கீர்த்தனங்களும் கீதங்களும் கேட்போர் மனதை உருகும்படி செய்கின்றன. சமஸ்த உபநிஷத்துக்களின் ரகசியத்தை அடக்கிக் கொண்டிருக்கின்றன. உபநிஷத்துக்களின் சத்து அடங்கிய அவர்களுடைய இருதயகமலத்திலிருந்து வந்தபடியால் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு உபநிஷத்தாகவே விளங்குகிறது. நிறைவுள்ள இருதயத்திலிருந்து பரவசப்பட்டு தெய்வீகமாய் வெளிப்படுகிற வாக்கே சங்கீதமல்லவா. கேட்பவர்களின் மனதைப் பரிசுத்தப்படுத்தித் தெய்வத் தன்மையில் மனதை நாடும்படி செய்தவதல்லவோ சங்கீதத்தின் பயன். நமது சங்கீத சாஸ்திரத்தின் முக்கிய கொள்கையே அப்படித்தான். பிரம்மம் நாத சொரூபமாகி சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களுக்குக் காரணமாயிற்று. இதரபூதங்களான சுவரூபங்கள் உபாதான காரணமாய் மாத்திரமாயின. நாதத்துக்கு சுவரூபங்களை உண்டு பண்ணவும் காப்பாற்றவும் அழிக்கவும் சக்தி உளதென்று பாச்சாத்தியர்களுடைய சயன்சினாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயம். அது கொண்டு நாதத்திலிருந்து உற்பத்தியான நமது ஆத்மா சப்த சுரங்களாய் விளங்கும் தன்மையைநாதானு சந்தானத்தில் அகன்று ஆதிமூலஸ்வரத்தில் லயமடைவித்து சுவரூபசாக்ஷாத் காரம் சுவரூபலயம் என்ற மோக்ஷங்களைப் பெறலாமென்பது சித்தாந்தம். இச்சித்தாந்தமே நமது இராஜாங்கத்தில் வெகு காலம் ஆஸ்தான கவியாயிருந்த ஆல்பிரட் டெனிசன் என்பவர் தன்னுடைய நாமமாகிய மந்திர சுவரூபத்தை தியானித்ததால் அவருக்குண்டாகிய சுவரூப சாக்ஷாத்காரத்தை அவர் பிளட்டு துரையால் நடந்த உணர்ச்சி மாறுபாடுகளைக் குறிக்கிற ஆராய்ச்சியிலும் புரொபஸ்ஸர் டிண்டலின் சம்பாஷணையிலும் ஏன்ஷியண்டு சேஜ் என்னும் கவியிலும் வெளியிட்டிருக்கிறார். நாதம் அல்லது மந்திரங்களின் மகிமையை இதர நாடுகளிலும் அன்னிய மதஸ்தர்களும் அந்நாட்டு மகான்களான கிறிஸ்து மகம்மது முதலானவர்களாலும் கொண்டாடியும் அனுபவித்துமிருக்கிறதாகத் தெரியவருகிறது. இந்தியாவில் தற்காலம் அனுஷ்டிக்கப்படுகிற சங்கீதத்தின் அருமை அதை அப்பியாசிக்கிறவர்களுடைய தன்மையைப் பொறுத்ததாயிருக்கிறது. சங்கீதம் எந்த விஷயத்துக்கு உபயோகப்படுத்தப்படுகிறதோ அதைக் கொண்டே அந்த சாஸ்திரத்துக்குப் பெருமை ஏற்படும். அதினுடைய அருமை பெருமையை அறியாத சிலர்கள் அதை விவஸ்தையில்லாது உபயோகப்படுத்தி சாஸ்திரத்திற்குப் பெருமைக் குறைவு உண்டு பண்ணுகிறார்கள். இந்திய சங்கீதம் தற்காலம் இவ்விதமான குறைவையுடையதாயிருக்கிறது. தகுதியில்லாத பாடகர்களால் சங்கீத சாஸ்திரத்துக்கே ஊனம் ஏற்படுகிறது. ஆதலால், சங்கீதத்தின் செயலும் பயிற்சியும், சாஸ்திரம் தெய்வ பக்தி இம்மார்க்கத்தை யனுசரித்தேயிருக்க வேண்டும். தெய்வானு சந்தானமில்லாத சங்கீதமும், உதரபோஷண மாத்திரமுள்ள தொழிலும் மாங்கல்யமில்லாத ஆபரணங்களும் போல பயன்படவுமாட்டாது, சோபிக்கவுமாட்டாது. அவ்விதமாய் சங்கீதத்தை அப்பியாசித்து வெளிப்படுத்தின மகான்களின் பரம்பரையில் தற்காலம் ஒருவரும் இல்லை. அவர்கள் முறைப்படி சாஸ்திரத்தைத் தொடர்ந்து விருத்தி செய்கிறவர்களும் ஒருவருமில்லை. இருக்கிற வித்துவான்கள் மனோபாவம் என்று ஒரு பெயர் வைத்துக் கொண்டு இஷ்டம்போல் பாடுகிறார்கள். தியாக ஐயர் கீர்த்தனம் பாடும்போது இன்ன கீர்த்தனமென்றே புரியவில்லை. சாஸ்திரம், முறை, கருத்து, ஒழுங்கு எல்லாவற்றையும் விட்டு ஒருவித பக்தியிலும் கலப்பில்லாமல் யாருடைய வழியென்றும் தெரியாமல் எல்லாவற்றையும் விட்டு ஒதுங்கி நூதன முறையில் பாடக் கேட்கிறோம். இது தான் அவர்களின் மனோதர்மத்தின் விளையாட்டு இப்படியிருந்தால் சாஸ்திரம் ஏன் சிலாக்கியக் குறைவையடையாது.? தற்கால சங்கீத வித்துவான்கள் அப்பியாசிப்பதுபோல் அப்பியாசித்தால் எந்த சாஸ்திரந்தான் முன்னுக்கு வரும்? வைத்திய சாஸ்திரம் எங்கே? ஜோதிடம் எங்கே? சங்கீதம் எங்கே? இந்த சாஸ்திரங்களில் முயன்றவர்கள் சாஸ்திரத்தைவிட்டு சமயசஞ்சீவிகளாய் பரம்பரை மாத்திரம் போதுமென்றிருந்து வருவதால் நஷ்டப் பிராயங்களாகிவிட்டன. சாஸ்திரத்திலிருந்து நழுவினால் ஒன்றையேனும் சரியான வழியில் காணமாட்டோம். ஒரு சாஸ்திரமும் நம்மால் பிரகாசத்துக்கு வராது. பூரணயோக்கிதையும், பொருப்புமுள்ளவித்துவான்களும், சாஸ்திரத்தைக் கற்று நிர்வகிக்கும்படியான சிஷ்யர்களும் தேவை. சங்கீதம் அப்பியாசிப்பவர்கள் அந்த சாஸ்திரத்தின் பெருமையையும் அதை அறிவில்லாமல் உபயோகப்படுத்துவதாலுண்டாகும் அபாயங்களையும் அந்த சாஸ்திரத்துக்கே வரக்கூடிய விகாரங்களையும் முற்றிலும் அறிய வேண்டும். இத்தியாதி விஷயங்களை உத்தேசித்து ஒரு சபை ஏற்படுத்த வேண்டுமென்பது வெகுகாலமாக என்னுடைய விருப்பம். அந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்து நான் பார்க்கும்படி ஏற்பட்டதானது மகா- - -ஸ்ரீ பண்டிதர் அவர்களுடைய பாக்கியம். சங்கீத விஷயமாய் அவர்கள் எடுத்துக் கொள்ளுகிற சிரமத்துக்குச்
|