63. | வலிவிற்கெல்லை வன்கைக்கிளையே - இதனால் முன் முறைப்படிஇரண்டு ஸ்தாயியில் மந்தர ஸ்தாயியாகிய ச, ரி, க, ம என்பது போக ம, ப, த, நி, ச, ரி, க, ம என்ற மத்திய ஸ்தாயியும் போக மீதியாய் நிற்கும் ப, த, நி என்பது ச, ரி, க என்ற தார ஸ்தாயி ஆகிறது. இதனால் தாரஸ்தாயிக்கு முடிந்த சுரம் க என்று சொல்வதற்காக வலிவிற்கெல்லை வன்கைக்கிளையே என்று சொல்கிறோம். |
68. | அலகு - குறிப்பிட்ட ஒரு எண் அல்லது மாத்திரை. இங்கேகுரல் (ச) இரண்டு இராசியில் நாலு அலகாகவும், துத்தம் (ரி) இரண்டு இராசியில் நாலு அலகாகவும் உழை (ம) ஒரு இராசியில் இரண்டு அலகாகவும், இளி (ப) இரண்டு இராசியில் நாலு அலகாகவும் தாரம் ‘நி) இரண்டு இராசியில் நாலு அலகாகவும் வருவதைக் கவனிக்கும் பொழுது இராசிகள் ஒவ்வொன்றும் இரண்டு இரண்டு எண்களாக அல்லது அலகுகளாகக் கணக்கிடப்பட்டிருக்கிற தென்றும் இம்முறையில் பன்னிரண்டு இராசிகளும் இருபத்து நான்கு அலகுகளாக நிற்கின்றனவென்றும் ச-க, ச-ப வாக எவ்வேழு இராசியாக 12 சுரங்களும் வருவதினால் 7x2 = 14 அலகுகளாக ச-ப வருகிறதென்றும் ச-ம, ச-ம வாக 5, 5 இராசிகள் 10 அலகுகளுடையவைகளாயிருக்கின்றனவென்றும் தெளிவாகத் தெரிகிறது. விளரிகைக்கிளையில் மூன்று மூன்று அலகாக வருவதை நாலு, நாலு அலகுகளாக வரும் அதாவது இரண்டு இராசியில் வரும் நாலு அலகில் ஒரு அலகு குறைத்து மூன்று அலகுடன் கமகமாய்ப் பிடிக்கவேண்டும் என்பது தெரிகிறது. |