பக்கம் எண் :

235
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

நினைப்போம். ஆனால் உண்மையில் அப்படியல்ல. பூர்வகாலத்தில் படிக்கப்பட்டு வந்த ராகங்கள் அப்படியே நாளது வரையும் பேணப்பட்டு வருகின்றன. ஆனால் அவைகளின் பெயர்கள் அந்நிய பாஷைகளில் மாற்றப்பட்டும் அக்காலத்தில் வழங்கிய வர்ணமெட்டுகளுக்கு வேறு பாஷைகளில் சாகித்தியங்கள் போட்டும் வழங்கி வருகிறதென்று நாம் மறந்து போகக்கூடாது. இப்படி வழங்கி வரும் இராகங்களும் இராகத்தில் வழங்கி வரும் சுரங்களும் சுருதிகளும் நிச்சயம் தெரியாமல் போனபின் பலர் பலவிதமாய்ச் சொல்லவும் அந்நிய இராகங்கள் கலக்கவும் அசலாயுள்ள இராகங்கள் பிழைபடவும் நேரிட்டது. இப்பிழைகளை அறிந்து கொள்ளவில்லை. இதினால் 10 வருஷம் 12 வருஷம் தொண்டு செய்து கற்றுக்கொள்ள வேண்டியதாயிருக்கிறதே யொழிய புஸ்தக மூலமாய் அறிந்து கொள்ளக் கூடிய வித்தையாயில்லை. இவ்விஷயத்தைப் பற்றி அதாவது சுரம், சுருதி, இராகம் முதலியவைகளைப் பற்றி நெடுநாள் விசாரித்து வந்த எனக்கு இவைகளை வித்துவ ஜன சமுகத்தில் விசாரித்து ஒரு முடிவு செய்வது நல்லதென்று தோன்றிற்று. இது காரணத்தினாலேயே சங்கீத வித்தியா மகாஜனசங்கம் என்று ஒரு சபை கூட்டும்படி நேரிட்டது.