ஆறாவது. III. சாரங்கர் சுருதி முறைப்படி தென்னிந்திய சங்கீதம் இருக்கிறதென்று சொல்லும் மூன்றாம் வகுப்பார்.
Retired Inspector of Schools மகா- - -ஸ்ரீ ராவ் பகதூர் C. நாகோஜி ராவ் அவர்களின் 22 சுருதியின் முறை. இந்திய சங்கீதத்தில் வழங்கி வரும் 22 சுருதிகளைப்பற்றி மகா- - -ஸ்ரீ நாகோஜி ராவ் அவர்களின் அபிப்பிராயம் இங்கிலீஷில் எழுதப்பட்டு தஞ்சாவூர் Training School 1st Assistant மகா- - -ஸ்ரீ சுந்தரமையர் B.A., L.T. அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு; தஞ்சை சங்கீத வித்தியா மகாஜன சங்கத்தின் 2-வது கான்பெரன்ஸில் படிக்கப்பட்டதுஇங்கு அவ்வியாசத்தின் சில முக்கிய பாகங்களைப் பார்ப்போம்.- சங்கீத வித்தியா மகாஜன சங்கம் 2-வது கான்பரென்ஸ் ரிப்போர்ட் பக்கம் 53-66. “நமது சங்கீதத்தில் ஒரு ஸ்தாயியில் 12 சுரஸ்தானங்கள் இருக்கின்றனவென்று சங்கீதவித்துவான்கள் சொல்லுகிறார்கள். இந்தப் பன்னிரண்டும், (ஸ), சுத்த ரிஷபம் (ரி), சதுர் சுருதி ரிஷபம் (ரி), அல்லது சுத்த காந்தாரம் (க), ஸாதாரண காந்தாரம் (க), அல்லது ஷட்சுருதி ரிஷபம் (ரி), அந்தரகாந்தாரம் (க), சுத்தமத்தியமம் (ம), பிரதமத்தியமம் (ம). ப, சுத்த தைவதம் (த,) சதுர்சுருதி தைவதம் (த), அல்லது சுத்தநிஷாதம் (நி), கைசிக நிஷாதம் (நி), அல்லது ஷட் சுருதி தைவதம் (த), காகலி நிஷாதம் (நி) ஆகிய இப்பன்னிரண்டுமாம். இதையே ஐரோப்பிய சங்கீத வித்துவான்கள் ஐந்து முழுச் சுரங்களும் ஏழு அரைச் சுரங்களும் ஆகப்பன்னிரண்டு சுரஸ்தானங்கள் என்று சொல்லுகிறார்கள். மேலே சொன்ன சுரபேதங்களைத்தவிர, இன்னும் சிறு பேதங்களுள்ள சுரங்களிருக்கின்றனவென்றும் அவை நமது சங்கீதத்தில் வருகின்றனவென்றும் சொல்லுகிறார்கள். சிலர், ஐரோப்பியரது சங்கீதத்தில் இல்லாத 1/4 சுரங்களும் இன்னும் சிறிய சுரங்களும் வருகின்றனவென்று எழுதுகிறார்கள். மேற்சொன்ன 12 சுரங்களில், ஒரேவகை ஆரோகண அவரோகண சுரங்களுள்ளவையாயிருந்து பாடினால் காதில் வேறுவேறு ராகங்களாகப் புலப்படும் ராகங்களைப்பற்றி கேட்டால், நமது சங்கீத வித்துவான்கள், அந்தந்த ராகங்களில் கமக பேதங்களிருப்பதால் வேறுவேறு ராகங்களைப்பற்றிக் ராகங்களாய் விடுகின்றனவென்று விவரமில்லாத ஒரு மறுமொழி சொல்லிவிடுகிறார்கள். நமது சாஸ்திர புஸ்தகங்களில், ஒருஸ்தாயியில் இருப்பது 22 சுரங்கள் அல்லது சுருதிகள் என்று வியக்தமாய் எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் காரணங்களையெல்லாம் கொண்டு நாம் முடிவு செய்யவேண்டிய தென்னவென்றால், நமது சங்கீதத்தில் இருப்பது 12 சுரங்கள் அல்ல, அதற்கு மேற்பட்டுத்தான் இருக்க வேண்டுமென்பதே. இனி நாம் அறியவேண்டியதென்னவென்றால் ஒரு ஸ்தாயியில் நிச்சயமாய் எத்தனை சுரங்கள் வருகின்றன என்பதும் அவை என்னவென்ன என்பதுமாம். நாம் அராய்ந்து பார்த்தமட்டில், நமது சங்கீதத்தில் ஒருஸ்தாயியில் நமது சாஸ்திரப் புஸ்தகங்களிற் சொல்லியது போல 22 சுரங்கள் இருக்கின்றனவென்று தெரிகிறது. மேலும் இந்த 22 சுரங்களைத்தவிர வேறு சுரங்கள் வரமுடியாதென்றும் தெரிகிறது.
|