பக்கம் எண் :

157
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

பணி செய்வித்துக்கொள்ளப்பெறவும் அடுத்தமுறை கடவார் இல்லாது விடில் அவ்வவர் நியாயங்களுக்குத் தக்கவரில் அவ்வர் நியாயங்களிலாரே யோக்கியராயிருப்பாரை ஆளிட்டு இட்ட அவனே காணிபெறவும் ஆக இப்படி உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் திருவாய்மொழிந்தருளினபடி கல்லில் வெட்டினது :-

தளிச்சேரிப் பெண்டுகள் :-

நெ.

பெயர்

பங்கு

1.தெற்குத்தளிச்சேரி தென்சிறகு தலைவீடு திருவையாற்று ஓலோக மகாதேவி ஈஸ்வரத்துநக்கன் சேரமங்கைக்கு பங்கு ஒன்று
2. இரண்டாம்வீடு இத்தளி நக்கன் இரணமுகராமிக்குபங்கு ஒன்று
3. 3-ம் வீடு இத்தளி நக்கன் உதாரததுக்குபங்கு ஒன்று
4. 4-ம் வீடு இத்தளி நக்கன் பட்டாலிக்குபங்கு ஒன்று
5.5-ம் வீடு இத்தளி நக்கன் எடுத்தபாதத்துக்குபங்கு ஒன்று
6.6-ம் வீடு இத்தளி நக்கன் சோழசுந்தரிக்கு பங்கு ஒன்று
7.7-ம் வீடு இத்தளி நக்கன் ஏகவீரிக்கு பங்கு ஒன்று
8.8-ம் வீடு நாகப்பட்டணத்து திருக்காரோணத்து நக்கன் ராஜகேஸரிக்கு பங்கு ஒன்று
9.9-ம் வீடு இவ்வூர்க்கோயில் தளி நக்கன் தேசிச்சிக்கு பங்கு ஒன்று
10.10-ம் வீடு இத்தளி நக்கன் பெரிய தேசிச்சிக்கு பங்கு ஒன்று
11.11-ம் வீடு இவ்வூர் திருக்காரோணத்து நக்கன் விச்சாதிரிக்கு பங்கு ஒன்று
12.12-ம் வீடு இத்தளி நக்கன் மறைக்காட்டுக்கு பங்கு ஒன்று
13.13-ம் வீடு இவ்வூர் நடுவில் தளி நக்கன் திருவையாற்றுக்கு பங்கு ஒன்று
14.14-ம் வீடு ராஜகேஸரி நல்லூர் நக்கன் திருவையாற்றுக்கு பங்கு ஒன்று
15.15-ம் வீடு ஜனநாத புரத்து விக்கிரம விஜய ஈஸ்வரத்து நக்கன் தில்லையழகிக்கு பங்கு ஒன்று
16.16-ம் வீடு இத்தளி நக்கன் எச்சுமண்டைக்கு பங்கு ஒன்று
17.17-ம் வீடு இவ்வூர் பகவதிசேரி நக்கன் பரமிக்கு பங்கு ஒன்று
18.18-ம் வீடு திருவிடைமருதில் நக்கன் தில்லைக்கரைசிக்கு பங்கு ஒன்று
19.19-ம் வீடு இவ்வூர் நக்கன் அழகிக்கு பங்கு ஒன்று
20.20-ம் வீடு இவ்வூர் நக்கன் சதுரிக்கு பங்கு ஒன்று
21.21-ம் வீடு இவ்வூர் நக்கன் மதுரவாசகிக்கு பங்கு ஒன்று
22.22-ம் வீடு இவ்வூர் நக்கன் மாதேவடிகளுக்கு பங்கு ஒன்று
23.23-ம் வீடு இவ்வூர் நக்கன் * * மணிக்கு பங்கு ஒன்று
24.24-ம் வீடு கோமாக்கம் பீஸ்வரத்து நக்கன் இரவிகுல மாணிக்கத்துக்கு பங்கு ஒன்று
25.25-ம் வீடு பழையாற்று முள்ளூர் நக்கன் தளி நக்கன் ஆரூருக்கு பங்கு ஒன்று
26.26-ம் வீடு வடதளிநக்கன் வீராணிக்கு பங்கு ஒன்று
27.27-ம் வீடு இத்தளிநக்கன் தென்னவன் மாதேவிக்கு பங்கு ஒன்று
28.28-ம் வீடு இவ்வூர் அவனி நாராயணபுரத்து நக்கன் திருவையாற்றுக்கு பங்கு ஒன்று
29.29-ம் வீடு பழையாற்று தென்தளி நக்கன் மாதேவடிகளுக்கு பங்கு ஒன்று
30.30-ம் வீடு அரபுரத்து ஸ்ரீ தாளி விண்ணகர் நக்கன் புகழிக்கு பங்கு ஒன்று
31.31-ம் வீடு இவ்வூர் திகைப்பிராட்டி ஈஸ்வரத்து நக்கன் பாஞ்சாடிக்கு பங்கு ஒன்று
32.32-ம் வீடு இத்தளி நக்கன் கரணவிச்சாதிரிக்கு பங்கு ஒன்று
33.33-ம் வீடு தஞ்சாவூர் எரியூர் நாட்டுத்தளி நக்கன் சங்கிக்கு பங்கு ஒன்று
34.34-ம் வீடு இத்தளி நக்கன் தரணிக்கு பங்கு ஒன்று
35.35-ம் வீடு இத்தளி செட்டிக்கு  பங்கு ஒன்று
36.36-ம் வீடு இத்தளி அரவத்துக்கு பங்கு ஒன்று
37.37-ம் வீடு இத்தளி நக்கத்துக்கு பங்கு ஒன்று