பொதியமலை, கன்னியாகுமாரி, கோட்டாறு, சையமலை, குடமலைநாடு, விழிஞம், சாலை முதலிய இடங்களை 1085-ல் ஜெயித்தான். இவன் காலத்தில் மதுரைதவிர சென்னை ராஜதானிமுழுதும் சோழராஜ்யத்தைச் சேர்ந்ததாயிருந்தது. இவன்காலத்தில் நில அளவு ஏற்பட்டது. அந்த அளவு கோலுக்கு ஸ்ரீபாதம் என்று பெயர். கவிச்சக்கிரவர்த்தி ஜெயங்கொண்டான் என்பவர் இவன் காலத்திலிருந்தார்.. வேங்கி தேசத்தையும் கலிங்கத்தையும் 1084-ல் ஜெயித்து சோழராஜாக்களில் சிறந்தவராய் விளங்கினார். சக்கிலர் இவர்காலத்திலிருந்தார். இவர் தன்காலத்தில் வழங்கி வந்த சில சுங்கங்களைத்தள்ளிவிட்டதனால் இவர்க்கு சுங்கந்தவிர்த்த சோழன் என்று பெயர் வழங்கலாயிற்று. இவருக்குப்பின் விக்கிரமச்சோழன் 1118-முதல் 135வரையாண்டுவந்தார். இவர் குலோத்துங்கனின் நாலாவது மகன். இவருக்குப் பின் இரண்டாவது குலோத்துங்கன் 135-முதல் 1150-வரையும் திரிபு வனச்சக்கிரவர்த்தி என்றபெயருடன் அரசாண்டுவந்தார். இவர் காலத்தில் ஒட்டக்கூத்தன் இருந்தான். இரண்டாவது ராஜாதி ராஜ சோழன் 1164 முதல் 1178 வரையும்அரசாண்டார். இவர் காலத்தில் சக்கிலர் கம்பன், ஒட்டக்கூத்தன், புகழேந்தி, அடியார்க்குநல்லார் முதலிய வித்வ சிரோமணிகளிருந்ததாகத் தெரிகிறது. மூன்றாவது குலோத்துங்கன் 1178 முதல் 1216 வரையும்அரசாட்சி செய்தார். இவர் மிகுந்த தெய்வ பக்தியுடையவர். அநேக சிவாலயங்களைப் புதிதாகக் கட்டியும் அநேக பழைய சிவாலயங்களைப் பழுதுபார்த்து வைத்தார். இவர் பின் திரி விக்கிரம சக்கிரவர்த்தி அல்லது மூன்றாவதுராஜாதி ராஜ சோழன் 1216-ல் பட்டத்துக்கு வந்து 1244 வரையும் ஆண்டுகொண்டிருந்தார். அதன்பின் ராஜேந்திர சோழ தேவர் 1245-1267 வரையும்ஆண்டார். இவர்களைப் பற்றிய இன்னும் சில விவரங்களைகிருஷ்ணசாமி ஐயங்கார் M.A. எழுதிய "இந்திய பூர்வ சரித்திரம்" என்ற புஸ்தகத்திலும் "Tanjore District Gazetteer" என்னும் புஸ்தகத்திலும் காணலாம். ராஜேந்திர சோழ தேவருக்குப்பின் அதாவது 1267-ம்வருஷத்திற்குப்பின் சரியான ராஜாக்களில்லாமல் சோழ ராஜ்யத்தின் பலம் வரவரக் குறைந்து சுமார் 300 வருஷங்களாக பலவித துன்பங்களையும் அடைந்து வந்தது. அதில் 1310-ல் மாலிக்காபர் என்னும் மகம்மதியர் மதுரையையும், திருச்சிராப்பள்ளியையும் ஜெயித்து 50 வருஷம் ஆண்டார். அதன்பின் சோழ ராஜ்யம் விஜயநகரத்தரசர்களுக்குள் வந்தது. 1335 முதல் 1343 வரை புக்கராயனும் அதன்பின் விருபாட்சனும்சோழ ராஜ்யத்தை எடுத்துக்கொண்டார்கள். 1374-1375 வரையும் திருச்சிராப்பள்ளியை கம்பன்ன உடையார்ஆண்டுகொண்டு வந்தார். 1379 முதல் 1391 வரை திருச்சிராப்பள்ளியை அரிகரராயன்ஆண்டார். தஞ்சாவூரில் 1443-ல் எழுதிய கல்வெட்டு தான சாசன மூலமாய் தேவராயரிருந்ததாகத் தெரிகிறது. 1455-ல் திருமலைராயன் கொடுத்த கல்வெட்டு சாசனங்களும் தஞ்சையிலிருக்கிறது..
|