நாம் கவனிக்க வேண்டியதாவது, ஆதாரஷட்ஜமமும் மத்திமும், பஞ்சமமும் ச2வும் கொஞ்சம் குறைந்த ஒற்றுமையுடையவைகள். இந்த விதி மிகவும் முக்கியமானது. ரி, க முதலிய சுரங்களின் அளவையும், ஓசையின் அலைகளையும் கண்டுபிடிப்பதற்கு மிகவும் உபயோகமுள்ளது. முதல் விதியின்படி எந்த நீளமானதந்தியிலும் ஆதாரஷட்ஜம் பிறக்கும். அதிலிருந்து ஐந்தாவது சுரம் பஞ்சமமாகும். இந்தபஞ்சமம், ஷட்ஜமத்தோடு ஒற்றுமையுடையது. இது பின்னால் வரும் சுரங்களைக் கொடுக்கிறது. எப்படியென்றால் :- பஞ்சமத்தை ஆதாரஷட்ஜமமாக வைத்துக்கொள்வோம். அதிலிருந்து அதன் 5வது சுரம்மேல்ஸ்தாயியில் பஞ்சமமாகும். அது மேல்ஸ்தாயியின் ரி2 ஆகும். மேல் சொல்லிய கணக்கின்படி அதின் ஓசையின் அளவு 540. தந்தியின் அளவு 16 அங்குலமாகும். இப்போது ரிஷபத்தின் ஓசையின் அளவுகள் 540. அப்படியானால் கீழ்ஸ்தாயியின் ரிஷபத்தின் அளவு அதில் பாதியாகிய 270 ஆக இருக்கவேண்டும். 240 வைபரேஷனுக்கு 6 அங்குல தந்தியானால், 270 வைபரேஷனுக்கு 240x36/270=32 ஆகும். ஆகவே 10. ரிஷபம் 32 அங்குலத்தில் பேசுகிறது. அதினுடைய வைபரேஷன் 270. அல்லது இந்தத் தந்தியினுடைய நீளம் ஷட்ஜம் தந்தி நீளத்தின் 8/9 ஆகிறது. அதினுனுடய ஓசையின் அளவு 9/8 ஆகிறது. த 11. ரிஷபத்தின் தந்தியின் நீளம் 32 அங்குலம். இதை ஆதாரஷட்ஜமமாக வைத்துக்கொண்டால் இதன் 5வது சுரம் ப வாகிய தைவதமாகும். ஆகையினால் தைவதம் தந்தியின் நீளம் 32 அங்குலத்தில் 2/3. அதாவது தைவதம் ஷட்ஜம தந்தியில் அங்குலத்தில் வருகிறது. அதினுடைய ஓசையின் அலைகள் =3/2x270=405. க ஆகவே தைவதம் தந்தியின் 211/3 அங்குலத்தில் பேசுகிறது. அதினுடைய ஓசையின் அலைகள் 405. இப்போது தைவதத்தை ஆதார ஷட்ஜமமாக வைத்துக்கொள்வோம். அப்படியானால் இரண்டாவது ஸ்தாயியிலுள்ள க2 தைவதத்திலிருந்து 5வது சுரமாகும். அதின் அளவு 2/3x211/3=2/3x64/3=128/9=142/9 அதன் ஓசையின் அலைகள் =3/2x405=6071/2. இது மேல் ஸ்தாயியிலுள்ள காந்தாரத்திற்காக. ஆகையினால் 2வது விதியின்படி காந்தாரத்தினுடைய நீளம் 2x142/9=284/9. இது ஆதாரஷட்ஜமத்திற்கு மேல் வரும் காந்தாரம். இதின் ஓசையின் அலைகள் =1/2x6071/2=3033/4. இப்போது காந்தாரத்திற்குத் தந்தியின் நீளம் =284/9. அதினுடைய ஓசையின் அலைகள் 3033/4. நி காந்தாரத்தை ஆதார ஷட்ஜமமாக வைத்துக்கொள்ளுவோமேயானால் அதினுடைய 5வது சுரம் நி யாகும். ஆகையினால் நிஷாதத்தின் நீளம் =2/3x284/9=2/3x256/9=512/27= 1826/27. அப்படியானால் நிஷாதத்தின் ஓசையின் அலைகள் =3/2x3033/4=3/2x1215/4=3645/8=4553/8.
|