பக்கம் எண் :

232
சங்கீத பரம்பரையில் சொல்லப்படாமல் விட்ட பலர்.

வேங்கடகிரி ராஜகோபாலகிருஷ்ண மகாராஜா.

விஜயநகரம் பசுபதி ஆனந்த கஜபதி மகாராஜா.

பிட்டாபுரம் ராஜா வெங்கட்ட குமார சூரியராவ் பகதர்.

புதுக்கோட்டை ராமச்சந்திர மகாராஜா.

மைசூர் மகாராஜா, கிருஷ்ணசாமிராஜ உடையார், சாமராஜ உடையார்.

கார்வேட்நகர் வேங்கடபதி ராஜா.

எட்டையாபுரம் ஜெகதீஸ்வர எட்டப்ப மகாராஜா, ஜெகதீஸ்வர ராம குமர எட்டப்ப மகாராஜா.

ஆரணி ஜாகீர்தார் திருமலைராவ்.

அரியலூர் ஜாகீர்தார் யுவரங்கபூபதி.

திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர், சுப்பிரமணிய தேகிகர், அம்பலவாண தேசிகர்.

மணலி முத்துகிருஷ்ண முதலியார் என்ற சின்னையா முதலியார் வெங்கட கிருஷ்ண முதலியார். முதலிய பெரியோர்களை சங்கீதத்தை வளர்த்தவர்களென்று இங்கே சொல்ல வேண்டும். இவர்கள் சங்கீத வித்துவான்களுக்கு சகலமும் கொடுத்து ஆதரித்தார்களென்று சொல்வதோடு சங்கீத வித்துவான்களின் தவறுதலைத் திருத்தவும் தாங்களே பாடவும் சாகித்தியம் செய்யவும் கூடியவர்களாய் அநேக உருப்படிகள் செய்து நாளது வரை தங்கள் முத்திரையுடன் வழங்கி வரும்படி செய்திருக்கிறார்கள். அழியாப் புகழ்பெற்ற இவர்கள் ஆதரித்து வந்ததுபோல தற்காலத்தில் அதிகமாய் ஆதரிப்பாரில்லாதிருந்தாலும் மைசூர், திருவனந்தபுரம், புதுக்கோட்டை, விஜயநகரம், பிட்டாபுரம், கார்வேட் நகரம், இராமநாதபுரம், எட்டையாபுரம் முதலிய நாடுகளிலுள்ள மகாராஜாக்களால் வித்துவான்கள் ஆதரிக்கப்பட்டு வருகிறார்கள்.

8. சங்கீத பரம்பரையில் சொல்லப்படாமல் விட்ட பலர்.

இங்கே குறிக்கப்பட்ட வித்துவான்களைப் பார்க்கிலும் ஏராளமான பேர் ஓச்சரென்றும், அண்ணாவியென்றும், நாகசுரக்காரரென்றும், தவுல்காரரென்றும், மிருதங்கக்காரரென்றும், வீணைக்காரரென்றும், முகவீணைக்காரரென்றும், கந்தர்வர்களென்றும், தேவதாசிகளென்றும், நடனமாதர்களென்றும் சொல்லப்படும் வகுப்பாருள் சங்கீத சாகித்தியங்களிலும் பாவ ராக தாளங்களென்னும் சங்கீதத்தின் முக்கிய மூன்று அம்சங்களிலும் சிறந்து விளங்குகிறார்கள். சங்கீதத்தின் முக்கிய அம்சமாகிய பாவ, ராக, தாளங்களில் மிகத் தேர்ச்சி பெற்றவர்களாகிய இவர்களே பூர்வம் முதற்கொண்டு சங்கீதத்தைக் கற்று அதையே தங்களுக்கு ஜீவனமாகக் கொண்டவர்களென்று நாம் யாவரும் அறிவோம். இவர்களுள் காந்தர்விகள் (பாடகிகள்) பாட்டில் சிறந்தவர்களாயிருந்தார்களென்றும் இருக்கிறார்களென்றும் நாம் அறிவோம். அவர்களுள் வீணை வாசிக்கிறவர்கள் மிக ஏராளமாயிருந்தார்களென்றும் மிகச் சிறந்த வித்துவான்களாயிருந்தார்களென்றும் 2,000 வருஷங்களுக்கு முன்பே கரிகால சோழன் காலத்திலிருந்த மாதவியின் திறமையாலும் காந்தர்வதத்தையார் வீணா கானத்தாலும் நாம் அறிகிறதோடு தற்காலமும் அப்படிப்பட்டவர்ளிருக்கிறார்களென்றும் அறிவோம். அவர்கள் பெயர் விபரங்கள் எனக்குக் கிடைக்க தாமதித்தினால் இங்கே காட்டக்கூடவில்லை. சங்கீதத்திற்கேயுரிய இவர்களிடமிருந்தே மற்ற யாவரும் கற்றுக் கொண்டார்களென்பது பூர்வ முதல் காணக் கிடக்கின்றது. சுமார் 30 வருஷங்களுக்கு பின்னாலேயே பிராமணர்களும் மற்றவரும் மிருதங்கம் வாசிக்கக் கற்றுக்கொண்டு ஒரு முட்டுக்காரனைப்போல் சபைமுன் வந்தார்களென்பது உலகமறிந்த விஷயம். சங்கீதத்தில் தகுந்த பிழைப்பிருக்கிறதென்று யாவரும் கற்றுக்கொள்ள ஆரம்பித்த காலம் மிக சமீபமானதென்றே சொல்ல வேண்டும். சுமார் 1,000 வருஷங்களுக்கு உட்பட்டே இப்படி நடந்