பக்கம் எண் :

54

கருணாமிர்த சாகரப் பாயிரம்.

இப்புத்தகத்தைப் பார்வையிட்ட சில கனவான்களின் அபிப்பிராயம்.

திருக்கோவலூர் ஆதீனம்
திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்து ஸ்ரீலஸ்ரீ
சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்
திருவாய் மலர்ந்தருளிய வாழ்த்துரை.

முழுமுதற் கடவுள் படைத்த இவ்வுலகில் மக்களாற் பேசப்படும் மொழிகள் பல உள்ளன. இவற்றுள் தமிழ் ஒன்று. இது தொன்மையது. செவ்வியது, இனியது, விரிந்தது, குறைவற்றது. எம்மொழியும் இனிமையுடையதெனினும் இதுபோன்று எம்மொழியும் மிகு இனிமை தரத்தக்கதன்று. இம்மொழியே மிகு இனிமையைத் தரத்தக்கது என்பது தோன்ற இனிமை எனப்பொருள்படும் தமிழ் என்பதே இம்மொழியின் பெயராயது.

இங்ஙனம் மேம்பாடுபெற்ற தமிழ் இயல் இசை முதலிய பாழுபாடுடையது. இவற்றுள் இசை இலக்கணவரம்புடையது. இவ்விசையிற்றேர்ந்த தமிழர் தாம் கற்றுத் தேர்ந்த தமிழிசையைக் கருணையினாற் பிற தேயத்தார்க்கும் அறிவுறுத்தி வந்தனர். கற்றவர் பலரும் தந்தந்தேயங்கட்குச் சென்று அபிமானத்தானே அறிவிக்க அறிவிக்க, பற்பல தேயங்களிற்றமிழிசை உணர்த்தினர், அறிவு நிலையானும் இடவேறுபாட்டானும் சிறிது மாறுபாடுடன் வழங்க நேர்ந்தது.

தமிழுலகத்திற் சில பாகங்கடல்கொள்ளக் கிடந்தமையானும் பிறதேயத்தார் படையெழுச்சியானும் தமிழிசை உணர்ந்தாரும் இசை இலக்கண நூலும் அழியுங்கால நேர்ந்தது. தம் பழைய பொருளை வேற்று நாட்டிற்கு அனுப்பிச் சில மாறுபாடுடனே திரும்பியபோது முன்னையினும் அப்பொருளை மிக விரும்புவது காலப்பிறழ்ச்சியின் இயற்கையன்றோ. தமிழிசை தென்னாட்டினின்றும் பல நாடு சென்று மாறுபாடுடன் இந்நாடு வந்தபோது இந்நாட்டிலுள்ளார் தம் பொருளே திரும்பி வந்துளது என்றறியாதார் போன்றவராகி அருகி வழங்கிவந்த இசையினும் வந்ததை மதித்துக் கற்பான் புகுந்தார் சிலர்.

பலர் வேற்று நாட்டினின்று இத்தென்னாட்டிற் குடியேறித் தாங்கள் புகுவதாகக் கொண்டுவந்த தென்றே கருதி இந்நாட்டிற் பரப்பிவந்தனர், புதுவதின்பாற்பட்ட மோகம் பழைமையதை மறந்துவிடச் செய்தது. பிறகு தமிழிசை இலக்கணம் நூலிற் காணக்கிடந்தது. மிக அருகித் தமழிசையிற் பழகுவார் வாழ்ந்து வந்தனர், வருகின்றனர். இத்தன்மைத்தாம் நிலையைத் தமிழிசை வல்லாருட்சிலர் உணர்ந்து “பண்டைய