ஸ, க(3), ப, ஸ1 என்னும் நாலு ஸ்வரங்களையும் எடுத்துக்கொண்டால் ஸ1 என்னும் ஸ்வரத்திற்கும் ஸ என்னும் ஸ்வரத்திற்கும் இடைவெளி 2 ஆகிறது. அதாவது ஸ1 என்பது ஸ-வை விட இரண்டு மடங்கு வேபநங்களால் ஆனது. (இந்த இரண்டு ஸ்வரமும் அதிக ஒற்றுமையுள்ளனவாதலால் சேர்ந்துவந்தால் நல்ல ஹார்மநியைத் தருவதனாலும், ஒன்றோடொன்று நன்றாய் இழைந்துகொண்டு தனித்தனி ஸ்வரங்களாகக் காதுக்குப் புலப்படாதிருக்கிறதனாலும் இந்த இரண்டு ஸ்வரங்களுக்கும் ஒரே பெயர் வைத்திருக்கிறார்கள்) ஆகவே நல்ல இடைவெளிகளில் 2-ம் ஒன்றாம். பிறகு, ப என்பதற்கும் ஸ என்பதற்கும் இடைவெளி 3/2. அதாவது ப, ஸ-வைவிட 3/2 அல்லது 1(1/2) மடங்கு வேபநங்களால் ஆனது. இந்த இரண்டு ஸ்வரங்களும் நன்றாய்ச் சேரக்கூடிய ஸ்வரங்கள்தான். ஆனால் ஸ1-வும் ஸ-வும் எவ்வளவு நன்றாய்ச் சேருமோ அவ்வளவு நன்றாய் அவைகள் சேருகிறதில்லை. ஆகையினால் 3/2 என்பது இன்னொரு நல்ல இடைவெளியாகிறது. (இந்த மாதிரி, ஸ, ப, ஸ1 இம்மூன்றும் ஒன்றோடொன்று நன்றாய்ச் சேர்வது பற்றி, வீணை முதலிய வாத்தியங்களில் ஸ, ப, ஸ1 என்று சுருதி வைத்துக் கொள்ளுகிறார்கள்.) இதேமாதிரி கணக்கிட்டுப் பார்த்தால் ஸ-வுக்கும் ப-வுக்கும் இடைவெளி 4/3 ஆகிறது. அது பின் வருமாறு :- ப வூ 4/3 = ஸ1 3/2 வூ 4/3 = 2 க(3)-வுக்கும் ஸ-வுக்கும் இடைவெளி 5/4 ஆகிறது. ப -வுக்கும் க(3)-வுக்கும் இடைவெளி 6/5 ஆகிறது. அது பின் வருமாறு :- க(3) வூ 6/5 = ப 5/4 வூ 6/5 = 3/2 மேலே சொன்னதிலிருந்து நாம் முழுதும் அறிந்துகொண்டதென்னவென்றால் :- 2 அல்லது 2/1, 3/2, 4/3, 5/4, 6/5. இந்த இடைவெளிகள் நல்ல இடைவெளிகள். இந்த இடைவெளிகளுள்ள ஸ்வரங்கள் அநுக்கிரமமாக வந்தால் ராகம் நன்றாய் உண்டாகும் என்பதுதான். மேலும், இதைவிட வேறு சில சிறிய இடைவெளிகளுள் ஸ்வரங்கள் சேர்ந்தாரும் சுகம் தருமென்று ஐரோப்பிய ஸங்கீத வித்வான்கள் அபிப்பிராயம் கொள்ளுகிறார்கள். அவைகளாவன :- (1) ஸ-வுக்கு 9/8 மடங்கு வேபநங்களால் உண்டாகும் மேஜர் டோன் (major tone) அல்லது பெரியஸ்வரம். (2) ஸ-வுக்கு 10/9 மடங்கு வேபநங்களால் உண்டாகும் மைநர் டோன் (minor tone) அல்லது சின்ன ஸ்வரம். (3) ஸ-வுக்கு 16/15 மடங்கு வேபநங்களால் உண்டாகும் மேஜர் ஸெமிடோன் (major semitone) அல்லது பெரிய அரை ஸ்வரம். (4) ஸ-வுக்கு 25/24 மடங்கு வேபநங்களால் உண்டாகும் மைநர் ஸெமிடோன் (minor semitone) அல்லது சின்ன அரை ஸ்வரம் ஆகிய இவைகளாம். அந்தக் காரணத்தைக்கொண்டே மேலே சொன்ன இடைவெளிகளுள்ள ஸ்வரங்கள் அநுக்கிரமமாக வந்தாரும் மெலடி (melody) அல்லது ராகம் என்னும் சுகத்தைத்தரும் என்றும் நாம் அறிந்துகொள்ளலாம். ஏனெனில், சில ஸ்வரங்கள் சேர்ந்தால் ஹார்மநி உண்டாகும் பக்ஷத்தில் அவைகள் அநுக்கிரமமாய் வந்தால் மெலடி உண்டாகும் என்று ஊகிக்லாமல்லவா ? இதிலிருந்து நாம் காண்பது என்னவென்றால் (25/24),(16/15),(10/9),(9/8),(6/3),(5/4) இந்த அடைவெளிகளுள்ள ஸ்வரங்கள் வந்தால் சுகத்தைத்தரும் என்பதே.
|