4. தஞ்சை சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தின் நோக்கம். 1. தென்னிந்திய சங்கீதத்தின் விருத்திக்கானவைகளை விசாரித்து முன்னுக்குக் கொண்டு வருவதும் அவற்றை எல்லோரும் அறிய பிரசுரப்படுத்துவதும். 2. தென்னிந்திய சங்கீதத்தையும் அன் ஆதாரக்கிரமங்களையும் முறைப்படிக் கற்க வித்தியாசாலை ஏற்படுத்துவது. 3. அதில் கற்கும் மாணவரையும் பரிட்சிக்கப்பட விரும்பும் மற்றவரையும் பரிட்சித்து யோக்கியதா பத்திரம் கொடுப்பது. 4. கர்நாடக சங்கீதத்திற்கு உதவியான நூல்கள், அச்சிடப்படாதிருக்கும் கீர்த்தனைகள் முதலியவைகளைத் தேடி அச்சிடுவது. 5. கதைகள் செய்வதிலும் பாடுவதிலும் முக்கிய தேர்ச்சி பெறும்படி ஒழுங்குபடுத்துவது. 6. கர்நாடக சங்கீதத்திலுள்ள சில முக்கிய விஷயங்களைப் பற்றிய கேள்விகளுக்கு ஆலோசனை செய்து சந்தேகம் தீர்ப்பது. 7. கர்நாடக ராகங்களில் வரும் சில தவறுதல்களை நீக்கி சுத்தப்படுத்துவது. 8. சிறந்தவித்துவ சிரோமணிகளுக்கு மெடல், பட்டப்பெயர் முதலியவை கொடுப்பது. 9. கர்நாடக சங்கீத சம்மந்தமான நூதன புத்தகங்கள், பத்திரிகைகள், அபிப்பிராயங்கள், கீர்த்தனங்கள் முதலிய உருப்படிகளை அரங்கேற்றுவதும் கர்நாடக இராகங்களையும் பண்களையும் பாடக்கூடிய வித்துவசிரோமணிகளைக் கொண்டு பாடிக்காட்டுவதும். இச்சங்கத்தில் பல கனவான்களும் தனவான்களும், வித்துவான்களும் சேர்ந்து தங்கள் பொருளையும், தேகசிரமத்தையும் பாராமல் சங்கீத சபையை மிக ஊக்கமுடன் நடத்தி வருகிறார்கள். 5. தஞ்சை சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தின் அங்கத்தினர். நிரந்தர சங்கத்தலைவர். ராவ் சாஹேப் மு. ஆபிரகாம் பண்டிதர். வரவேற்புத்தலைவர். மகா- - -ஸ்ரீ பஞ்சாபகேச பாகவதர் அவர்கள். மகா- - -ஸ்ரீ முத்தையா பாகவதர் அவர்கள். காரியதரிசிகள். மகா- - -ஸ்ரீ A. G. பிச்சைமுத்து அவர்கள். B.A., L.T., மகா- - -ஸ்ரீ N. P. சுப்பிரமணிய ஐயர் அவர்கள். முதலாவது சங்கம். மகா- - -ஸ்ரீ வீணை வைத்தியநாதையர் அவர்கள், மாயவரம். மகா- - -ஸ்ரீ சாமிநாதையர் அவர்கள், பழமாறனேரி, ஆகிய இவர்களின் அக்கிராசனத்தின் கீழ் நடத்தப்பட்டது.
|