பக்கம் எண் :

269
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-முதல் பாகம்-இந்திய சங்கீத சரித்திரச் சுருக்கம்

அப்படியிருக்க அதை உலக தந்திரத்தில் சத்காரியங்களுக்கு விரோதமாய் பிரவிர்த்திசெய்ய மனுநாரதர் முதலான ஸ்மிருதி கர்த்தர்கள் தபோ மார்க்கத்தில் நியம நிஷ்டையாயிருப்பவர்களுக்கு கந்தர்வவேதம் ஹிதமல்லவென்று எழுதும்படி நேரிட்டது. ஆயினும் பிர்ம்மநிஷ்டரான நாரதரும், திரேதாயுகத்தில் வால்மீகி மகரிஷியும் அவர் சிஷ்யர்களான இராஜ குமாரர்கள் குசீலவர்களும், துவாபரயுகத்தில் கிருஷ்ண பரமாத்மா, கோபிகள், அர்ஜுனசுவாமி முதலிய உயர் குலத்தோர்கள் கந்தர்வ வேதத்தைக் கைவிடாது அப்பியாசித்து அனுபவித்து வந்ததாகத் தெரியவருகிறது. அக்காலத்தில் சங்கீதமும் அங்கங்கே சக்கிரவர்த்திகளால் அபரிமிதமாக சம்மானிக்கப்பட்டு கேட்போர்களுக்கு உயர்ந்த அறிவையும் சத்குணத்தையும் ஆத்மபோதத்தையும் உண்டாக்கியது. அமெரிக்கா முதலான பெரிய தேசங்களில் சர்வகலா சாலைகளில் சங்கீதமும் ஒரு முக்கிய பாடமாக ஏற்பட்டு அதில் சாஸ்திர பிரக்ஞையும் அப்பியாசத் தேர்ச்சியுமுள்ள மாணாக்கர்களுக்குப் பட்டம் யோக்கிதாபத்திரம் முதலானது கிரமமாகக் கொடுத்து வருகிறார்கள். ஐரோப்பிய சங்கீத வித்தையில் தேர்ந்த ஓர் நிபுணி சென்னைக்கு வந்திருந்த போது அவர்கள் முன் கோபிகா கீதையைப் பாடிய ஒரு சாமானிய வைதீக பிராமணரின் பாட்டைக் கேட்டு தான் ஐரோப்பிய சங்கீதத்தில் மிலடி என்று படித்து உயர்வாக நினைத்திருந்ததை இப்போதுதான் கேட்டு ஆனந்தமடைந்தேன் என்பதைக் கேட்ட நான் நமது இந்திய சங்கீதத்தின் உயர்வை நினைத்து சந்தோஷமடைந்தேன். அப்படிப் பாடுகிறவர்கள் தற்காலத்தில் அபூர்வமாகிக் கொண்டு வருகிறார்கள்.

பின்னிட்டு அக்பர் சக்கிரவர்த்தி காலத்தில் ஐரோப்பாக் கண்டத்தின் சங்கீதத்தில் தேர்ச்சியுள்ளவரொருவரையும், அரபி சங்கீதத்தில் கவாய் ஒருவரையும், இந்திய சங்கீதத்தில் வித்வானொருவரையும், ஆஸ்தான பண்டிதர்களாக நியமித்து இம்மூன்று சங்கீதங்களின் தாரதம்மிய ஆராய்ச்சிகள் செய்வித்ததாயும், ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் சங்கீதம் கற்றுக் கொடுக்கப்பட்டதென்றும் சங்கீதம் தெரியாதவர்களிருக்கப் படாதென்று சட்டமிருந்ததாகவும் அபூல் பாசல் எழுதியிருக்கிறார். தற்காலத்திலோ சங்கீதம் படித்தால் பிள்ளைகளின் படிப்புக் கெட்டுப் போகுமென்று நினைக்கிறார்கள். அவுரங்கசீப் காலத்தில் சங்கீதம் தெரிந்தவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். அக்பர் செய்த பற்பல நன்மைகளும் எப்படி மாறுபாடடைந்தனவோ அப்படியே மனூசி என்னும் சரித்திரக்காரர், அவுரங்கசீபு சங்கீதத்தைக் கல்லறையடக்கம் செய்ததைப் பற்றி மனசு பதறும்படி எழுதியிருக்கிறார்.

அக்பர் நாளில் நடந்த ஆராய்ச்சிகளின் பல ரூபமாய் கபீர்தாஸ், விட்டல்தாஸ், புரந்தரதாஸ் முதலிய மகான்களின் சங்கீதங்கள் பூர்வீக சங்கீதத்துக்கும் தற்கால சங்கீதத்துக்கும் மத்திபமாக இருக்கிறது. அவர்களுடைய பாடல்கள் கேட்பவர்களுக்கு அடங்காத மகிழ்ச்சியும் ஆத்மபோதமும் சமாதி நிலையும் உண்டாக்கக் கூடியவைகளாகவே யிருக்கின்றன. நம்முடைய தற்கால சங்கீதத்துக்கும் தாஸ் கீர்த்தனங்களுக்கும் மிகுந்த வித்தியாசமிருக்கிறது.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாய் சங்கீதம் அப்பியாசிக்கப்பட்டு வருகிறது. அந்த முறைகளெல்லாம் ஒருவாறு தெரிந்து இந்திய சங்கீதத்தில் அவைகளில் உத்தமமாயுள்ளவைகளைச் சேர்த்துக் கொண்டு இந்திய சங்கீதத்தை விருத்தி பண்ண வேண்டியது நம்முடைய கடமை. நம்முடைய சங்கீத வித்துவான்கள் இந்தக் கடமையைத் தெரிந்து கொள்ளவில்லை.

தென்னிந்தியாவில் சமீப காலத்தில் சங்கீதம் அபிவிருத்திக்குக் கொண்டு வரப்பட்டதாக சரித்திர பூர்வமாகத் தெரிகிறது.

தெலுங்கு தேசத்தில் க்ஷேத்திரிஞ்ஞரின் பதங்கள் அற்புத"கற்பனையுள்ளவைகளாயிருக்கின்றன. கேட்போர் மனதைப் பரிசுத்தப்படுத்தி சமஸ்த பாபத்திலிருந்தும் நீக்கி ஈஸ்வர அர்ப்பணமாக மனதை நிலை நிறுத்தும்படியான தெளிவான பதங்கள் அமைந்துள்ளன. க்ஷேத்திரிஞ்ஞர் பதங்கள் தற்காலம் கேட்பதற்கு அபூர்வமாகிவிட்டன. ஒருவரும் அவைகளைப் பாடுகிறதில்லை. சதுரில் மாத்திரம் உபயோகப்படுத்தப்படுகின்றன. க்ஷேத்திரிய பதங்களே இந்த கெதியிலிருக்க இந்திய சங்கீதத்துக்கு மாத்திரம் என்ன பெருமை?

தஞ்சாவூர் சமஸ்தானத்தை சங்கீதத்திற்கு இருப்பிடம் என்று சொல்வார்கள். இங்கே சங்கீத வித்துவான்களுக்குள் பாட்டில் ஒற்றுமையில்லை. ஒருவர் பாடுவதுபோல இன்னொருவர் பாடுவதில்லை. தீக்ஷதர், தியாக ஐயர், சாமா சாஸ்திரி முதலிய மகான்களின் பதங்களை யாரால் மறக்கக்கூடும்.? அவர்களுடைய