6. மேற்காட்டிய அட்டவணையில் முக்கியமாய் கவனிக்கவேண்டிய சில குறிப்புகள். மேற்கண்ட சங்கீத வித்துவ சிரோமணிகளில் பலருடைய சரித்திரமும் அவர்கள் சங்கீதத் திறமையும் பூரணமாகத் தெரியவில்லை. மேலும் தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற வித்துவ சிரோமணிகளில் பலருடைய பெயர்களும் மற்றைய விபரமும் எனக்குக் கிடைக்க தாமதித்ததனால் இங்கே சேர்க்கக் கூடவில்லை. அதோடு ஒவ்வொருவரும் செய்த சங்கீத உருப்படிகள் இவ்வளவென்றும் தெரியவில்லை. இந்த அட்டவணையில் கண்ட பெயர்களில் புரந்தர விட்டல்தாஸ், க்ஷேத்திரிஞ்ஞர், தியாகராஜ ஐயர், அருணாசல கவிகள் போன்ற மகான்கள் கர்நாடக சங்கீதத்திலுள்ள ராகங்களில் பல உருப்படிகள் செய்து கர்நாடக ராகங்கள் மறந்து போகாமல் நிலை நாட்டியவர்களென்று சொல்ல வேண்டும். அவர்களுடைய பக்தி நிறைந்த கருத்துக்களும் அக்கருத்துக்கிணங்கிய இராகத்தின் சஞ்சாரமும் மிக அற்புதமானவை. சுவைக்கச் சுவைக்க இனிமை தரும் தேவாமிர்தமாக சங்கீதத்தின் அருமையை அறிந்ததோரால் கொண்டாடப்படுகின்றன. அதன்பின் கர்நாடக சங்கீதத்தின் பெருமைக்கேற்ற விதமாய் அநேக சங்கீத வித்துவ சிரோமணிகள் பதங்கள், கீர்த்தனங்கள், வர்ணங்கள், ராகமாலிகைகள், சிட்டாசுரங்கள் செய்து நாளது வரையும் நிலைத்திருக்கும்படி செய்திருக்கிறார்கள். இவர்களுள் புரந்தர விட்டல்தாஸ், க்ஷேத்திரிஞ்ஞர், தியாகராஜ ஐயர், அருணாசல கவிகள், வேங்கடமகி, குருராயாச்சாருலு, வீணை குப்பையர், சுதாசிவராயர், வீணை வெங்கிட்டரமணதாஸ், சிங்களாச்சாரியார், மகாதேவ அண்ணாவி, வடிவேல் அண்ணாவி, சுப்பிரமணிய ஐயர், சாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீக்ஷதர், வெங்கட சுப்பையர், சுப்பராம ஐயர், தாளபாக்கம் சின்னையா, மானம்புச்சாவடி, வெங்கட சுப்பையர் மகா வைத்தியநாத ஐயர், கடுவா பாகவதர், தலைஞாயர் சோமு ஐயர் முதலிய வித்துவசிரோமணிகள் சிறந்தவர்களாக நாளது வரையும் பலராலும் கொண்டாடப்படுகிறார்கள். இவர்கள் சங்கீத சாகித்திய ஞானமுடையவர்களாய் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம் முதலிய பாஷைகளில் அநேக உருப்படிகள் செய்து இனிமையுடன் கானஞ் செய்திருக்கிறார்கள். இவ்வருமையான கானங்களின் முக்கிய ரசங்கள் விளங்கும்படியாகவும் எல்லாரும் தேவகானமென்று கொண்டாடும்படியாகவும் மகா வைத்திநாத ஐயர், பிச்சாண்டார் கோயில் சுப்பராயர், இராகவையர், பட்டணம் சுப்பிரமணிய ஐயர், சிங்காரம் அல்லது வேணு, சின்னவைத்தி, பெரிய வைத்தி, சரபசாஸ்திரிகள், பட்டணம் சபேசையர், இராமநாதபுரம் சீனு ஐயங்கார், பரமேஸ்வர பாகவதர், மன்னார்குடி பக்கிரி, மதுரை பொன்னுசாமி, விஜயநகரம் குருராயாச்சாருலு, சூரிய நாராயண சோமயாஜி, வெங்கட்டரமணதாஸ், மைசூர் சாமண்ணா, மைசூர் சுப்பண்ணா, மைசூர் சேஷண்ணா, சல்லகாலி கிருஷ்ணையர்,, வீணை பெருமாளையர், வீணை சுப்புக்குட்டடி ஐயர், வீணை கல்யாண கிருஷ்ணையர், பிடில் திருக்கோடிக்காவல் கிருஷ்ணையர், பழமாறனேரி சாமிநாத ஐயர், படாரம் கிருஷ்ணப்பா, திருப்பழனம் பஞ்சாபகேச சாஸ்திரிகள், அனந்தராம பாகவதர், கோனேரி ராஜபுரம் வைத்தியநாத ஐயர், திருவையாறு சுப்பிரமணிய ஐயர், மாயவரம் வீணை வைத்தியநாத ஐயர், மிருதங்கம் நாராயணசாமி அப்பா, மிருதங்கம் அழகநம்பி, மிருதங்கம் தக்ஷணாமூர்த்தி மிருதங்கம் கிருஷ்ணய்யர், புல்லாங்குழல் சஞ்சீவி ராவ், பிடில் பஞ்சாபகேச பாகவதர், கோட்வாத்தியம் முத்தையா பாகவதர், பிடில் மாசிலாமணி பிள்ளை, பிடில் கோவிந்தசாமி பிள்ளை முதலியவர்கள் கானம் செய்தும், செய்து கொண்டும் வருகிறார்கள். இதோடு தோகூர் அனந்தபாரதி, கோபாலகிருஷ்ண பாரதி, அருணாசல கவிகள், கவிகுஞ்சரம் ஐயர், இராமசாமி ஐயர், முத்துராமலிங்க சேதுபதிகள், வேதநாயக சாஸ்திரியார், வேதநாயகம் பிள்ளை முதலிய கனவான்கள், தமிழ் மக்கள் நெடுநாள் வழங்கக்கூடியதாக அநேககீர்த்தனங்கள்
|