழங்கிற்று. இவன் தஞ்சைமாநகரிலுள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தைக்கட்டினான் என்று தோன்றுகிறது. இவ்வாலயத்தில் எழுதப்பட்ட சிலாசாசனங்களில் இவனும் இவன் மனைவியரும் மற்றும் குடும்பத்தாரும் பலதருமங்கள் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இவன் காலத்தில் சங்கீதமும் மற்றும் அருங்கலைகளும் விருத்தியாகியிருந்ததாகக்காணலம். இவன் சோழராஜ்யத்தின் பிரபலமாயுள்ள சில ஆலயங்களுக்குப் பாடர்களை நியமித்து அவர்களுக்கு குடியிருப்பு இடங்களும் மானியங்களும் தினக்கட்டளையும் ஏற்படுத்தியிருக்கிறான். இவன் மரணமடைகையில் மதுரை திருநெல்வேலி தவிர சென்னைராஜதானியிலுள்ள பூமி முழுதையும் ஆண்டுகொண்டிருந்தான். இன்னும் தான் ஜெயிக்கிறதற்கு நாடுகளில்லையே யென்று வருத்தப்பட்டானாம். மிகவும் பராக்கிரமமுள்ள இவ்வரசன் 1013-ல் இறந்தான். இவன் குமாரன் ராஜேந்திரன் அல்லது கங்கைகொண்ட சோழன், முடிகொண்டசோழன், உத்தமசோழன் என்றபெயர்களுடன் கி. பி. 1010-1042 வரை ஆண்டான். அக்காலத்தில் கலிங்க நாட்டையும் கங்கை நதிப் பிரதேசங்களையும் பர்மா தேசத்தையும் ஜெயித்து தன் ஆளுகைக்குள் படுத்தினான். இவன் மகன் ராஜாதிராஜன் 1042-ல் பட்டத்துக்கு வந்தான். இவனுக்கும் சோமேசுர சாளுக்கியனுக்கும் ஓயாது சண்டை நடந்துகொண்டிருந்தது. இவன் 1052-ம் வருஷத்தில் துங்கபத்திரா நதிக்கு சமீபத்தில் கோப்பம் என்ற இடத்தில் சண்டையில் இறந்தான். இவன் இறந்தவுடன் இவன் சகோதரன் சோமேசுர சாளுக்கியனுடன் சண்டை செய்து வெற்றியடைந்து 1052-1061 வரை அரசாட்சி செய்தான். இவன் பின் வீர ராஜேந்திரன் அல்லது சகல புவனாசிரயர் என்பவர் 1062-1070 வரையும் அரசாட்சிசெய்தார். இவர் முந்தின ராஜேந்திரனுடைய சகோதரர். இவர் காலத்தில் கங்கைவாடியிலிருந்து விக்கிரமாதித்தன் படையெடுத்து வந்தான். அவனை ஜெயித்து ஓடும்படி துரத்தினார். வைக்கலன் என்பவனை வேங்கி நாட்டில் ஜெயித்தார். பெஜவாடாவிலும் துங்கபத்திரா சங்கமத்திலும் சாளுக்கியரை ஜெயித்தார். தான்பட்டத்துக்கு வந்த ஐந்தாவது வருடத்தில் கேரளம், பாண்டியம், கலிங்கம் என்னும் நாடுகளை ஜெயித்து ராஜதிராஜன் என்னும் பட்டப்பெயருடன் அரசாட்சி செய்தார். இவன் மகன் அதிராஜ ராஜன் ஒரு வருஷம் ஆண்டான். அதன் பின் ராஜராஜன் குமாரத்தி மகன் ராஜேந்திர சோழன், குலோத்துங்கச் சோழன் என்ற பட்டப்பெயருடன் காஞ்சிபுரத்தில் ராஜபிரதிநிதியாய் பன்னிரண்டாம் வயதில் நியமிக்கப்பட்டான். குந்தளதேசம் என்ற காவிரிக்கரையிலுள்ள நாட்டிற்கு ராஜனானான். பாண்டிய ராஜனை ஜெயித்தான். மன்னார்குடாவை தன் வசப்படுத்திக்கொண்டான். திருநெல்வேலி
|