பக்கம் எண் :

319
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-இரண்டாவது பாகம்-இருபத்திரண்டு சுருதிகள்.

ஐரோப்பிய சங்கீத வித்துவான்கள் ஒரு சுரம் என்பது அந்தச் சுரம் சத்திக்கும் ஆதாரமான வஸ்து எதுவோ அது நடுங்குவதால்தான் உண்டாகிறதென்று சொல்லுகிறார்கள். மேலும் குறிப்பிட்ட நேரமொன்றில் அந்த நடுங்கும் வஸ்து அதிகமான தடவை நடுங்கினால் மேல் சுரமும் குறைந்த தடவை நடுங்கினால் தாழ்ந்த சுரமும் உண்டாகும் என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். மேலும் என்பது எவ்வளவு வேபனங்களால் (Vibration-வேபனம் ) அல்லது ஓசையலைகளால் உண்டாகிறதோ அதைவிட இரட்டிப்பு மடங்கு வேபனங்களால் மேல் ஸ்தாயி உண்டாகிறதென்றும் கண்டறிந்திருக்கிறார்கள்.

அந்தக் கணக்குப்பிரகாரம் பார்த்ததில் ஒருஸ்தாயியில் பின் வருகிற 22 சுரங்களும் வரும்.

. . . 1

(4) . . . 2/25

(3) . . . 5/3

ரி(1) . . . 25/24

(1) . . . 4/3

(4) . . . 27/16

ரி(2) . . . 16/15

(2) . . . 27/20

நி(1) . . . 16/9

ரி(3) . . . 10/9

(3) . . . 45/32

நி(2) . . . 9/5

ரி(4) . . . 9/8

(4) . . . 36/25

நி(3) . . . 15/8

(1) . . . 32/27

. . . . 3/2

நி(4) . . . 48/25

(2) . . . 6/5

(1) . . . 25/16

. . . . 2

(3) . . . 5/4

(2) . . . 8/5

 

இந்த வரிசையில் ஒவ்வொரு சுரத்திற்கும் எதிரில் எழுதியிருக்கும் கணக்கு அந்தச் சுரம் (1) என்பதும் எத்தனைவேபனங்களால் ஆனதோ அதைவிட இத்தனை மடங்கு வேபனங்களால் ஆனது என்பதைக் குறிக்கிறது. என்பது 240 வேபனங்களால் ஆனால், ரி(1) (முதல் ரிஷபம்) 250 வேபனங்களால் உண்டாகிறது. ரி(2) (இரண்டாவது ரிஷபம்) 256 வேபனங்களால் ஆகிறது. அதேமாதிரி கணக்கிட்டுப் பார்த்துக்கொள்ளவும்.

இப்படி 22 சுரங்கள்தான் இருக்கின்றன. அதற்குமேல் இருக்கமுடியாது என்பதற்குக் காரணங்கள் இன்னவைதான் என்று முதலில் எழுதுகிறேன்.

ஐரோப்பியரது ஸங்கீதத்தில். ஸ, க(3), ப, ஸ1, ஆகிய இந்த நாலு ஸ்வரங்களும் சேர்ந்து சப்தித்தால் காதுக்குச் சுகத்தைத் தருகின்றன. இதை நாலு ஸ்வரங்களுக்கும் "சேரும் ஸ்வரங்கள்" என்று பெயர் வழங்குகிறார்கள். இப்படி சேர்ந்து ஸ்வரங்கள் சப்திப்பதினால் உண்டாகும் சுகத்துக்கு ஹார்மநி (harmony) என்று பெயர். ஐரோப்பியரது ஸங்கீதம் முழுவதும் இப்படி ஹார்மநியே நிறைந்ததாம்.

இப்படி சுகம் உண்டாவதற்குக் காரணம் உண்டு. அதென்னவென்றால், ஒரு தந்திவாத்தியத்தில் ஸ என்னும் சப்தம் உண்டாகும்படி ஒரு தந்தியை மீட்டினால், அதனுடனே அதேகாலத்தில் க(3), ப, ஸ1 ஆகிய இம்மூன்று ஸ்வரங்களும் உண்டாகி நம் காதில் விழுகின்றன. (மேலும் ஒரு பிடில் தந்தியில் வில்லைப் போட்டுக்கொண்டு இடதுகை விரலால் தந்தியைத் தொட்டதும் தொடாததுமாக விரலை மேலே இழுத்துக் கொண்டே போனால் ஸ, க(3), ப, ஸ1 இந்த நாலு ஸ்வரங்கள் மட்டில் நம் காதில் விழுகின்றனவேயொழிய வேறு ஸ்வரங்கள் நம்காதில் விழுகிறதில்லை.) எனவே, நமது காது ஸ என்பது சப்திக்க கேட்டவுடனே க(3), ப, ஸ1 இந்த ஸ்வரங்களையும் கேட்க சித்தமாகிவிடுகிறது. அந்த ஸ்வரங்கள் அந்தசமயத்தில் காதில் விழுந்தால் சுகத்தை உண்டாக்குகின்றன, இந்த சுகத்துக்கு ஹார்மநி என்று பெயர். இந்த ஸ்வரங்களுக்கு ஸ்வபாவத்தில் சேரும் ஸ்வரங்கள் (chord of nature) கார்ட் ஆப் நேச்சர் என்று பெயர்.

அதேமாதிரியாய், இந்த ஸ்வரங்கள் ஒன்றன்பின்னொன்றாய் அநுக்கிரமமாக வந்தால் அந்த சுகத்துக்கு மெலடி (melody) அல்லது (நமது ஸங்கீதத்தில் உள்ள) ராகம் என்று பெயர் வழக்கத்தில் இருக்கிறது. அப்படி சுகம் தருவதற்குக் காரணமும், முன் சொன்னமாதிரி இந்த ஸ்வரங்கள் ஒன்றோடொன்று சேர்ந்து வந்தால் ஹார்மநியைத் தருவதுதான்.