நாலாவது. டிஸ்டிரிக்ட் ஜட்ஜ் E. கிளமெண்ட்ஸ் அவர்களின் சுருதியின் முறை. கிளமெண்ட்ஸ் (Mr. Clements) அவர்கள் இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகளைப்பற்றி இரண்டுவிதமான கணக்குகளைக் கொடுக்கிறார். அவற்றுள் ஒன்று பாதர், சாரங்க தேவர்களுடைய அபிப்பிராயப்படி 22 சுருதிகளைப்பற்றியது. மற்றொன்று K. B. தேவால் அவர்களின் அபிப்பிராயத்தைக் கலந்து தாம் சில சேர்த்துச் சொல்லுவது. இவ்விரண்டு அபிப்பிராயங்களிலும் சில முக்கியமான வசனங்களையும் கணக்குகளையும் இங்கே எடுத்துச்சொல்லி அதன்பின் சிலகுறிப்புகளைச் சொல்வது மிகவும் அவசியமாயிருக்கிறது. Introduction to the study of Indian Music, By E. Clements I. C. S. P. 2. “The present work deals with Hindustani music only; the author hopes to be able to show that a great part of it is directly traceable to the systems set forth in Bharata’s Natya-Shastra of about the fifth century A. D., and the Sangit Ratnakar of the thirteenth century. These are the most closely reasoned and critically worded of the clearly text books. It is reputed that Sarangdev the author of the Sangit Ratnakar was an inhabitant of Kashmir. From internal evidence one would conclude that the music he describes is that of Hindustan. However the pandits of Southern Indian endeavour to appropriate him to themselves. The present writer hopes to show that it is only by doing violence to his theory that it can be applied to Karnatic music. Roughly speaking, Hindustani music may be said to prevail in the north and west of India and the Deccan, while Karnatic music is confined to the south and east. Many scales are common to both but the general spirit of the two systems is apparent from the scales which are first taught to beginners; in the west, the scale is the same as the just major scale of Europe, in the south it is a chromatic scale (know in Hindustani music as the scale of the Raga Bhairava) with semitones between the first and second, third and fourth, fifth and sixth, seventh an eighth degrees.” “இந்நூல் இந்துஸ்தானி சங்கீதத்தைப்பற்றி மாத்திரம் சொல்லப்போகிறது. இதில் சொல்லப்போகிற அநேக சங்கதிகள், கி. பி. ஐந்தாவது நூற்றாண்டில் எழுதப்பட்ட பரதருடைய நாட்டிய சாஸ்திரம் என்னும் நூலில் சொல்லப்பட்ட முறைகளிலிருந்தும், கி. பி. பதின்மூன்றாவது நூற்றாண்டில் உண்டான சங்கீத ரத்னாகரம் என்னும் நூலிலிருந்தும் நேரே எழுதப்பட்டவை என்று இந்நூலாசிரியர் திருஷ்டாந்தப் படுத்துவார். இவ்விரண்டு நூல்களுந்தான் ஆதி சங்கீத நூல்களில் தர்க்க சாஸ்திர முறைகளுக்கிணங்க எழுதப்பட்டவை. சங்கீத ரத்னாகர நூலாசியரான சாரங்கதேவர் என்பவர் காஸ்மீர தேசத்தைச் சேர்ந்தவர் என்று ஒப்புக்கொள்ளப்படுகிறது. உள் நுழைந்து அந்த நூலை வாசித்தால் அவர் பேசும் சங்கீதம் இந்துஸ்தானி சங்கீதமென்று நன்றாய்த் தெரியும். ஆனாலும் தென்னிந்திய சங்கீத வித்துவான்கள் அவரைத் தங்களுக்குரியவரென்று கொண்டாடுகிறார்கள். தம்முடைய கொள்கை இந்துஸ்தானி சங்கீதத்துக்குரியவையேயல்லாமல் கர்நாடக சங்கீதத்திற்குரியவையல்ல என்று இந்நூலாசிரியர் திட்டமாய் ரூபகாரம் பண்ணப் போகிறார். மேம்பாடாய்ச் சொல்லவேண்டுமானால் இந்துஸ்தானி சங்கீதமானது இந்தியாவின் வடக்கு, மேற்கு, டக்கான் (Deccan) பாகங்களிலும், கர்நாடக சங்கீதம் தெற்கிலும், கிழக்கிலும் உபயோகிக்கப்பட்டு வருகிறது என்று சொல்லலாம். இரண்டு சங்கீதத்துக்கும் அநேக மூர்ச்சனைகள் பொதுவாயிருக்கின்றன. ஆனால் பிரதமத்தில் சிஷ்யர்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்படும் மூர்ச்சனைகளைக் கவனித்தால் இரண்டினுடைய அம்சங்களுக்கும்
|