பக்கம் எண் :

310
கிளமெண்ட்ஸ் அவர்களின் சுருதியின் முறை

Introduction to the study of Indian Music By E. Clements. P. 6, 7.

“He persevered for years at this investigation deriving assistance from many of the best singers that Indian could produce. As regards most of the notes in use, his conclusions, when referred back to ancient theory, may be summed up in the statement that two Srutis make a just semitone, three Srutis a minor-tone, and four Srutis a major-tone. In respect of these notes the accuracy of his conclusions can fairly be said to be beyond controversy.

“The author has through Mr. Deval’s courtesy, and with the help of Abdul Karim and other singers, been able to verify all the various scales mentioned in the following pages upon this instrument (Deval’s Sruti Harmonium).

“The following table describes the twenty-four notes in most frequent use, showing which of them are adopted in the Indian Harmonium, and their relationship with the ancient Srutis.”

“இந்தியாவில் பூர்வ வித்துவான்கள் என்றெண்ணப்பட்ட முதல் தரமான பாட்டுக்காரரின் உதவியைக்கொண்டு இந்த சுருதி ஆராய்ச்சியில் அவர் அநேக வருஷங்களைச் செலவழித்தார். ஆதியில் ஏற்பட்ட விதிகளின் முறைப்படிப் பார்த்தால், உபயோகத்திலிருக்கப்பட்ட சுரங்களைப்பற்றி அவர் சொல்வதானது தொகையாய்ப் பின் வருமாறாகும். அதாவது, இரண்டு சுருதிகள் கொண்டது ஒரு ஜஸ்ட் ஸெமிடோன் (just semitone, ) மூன்று சுருதிகள் கொண்டது ஒரு மைனர் டோன் (minor tone, ) நான்கு சுருதிகள் கொண்டது ஒரு மேஜர் டோன் (major tone) என்பதே, அந்த சுரங்களைப்பற்றி அவர் முடிவாய்ச் சொல்லுவதானது அநேகமாய்ப் பிழையில்லாமல் சரியாகவே யிருக்கிறது என்று எல்லாரும் ஒப்புக்கொள்வார்கள்.

“பின்வரும் பக்கங்களில் சொல்லப்பட்ட பல ஆரோகணங்களையும் இந்த வாத்தியத்தில் (சுருதி ஆர்மோனியம்) தேவால் என்பவருடைய தயவினாலும் அப்துல் கரீம் முதலிய பாட்டு வித்துவான்களின் உதவியைக்கொண்டும் சோதித்து நிச்சயித்திருக்கிறார்கள், அடியில் வரும் அட்டவணையானது அதிகமாய் உபயோகத்திலிருக்கப்பட்ட 24 சுருதிகள் எவை யென்றும் அவைகளில் எவைகள் இந்திய ஆர்மோனியத்தில் வருகிறதென்றும், அவைகளுக்கும் பழைய சுருதிகளுக்கும் இருக்கும் தாரதம்மியம் என்னவென்றும் காட்டுகிறது.”

மேலே கண்ட வாக்கியங்களில் தாம் இந்துஸ்தானி சங்கீத வித்துவான் அப்துல்கரீமைக் கொண்டும் தேவாலின் ஆராய்ச்சியில் கண்டுபிடித்த சுரங்களைக்கொண்டும் சுருதிகளைப்பற்றிப் பின் வரும் அட்டவணை தயார் செய்ததாகச் சொல்லுகிறார்.