பக்கம் எண் :

53

Ancient India by S. Krishnasamy Iyengar, M. A. Page, 150.

“Kulottunga’s age was also one of great religious and literary revival. In his reign flourished the Vaishnava reformer, Ramanuja, who had to betake himself to Mysore to avoid the displeasure of Kulottunga. Jayamkondan was his Kavichakravarti and possibly the commentator of the Silappadikaram. Adiyarkkunallar, did not live much later, as he quotes twice from Jayamkondan, once acknowledging the authority by name and another time by the simple mention of Kavichakravarti. This would have been far from clear, if made much after Jayamkondan’s time as there were other Kavichakravartis in the interim.”

“குலோத்துங்கன் அரசாண்ட காலமானது பெரிய மதசீர்திருத்தங்களும் நூல் விஷயமான சீர்திருத்தங்களும் உண்டான காலம். வைஷ்ணவ மதத்தைச் சீர்திருத்திய ராமானுஜர் இந்தக்காலத்தில் இருந்தவர். குலோத்துங்கனைப்பகைத்துக் கொண்டதால் இவர் மைசூருககு ஓடிப்போக வேண்டியதாயிற்று. அவனுடைய கவிச்சக்கரவர்த்தியின் பெயர் ஜெயங்கொண்டான். சிலப்பதிகார உரை யெழுதினவர் இவராயிருக்கலாம். அடியார்க்கு நல்லார் இவருடைய உரையிலிருந்து இரண்டு மேற்கோள்கள் சொல்லுகிறபடியால் இவருக்குச் சற்றுப் பிந்தின காலத்தில் இருந்திருக்க வேண்டியது. இந்த இரண்டு மேற்கோள்களில் ஒன்றில் உரையாசிரியர் ஜெயங்கொண்டானுடைய பெயரை ஆதாரமாகச் சொல்லுகிறார். மற்றொன்றில் அவரைக் “கவிச்சக்கரவர்த்தி” என்று மாத்திரம் அழைக்கிறார். ஜெயங்கொண்டானுக்கு வெகு காலத்திற்குப்பின் இப்படிச் சொல்லியிருந்தால் இந்த விஷயம் தெளிவாயிராது. ஏனென்றால் அந்தக்காலத்திற்கும் அடியார்க்கு நல்லார் காலத்திற்கும் நடுவில் அநேகம் கவிச்சக்கரவர்த்திகள் இருந்தார்களே.”