பக்கம் எண் :

155
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

3. தஞ்சைமாநகரம் பிரகதீஸ்வரர் கோயிலில் காணப்படும் கல்வெட்டுச் சாசனம்.

இது கோயில் வெளிப்பிரகாரத்தின் மதில்சுவரில் வெளிப்புறத்தில் வடமேற்கு மூலையிலுள்ள கல்வரிசைகளில் எழுதப்பட்டிருக்கிறது.

ஸ்வஸ்தி ஸ்ரீ திருமகள்போலப் பெருநிலச்செவ்வியும் தனக்கே யுரிமைபூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி வெங்கைநாடு கங்கபாடியும் தடிகைபாடியும் நுளம்பபாடியும் குடமலைநாடுங் கொல்லமுங் கலிங்கமும் முரட்டெழில் சிங்களர் ஈழமண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும் முன்னீர்ப் பழந்தீவு பன்னீராயிரமும் திண்டிறல்வென்றித் தண்டாற்கொண்ட தன்னெழில் வளரூழியுளெல்லாயாண்டுந் தொழுதகவிளங்கும் யாண்டேசெழியரைத் தேசுகொள் கோராஜகேஸரி வர்ம்மரான ஸ்ரீ ராஜராஜதேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவதுவரை உடையார் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் உடையாருக்குத் திருப்பதியம் விண்ணப்பம்செய்ய உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் குடுத்த பிடாரர்கள் நாற்பத்தெண்மரும் இவர்களிலே நிலையாய் உடுக்கை வாசிப்பான் ஒருவனும் இவர்களிலே நிலையாய்க் கொட்டி மத்தளம்வாசிப்பான் ஒருவனும் ஆக ஐம்பதின் மர்க்குப்பெயரால் நிசதம் நெல்லு முக்குறுணி நிவந்தமாய் ராஜகேஸரியோடொக்கும் ஆடவல்லானென்னும் மரக்காலால் உடையார் உள்ளுர்ப்பண்டாரத்தேய் பெறவும் இவர்களில் செத்தார்க்கும் அநாதேசம்போனார்க்கும் தலைமாறு அவ்வவர்க்கு அடுத்தமுறை கடவார் அந்நெல்லுப்பெற்றுத் திருப்பதியம் விண்ணப்பஞ்செய்யவும் அவ்வவர்க்கு அடுத்தமுறை கடவார் தாந்தாம்யோக்யர் அல்லாதுவிடில் யோக்யராயிருப்பாரை ஆளிட்டுத் திருப்பதியம் விண்ணப்பஞ்செய்வித்து அந்நெல்லுப்பெறவும் அவ்வவர்க்கு அடுத்தமுறை கடவாரின்றியொழியில் அந்த நியாயத்தாரே யோக்யராயிருப்பாரை திருப்பதியம் விண்ணப்பஞ்செய்ய இட்டு இட்ட அவனே அவ்வர் பெறும்படி நெல்லுப்பெறவும் ஆக இப்படி உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் திருவாய் மொழிந்தருளின படி கல்லில் வெட்டியது :-

நெ.

பெயர்.

நிசத நெல்விபரம்

1.பாலன் திருவாஞ்சியத்தடிகளான ராஜராஜப்பிச்சனானசதாசிவனுக்கு. முக்குறுணி.
2.

திருவெணாவல் செம்பொற்சோதியான தக்ஷிணமேருவிடங்கப்பிச்சனான ஞாநசிவனுக்கு முக்குறுணி.

முக்குறுணி.
3. பட்டாலகன் அம்பலத்தாடியான மனோத்தமசிவனுக்குமுக்குறுணி.
4. பட்டாலகன் சீருடைக்கழலான பூர்வ்வசிவனுக்குமுக்குறுணி.
5. பொற்சுவரன் திருநாவுக்கரையனான பூர்வ்வசிவனுக்குமுக்குறுணி.
6. மாதேவன் திருநானசம்பந்தனான ஞானசிவனுக்குமுக்குறுணி.
7. கயிலாயன் ஆரூரனான தர்ம்மசிவனுக்குமுக்குறுணி.
8. செட்டி எடுத்தபாதமான சதாசிவனுக்குமுக்குறுணி.
9. ராமன் சம்பந்தனான சத்யசிவனுக்குமுக்குறுணி.
10. அம்பலவன் பத்தர்கள் * * டனான வாமசிவனுக்குமுக்குறுணி.
11. கம்பன் திருநாவுக்கரையனான சதாசிவனுக்குமுக்குறுணி.
12. நக்கன் சீராளனான வாமசிவனுக்கு முக்குறுணி.முக்குறுணி.
13. அப்பி திருநாவுக்கரையனான நேத்ரசிவனுக்குமுக்குறுணி.
14. சிவக்கொழுந்து சீராளனான தர்ம்மசிவனுக்குமுக்குறுணி.
15. ஐஞ்ஞூற்றுவன் வெண்கடனான சத்பசிவனுக்குமுக்குறுணி.
16. அரையன் அணுக்கனான திருமறைக்கா * * னான தர்ம்மசிவனுக்குமுக்குறுணி.
17. அரையன் அம்பலக்கூத்தனான ஓங்காரசிவனுக்குமுக்குறுணி.
18. ஆரூரன் திருநாவுக்கரையனான ஞாநசிவனுக்குமுக்குறுணி.
19. கூத்தன் மழலைச்சிலம்பான பூர்வ்வசினுக்குமுக்குறுணி.
20. ஐஞ்ஞூற்றுவன் சீயாரூரான தத்புருஷசிவனுக்குமுக்குறுணி.
21. சம்பந்தன் ஆரூரனான வாமசிவனுக்குமுக்குறுணி.
22. அரையன் பிச்சனான தர்ம்மசிவனுக்குமுக்குறுணி.