பக்கம் எண் :

51

107.

கலம் - யாழ்.

108.கண்டம் - மிடற்றுப் பாடல் அல்லது வாய்ப்பாட்டு.
109.பாணி - தாளம் அது நாற்பத்தொரு வகைப்படும்.
110.

பாணியின் அங்கங்கள் - கொட்டு அரை மாத்திரை; அசை ஒருமாத்திரை; தூக்கு இரண்டு மாத்திரை; அளவு மூன்று மாத்திரை.

111.

சுவை ஒன்பது - வீரச்சுவை, பயச்சுவை, இழிப்புச்சுவை,அற்புதச்சுவை, இன்பச் சுவை, அவலச்சுவை, நகைச்சுவை, நடுநிலைச்சுவை, உருத்திரச்சுவை. மற்றும் விவரம் கருணாமிர்த சாகரம் மூன்றாம்பாகம் 606 - 607ஆம் பக்கம் வரை காண்க.

112.

அவிநயம் - பாவம். வெகுண்டோணவிநயம், ஐயமுற்றோன்விநயம்,சோம்பினானவிநயம், களித்தோனவிநயம், உவந்தோனவிநயம், அழுக்காறுடையோனவிநயம், இன்பமுற்றோனவிநயம், தெய்வமுற்றோனவிநயம், ஞஞ்ஞையுற்றோனவிநயம், உடன்பட்டோனவிநயம், உறங்கினோனவிநயம், பனித்தலைப்பட்டோனவிநயம், செத்தோனவிநயம், மழை பெய்யப்பட்டோனவிநயம், பனித்தலைப்பட்டோனவிநயம், வெயிற்றலைப்பட்டோனவிநயம், நாணமுற்றோனவிநயம், வருத்தமுன்றோனவிநயம், கண்ணோவுற்றோனவிநயம், தலைநோவிற்றோனவிநயம், அழற்றிறம்பட்டோனவிநயம், சீதமுற்றோனவிநயம், வெப்பமுற்றோனவிநயம், நஞ்சுண்டோனவிநயம் எனவிவை இருபத்துநான்கு வகைப்படும். இவற்றின் விவரம் கருணாமிர்த சாகரம் மூன்றாம் பாகம் 608 பக்கமுதல் 613ஆம் பக்கம் வரை காண்க.

113,

குடமுதல் - இது வட்டப்பாலை வகுக்கச் சொல்லும் முறையில்வருகிறது; ஒன்றுக்குள் ஒன்று அடங்கும்படியாக மூன்று வட்டங்கள் அமைத்து, அவ்வட்டததைப் பன்னிரு இராசிகளாகப் பிரித்து, அதன் மேற்கோட்டில், மேடம் இடபம் மிதுனம் கற்கடகம் சிங்கம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் என்னும் பன்னிரு இராசிகளைக் குறித்து, அதன் இரண்டாவது உட்கோட்டில் வலமுறையாய்க் குரலிளியாய் (ச-ப முறையில்) வரும் சுரங்களையும் அவற்றின் அலகுகளையும், மூன்றாவது உட்கோட்டில் உழை குரலாய் (ம-ச வாய்) இடமுறையாய் வரும் சுரங்களையும் அவைகளுக்குரிய அலகுகளையும் சொல்லியிருக்கிறார்கள். இம்முறை இராசி வட்டத்தில் ச-ப ஏழு ஏழாகவும் ம-ச ஐந்து ஐந்தாகவும் வரும் பன்னிரு சுரங்களும் ஒரே சம அளவுடையவைகளாய் இருக்கின்றன என்றறிவதற்கும், பொருத்த சுரங்கள் கண்டு பிடிப்பதற்கும் விளரி கைக்கிளையில் ஒவ்வொரு அலகு குறைந்து வரும் நால்வகை யாழின் 16 சாதிப் பண்களை அறிவதற்கும் மிக அனுகூலமா யிருக்கிறது. இராசி வட்டத்தில் குறித்து வழங்கியதால் இதற்கு வட்டப்பாலை என்று பெயர் வழங்கலாயிற்று.

114.

இளங்கோவடிகள் - முத்தமிழையும் வளர்த்த மூவேந்தராகிய சேர,சோழ பாண்டியரில் சேரவம்சத்தைச் சேர்ந்தவர். பாண்டிய சோழ ராஜ்யங்களின் மேல் எல்லையாயுள்ள மலைநாட்டை ஆண்ட சேரலாதன் என்னும் அரசனது இளைய புதல்வர்.