பக்கம் எண் :

321
கருணாமிர்தசாகரம்-முதல் புஸ்தகம்-இரண்டாவது பாகம்-இருபத்திரண்டு சுருதிகள்.

ஸ, ப, ஸ1 இம்மூன்று ஸ்வரங்களும் சேர்ந்து வந்தால் ஹார்மநி இருக்கிறதென்று நமது வித்வான்கள் யாரும் ஒப்புக்கொள்ளுகிறபடியால் அவைகளுள்ள இடைவெளிகளும் இடைவெளிகளாகும் அவை (4/3),(3/2), 2 ஆக இம் மூன்றுமாம்.

1. நாம் இனி கவனிக்கவேண்டிய தென்னவென்றால், என்பதற்கும் (3) என்பதற்கும் இடையில் சேரும்படியான இடைவெளிகளுள்ள எந்த எந்த ஸ்வரங்கள் வரலாம் என்று பார்க்கவேண்டியதுதான். அதேமாதிரி (3) வுக்கும் வுக்கும். வுக்கும் 1 வுக்கும் இடையில் எந்த ஸ்வரங்கள் வரலாம் என்று பார்க்கவேண்டும்.

முதலில் என்பதற்கும் (3) வுக்கும் இடையில் ரி(1) என்னும் ஸ்வரம் வந்தால் நன்றாய்ச்சேரும். ஏனென்றால் ரி(1) க்கும் வுக்கும் இடைவெளி (25/24)(3) வுக்கும் ரி(1) க்கும் இடைவெளி (6/5) காரணம் :-

25/24 வூ 6/5 = 5/4

ரி(1) வூ 6/5 = (3).

அதாவது ரி(1) யைச் சுருதியாக வைத்துக்கொண்டால் (3) என்பது அந்த சுருதிக்கு ஸாதாரண காந்தாரமாகப் பேசும். பிறது, ரி(3) என்னும் ஸ்வரமும் வுக்கும் இடையில் வந்தால் இரண்டுடனும் நன்றாய்ச் சேரும். ஏனென்றால் ரி(3) க்கும் வுக்கும் இடைவெளி 10/9. (3) வுக்கும் ரி(3) க்கும் இடைவெளி 9/8 இதற்குக் காரணம் :-

10/9 வூ 9/8 = 5/4

ரி (3) வூ 9/8 = (3).

அதாவது ரி(3) யைச் சுருதியாய் வைத்துக்கொண்டால், (3) அதற்கு ரி(4) ஆகப் பேசும்.

பிறகு ரி(4), ஸ வுக்கும் (3) வுக்கும் இடையில் வந்தால் சுகத்தைத்தரும். ஏனென்றால் ரி(4) க்கும் ஸ வுக்கும் இடைவெளி 9/8. (3) வுக்கும் ரி(4) க்கும் இடைவெளி 10/9 இதற்குக் காரணம் :-

8/9 வூ 10/9 = 5/4

ரி (4) வூ 10/9 = (3).

அதாவது ரி(4) என்பதைச் சுருதியாய் வைத்துக்கொண்டால் அதற்கு (3). ரி(3) ஆய்ப் பேசம்.

6/5, 9/8. 10/9 இந்த இடைவெளிகள் மேலே எழுதியிருக்கும் இடைவெளிகளுள் ஒன்றாகும் என்கிறதையும் காண்க.

(2) (அல்லது, சில சிலராகங்களில் வரும் ஷட்சுருதி ரிஷபம்) ஸ வுக்கும் (3) வுக்கும் நடுவில் வந்தால் சேர்ந்துவரும். (2) வுக்கும் வுக்கும் இடைவெளி 6/5. (3) வுக்கும் (2) வுக்கும் இடைவெளி 25/24. இதற்குக் காரணம் என்ன வென்றால் :-

6/5 வூ 25/24 = 5/4

(2) வூ 25/24 = (3).

அதாவது (2) வைச் சுருதியாய் வைத்துக்கொண்டால் (3) அதற்கு ரி(1) ஆய்ப் பேசும்.

ஆகவே, பின் வரும் ஸ்வர வரிசைகள் சேரும்படியானவை.

ஸ ரி(1) க(3)

ஸ ரி(3) க(3)

ஸ ரி(4) க(3)

ஸ [ரி(6) = க(2)] க(3)

இதே மாதிரி கணக்கிட்டுப் பார்த்தால். (3) வுக்கும் வுக்கும் இடையில் எந்தெந்த ஸ்வரங்கள் வரும் என்று பார்ப்போம்.