பக்கம் எண் :

50

92.தும்புருயாழ் - 9 தந்திகள் பெற்றது
93.கீசகயாழ் - 100 தந்திகள் வாய்ந்தது.
94.மருத்துவயாழ் - ஒரு தந்தி உடையது; மற்றும் விவரம்கருணாமிர்த சாகரம் மூன்றாம் பாகம் 589 ஆம் பக்கத்தில் காண்க. 
95.

கலைத்தொழில் எட்டு - பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல்,தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு. மற்றும் விவரம் கருணாமிர்த சாகரம் மூன்றாம் பாகம் 591 ஆம் பக்கத்தில் காண்க.

96.

செம்பகை - எடுத்துக்கொண்ட இராகத்திற்கு இன்பமாய்ப்பொருந்தாத ஓசை.

97.

ஆர்ப்பு - நரம்பின் முழக்கம் தன் அளவிற்கு மிஞ்சி அதிக ஓசையுடையதாயிருத்தல்.

98.

அதிர்வு - சுரம் தொடர்ந்து ஒரே சுருதியாய் நிற்காமல் சிதறிஇனிமையற்று உச்சரித்தல்.

99.

கூடம் - வாயினாற் சொல்லப்படும்பொழுது துவங்கின சுரத்திற்குஇசை பொருந்தாமல் மழுங்கி உச்சரிக்கப்படும் பகைச் சுரங்கள். நீரிலே நின்று அழுகின மரம், நெருப்புப்பட்ட மரம், இடி விழுந்த மரம், வேர்புழுவினால் பட்ட மரங்களினால் இத்தோஷங்க ளுண்டாகுமென்று சொல்லப்படுகிறது.

100.

குழல் - வங்கியம் ; இது மூங்கில், சந்தனம், செங்காலி, கருங்காலிஎன்னும் மரங்களாலும் வெண்கலத்தினாலும் செய்யப்படுவது. தற்காலத்தில் இதை புல்லாங்குழல் என்று வழங்குகிறோம். மற்றும் விவரம் கருணாமிர்த சாகரம் மூன்றாம் பாகம் 594-ஆம் பக்கத்தில் காண்க.

101.

தண்ணுமை - தாழ்ந்த குரலினை ஒரு பக்கமுடையதாய்மறுபக்கத்தில் அதற்கு இணையான பஞ்சம சுரத்தின் ஓசையுடையதாய்ச் செய்யப்பட்ட வாத்தியம் மற்றைய தோற் கருவிகள் பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண்விடு, தூம்பு, நிசாளம், சிறுபறை, துடுமை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்பறை.

102.

முழவு - முழக்கப்படும் கருவிகள் அல்லது கொட்டுங்கருவிகள்;அகமுழவு, அகப்புற முழவு, புறமுழவு, புறப்புறமுழவு, பண்ணமைமுழவு, நாண்முழவு, காலைமுழவு என எழுவகையாம். இவற்றின் மற்றும் விவரம் கருணாமிர்த சாகரம் மூன்றாம் பாகம் 608-ஆம் பக்கத்தில் காண்க.

103.

பண் - பெருந்தானமெட்டினும் கிரியைகளெட்டாலும் பண்ணிப்படுப்பது.

104.

பெருந் தானமெட்டு - நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, அண்ணாக்கு,உதடு, பல், தலை.

105.

கிரிகை எட்டு - எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி,உருட்டு, தாக்கு

106.நிலம் - வர்ணம் அல்லது எழுத்து.