(a) "மனிதர்கள் அனேக பேதங்கள். (b) தேசங்களும் அநேக பேதங்கள். (c) அவைகளுக்குள் பாடுகிறவர்களாலும் வெகு விதமான சங்கீத சாஸ்திரங்களை அறிந்தவர்களாலும், கற்பிக்கப்பட்டதுகளும், கற்பிக்கப்படுகிறதுகளும். கற்பிக்கப்படப்போகிறதுகளும், நம்மைப் போன்றவர்களால் அறியப்பட்டதுகளும். இலக்கணத்தில் மாத்திரம் இருக்கிறதுகளும் ஆன பல தேசிக ராகங்கள், அந்தந்தராகங்களுக்குப் பொதுவான மேளங்கள். (d) பந்துவராளி, கல்யாணி முதலிய முக்கியமான பல தேசிய ராகங்கள், அந்தந்த ராகங்களுக்குப் பொதுவான மேளங்கள். (e) இவைகள் அனைத்தையும் கிரகித்துக் கொள்வதற்காக இந்த 72 மேளங்கள் நம்மால் சொல்லப்பட்டன. ஆதலால் இந்த மேளங்களில் வியர்த்தமென்ற சந்தேகத்திற்கு காரணம் உண்டாகிறதா? (f) விருத்தரத்னாகரமென்ற சாஸ்திரத்தில் நிரூபிக்கப்பட்டதும் அதில் பிரஸ்தாரத்தில் கிடைத்ததுமான விருத்த சமுகத்திற்குள் என்னைப் போலொத்தவர்கள் பிரசித்தமான ஓர் விருத்தத்தை வியர்த்தமென்று சொல்லுவது சாராதல்லவா? (g) தாளப்பிரஸ்தாரத்திலுண்டான தாள சமுகத்திற்குள் பிரசித்தமான ஓர் தாளத்தை வியர்த்தமென்று சொல்லுவது சாராதல்லவா? (h) பிரசித்தமான பன்னிரண்டு ஸ்வரங்களைக் கொண்டு பிரயாசத்துடன் சேர்க்கப்பட்ட எழுபத்திரண்டு மேளங்களைக் காட்டிலும் குறைவாயாவது அதிகமாயாவது மேளத்தை ஒருவனும் உண்டு பண்ணான். உண்டு பண்ணுவானேயானால் என்னுடைய இந்தப் பிரயாசமானது வியர்த்தமாகிவிடும். குறைவாகவாவது அதிகமாகவாவது உண்டு பண்ணுவதற்கு நெற்றிக்கண்ணுடையவனாலும் முடியாது. ஆனதால் மாதிருகைகள் என்ற பெயர்களையுடைய எழுத்துக்கள் ஐம்பத்தொன்று என்பதுபோல், எழுபத்திரண்டு மேளங்களுக்கு குறைவும் உண்டாகாது. அதிகமும் உண்டாகாது. இவ்விதமாக நிச்சயமாக எழுபத்திரண்டு மேளங்கள் சொல்லப்பட்டன." etc. etc. இந்த 72 மேளக்கர்த்தாவும் அதன் ஜன்னிய இராகங்களும் கர்நாடக சங்கீதத்தையே குறிக்கிறதென்றாலும் சிற்சில சந்தேகம் வரும்படியான விதம் செய்யப்பட்டிருக்கிறது. வேங்கடமகிக்குமுன் கி. பி. 1,500-ம் வருஷத்திலிருந்த புரந்தரவிட்டல்தாஸ் என்பவரால் செய்யப்பட்ட கீதங்களும் சாகித்தியமும் நாளது வரையும் வழங்கி வருகின்றன. இவர் காலத்திற்கு முன்னாலேயே எழுதப்பட்டதாகத் தோன்றும் ‘வியாசகடகம்’ என்ற புஸ்தகத்தில் கனகாங்கி, ரத்னாங்கி, கானமூர்த்தி என்ற பெயர்களுடனும் கிரக நியாச அம்ச சுரங்களின் குறிப்புடனும் எழுதப்பட்டிருக்கிறதைப் பார்த்திருக்கிறேன். வேங்கடமகிக்கு புரந்தரவிட்டல்தாஸ் முந்தியவரென்றும் வியாச கடகம் அதற்கு முந்தியதென்றும் தோன்றுகிறது. கனகாங்கி, ரத்னாங்கி என்ற 72 மேளக்கர்த்தாக்களின் பெயரைமாற்றி கனகாம்பிரி, பேனதுதி, கானசாமவராளி என்று எழுதியிருக்கிறதைக் கவனிக்கும்பொழுது முந்தின நூல்களின் சாரத்தை கிரகித்து புதிதாக ஒரு நூல் தாம் உண்டாக்கி முந்தினதை மறைத்தார்கள் போலும் எனத் தோன்றுகிறது. இவ்வழக்கம் போலவே பூர்வ தமிழ் நூல்களிலுள்ள சாரத்தை அந்நிய பாஷைகளில் எழுதிக்கொண்டு தமிழ் நூல் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். 10. 103 பண்களின் மாறுதல். மேலும் இந்த 72 மேளக்கர்த்தாவையும் ஒப்புக்கொள்ளாமல் சங்கீத ரத்னாகரர் ராமா மாத்தியர் அபிப்பிராயப்படி 19 ராகங்கள்தான் உண்டென்று சாதிக்கிறவர்களுமுண்டு. 2,000 வருஷங்களுக்கு முன் வழங்கி வந்த 103 பண்களும் வழக்கத்திலில்லாமல் போயிற்றென்று நாம்
|