பக்கம் எண் :

302
தேவால் அவர்களின் 22 சுருதியின் முறை.

மறுபடியும்

12. காந்தாரத்தின் ஓசையின் அலைகள் 3033/4 க்குப்பதில் 300 என்று எடுத்துக்கொள்வோமேயானால் (அப்படி எடுத்துக்கொள்ளுகிறதற்கு நியாயமுமிருக்கிறது) முன் சொன்ன சூத்திரத்தின்படி அதினுடைய தந்தியின் நீளம் 284/5 ஆகும். முடிவாக காந்தாரம் நிற்கும் தந்தியின் அளவு 284/5, அதினுடைய ஓசையின் அலைகள் 300.

[இதற்கு முன் நம் சூத்திரத்தின்படி காந்தாரத்திற்கு 3033/4 ஓசையின் அலைகள் வருகின்றன. ஷட்ஜமத்திலிருந்து நிஷாதத்திற்கு 81/65 ஆக வருகிறது. காந்தாரம் இரண்டு ஸ்தாயிக்குள் 5வது தடவையில் 300 ஓசையின் அலைகளோடும் ஷட்ஜமத்திற்கு 5 : 4 போலவருகிறது. அதினுடைய சத்தம் ஷட்ஜமத்தோடு மிகவும் சேர்ந்து இருக்கிறது. வீணையின் 4 வது தந்தியில் இது ரொம்பத் தெளிவாகக் கேட்கிறது. சமஸ்கிருத வித்வான்கள் அதற்குப் பதில் இதை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதாவது 81 : 64க்குப் பதிலாக 5 : 4 எடுத்திருக்கிறார்கள். அவர்கள் இதைத் தங்கள் ஒத்துவரும் முறையோடு (Harmonic) ஒத்திருக்கிறதென்று சொல்லுகிறார்கள்.]

நி

13. காந்தாரத்தை நாம் ஷட்ஜமமாக வைத்துக்கொண்டோமானாால் நிஷாதம் அதினுடைய 5வது சுரமாகிறது. ஆகையினால் 300x3/2=450= நிஷாதத்தினுடைய ஓசையின் அலைகள்.

அதன் நீளம் 2/3x284/5=2/3x144/5=288/15=193/15=191/5

குறிப்பு. - மகா---ஸ்ரீ தேவால் அவர்கள் துவாவிம்சதி சுருதியை அறிவதற்காக வெகுநாள் மிகவும் சிரமப்பட்டிருக்கிறாரென்று தெரிகிறது. இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் இன்னவையென்று சங்கீதத்தையே தொழிலாகக்கொண்ட வித்துவான்களே விசாரிக்காதிருக்கையில், தாம் விசாரித்து அறிந்து, அறிந்தவற்றைத் தம் தேசத்தார் அறியப் புஸ்தக மூலமாகப் பிரசுரப்படுத்தியதற்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். தற்காலத்தில் வழங்கிவரும் சங்கீத சாஸ்திரங்களில் இராகவிபோதமும் அதன்பின் சங்கீத பாரிஜாதமும் பழமையான நூல்கள்தான். ஆனால் துவாவிம்சதி சுருதியைப் பற்றிச்சொல்லும் முறைப்படி இவர் செய்யாமல் இராகவிபோத முறைப்படிச் செய்திருக்கிறார். பாரிஜாதக்காரரின் ஷட்ஜம பஞ்சம முறைப்படி இவர் சுரங்களைப் படிப்படியாய்க் கண்டுபிடித்துக் கொண்டுபோவதில் 5-வது படியில் விலிருந்து நி கண்டுபிடிக்கும் இடத்தில் வுக்கு3033/4வைபரேஷனில் 300 ஆக எடுத்துக்கொள்ளச் சொல்லுகிறார். இதற்கு நியாயமிருக்கிறதென்றும் சொல்லுகிறார். மற்றவர் காதுக்கு இனிமையாயிருக்கிறதென்றதைத்தவிர வேறு நியாயம் எதுவும் சொல்ல வில்லை.

ஷட்ஜம பஞ்சம முறைப்படி 4-வது அடுக்கில் அதாவது (1) ச ப (2) ப ரி (3) ரி த (4) த க வில்33/4 வைபரேஷன் பேதப்படுமானால் மற்ற ஒவ்வொரு அடுக்கிலும் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடியே வந்திருக்க வேண்டும். இது தவிர மற்றவர்கள் 4/5 என்று வழங்குகிற Major Third க்கு ஒத்திருக்க வேண்டுமே யென்று நினைத்து 3033/4 இல் 33/4 ஐக் குறைத்து 240-க்கும் 300-க்கும் எப்படியோ அப்படி 4 : 5 இருக்கிறதென்று சொல்லுகிறார். அது தவிர 3033/4 ஐ காந்தாரத்திற்கு மேலுள்ள ஒரு சுருதியாகச் சொல்லுகிறார். 240 க்கு 3033/4 எப்படியோ அப்படி 64 க்கு 81 இருக்கிறதென்று கணக்குக் குறிக்கிறார். 64 க்கு 81 எப்படியோ என்ற கணக்கை வைத்து மேலே போவதற்குக் கடினமாகும் என்று குறைத்துக் கொண்டாரோ அல்லது மேற்றிசை சங்கீதத்தில் காணப்படும் Major Third க்குச் சரியாயிருக்க வேண்டுமென்று குறைத்துக் கொண்டாரோ தெரியவில்லை. ஆனால் சமஸ்கிருத வித்துவான்கள் காதுக்கு இனிமையாயிருக்கிறதென்று சொல்லுவதாகக் காரணம் சொல்லுகிறார். அப்படியே