பதினோராவது பிரிவில் பம்பாய், கல்கத்தா, பூனா முதலிய வடநாட்டில் அநேக பண்டிதர்கள் சேர்ந்து சுருதி விசாரணை செய்து நூதன மார்க்கத்தில் செல்லாமல் ‘பழைய சொக்கே போது’ மென்பது போலத் தங்கள் பழைய சம்பிரதாயப்படி பாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுகிறார். அதுவுமின்றி தங்கள் தேசத்து சங்கீதத்தைக் காட்டிலும் தக்ஷண தேசமாகிய நமது தேசத்துக் கர்நாடக சங்கீதத்தை மிகவும் சிலாகித்துக் கொண்டாடுகிறார்கள் என்றும் அவர்கள் எழுதிய கிரந்தங்களில் பற்பல இடங்களில் இதைக் காணலாம் என்றும் சொல்லுகிறார். வடதேசத்திலுள்ள கனவான்கள் பலர் அங்கங்கே சபைகளாகக் கூடி இந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதி விசாரணை செய்து தங்கள் அபிப்பிராயத்தை நிலை நாட்ட மிகுந்த பிரயாசைப்பட்டார்களென்றும் பிரயாசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்களென்றும் நாம் அறிவோம். அவர்களில் (1) சகஸ்திர புத்தி, (2) ராஜா சுரேந்திரமோகன் தாகோர், (3) Mr. K. B. தேவால், (4) Mr. E. கிளமென்ட்ஸ் (5) பண்டார்க்கார் போன்ற கனவான்கள் செய்திருக்கும் சுருதி நிச்சயத்தை இரண்டாம் பாகத்தில் முதல் முதலாகக் காட்டியிருக்கிறேன். அதன்படி கவனிப்போமானால் மிகுந்த பேதமுடைய வைகளாகக் காணப்படுகின்றன. அதைத் தவிர தென்னிந்தியாவில் சங்கீத விஷயமாய் மிக சிரத்தையெடுத்துக் கொண்ட மகா- - -ஸ்ரீ சின்னசாமி முதலியார் M. A. அவர்கள் சுருதிகளைச் சொல்ல வந்த இடத்தில் சிக்கு முக்கலான இந்த விஷயத்தில் நாம் இப்போது தலையிடக் கூடாதென்று சொல்லி 12 சுரங்களை நிச்சயம் பண்ணியிருக்கிறார். சுருதிகளைப் பற்றி நிச்சயம் சொல்ல முடியாமையினால் பழைய சொக்கே சொக்கு என்று பாடிக் கொண்டிருப்பது போல நாமும் அப்படியே சுருதி விசாரிக்காமல் பாடிக் கொண்டிருக்க வேண்டுமென்றும் சாரங்கர் நூற்படி 22 சுருதிகள் தான் உண்டென்று சொல்லிக் கொண்டிருப்போமென்றும் சொல்லுகிறதாகத் தெரிகிறது. மேலும் ஆரிய சங்கீதமென்ற ஒரு சங்கீதமிருப்பதாக இது வரையும் நாம் கேட்டதுமில்லை நூல்களில் பார்த்ததுமில்லை; ஆரியர்கள் பாடிக் கொண்டிருப்பதினால் மாத்திரம் ஆரிய சங்கீதமென்றும் சமஸ்கிருதத்தில் எழுதியதெல்லாம் ஆரியருக்குச் சொந்ததென்றும் சொல்வது பொருந்தாது என்று நினைக்கிறேன். மேற்கண்ட வசனங்களைக் கவனிக்கையில் ஆரிய சங்கீதத்திலும் ஆரிய பாஷையிலும் தேர்ச்சியுள்ள வடநாட்டார் இந்துஸ்தானி முறைப்படி கானம் செய்கிறார்களென்றும் கர்நாடக சங்கீதத்தை மிகவும் மேலானதென்று கொண்டாடுகிறார்கள் என்றும் காண்போம். இதன் முன் முதல் பாகத்தில் இவைகளைப் பற்றி விரிவாகச் சொல்லியிருக்கிறோம். ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வரவேண்டுமென்று இதன் முன் சொல்லிய பல கனவான்கள் சுருதி முறையில் அவைகள் சாரங்கர் முறைப்படியல்லவென்றும் கர்நாடக சங்கீதத்திற்குப் பொருத்தமுடையவைகளல்ல என்றும் பல காரணங்கள் சொல்லியிருக்கிறோம். ச-ப முறையாய் சுரங்கள் யாவும் வரவேண்டும் என்ற விதிப்படிக் கிடைக்கும் சுரங்களுக்கும் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வரவேண்டுமென்று சாரங்கர் சொன்ன முறைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வரவேண்டுமென்று எவர் சொல்லியிருந்தாலும் அது சரியானதாயிருக்க மாட்டாரென்று நான் நினைக்கிறேன். அவைகள் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் வழங்கிய பூர்வ தமிழ் நாட்டின் சங்கீத சுருதி முறைகளை அறிந்து கொள்ளாமல் தவறுதலாய் பிற்காலத்தில் எழுதப்பட்டவையென்று தெளிவாகக் காண்போம். இப்படி எழுதியவைகள் சமஸ்கிருதம் ஒன்றில் மாத்திரம் எழுதியிருப்பதைக் கொண்டு அப்பாஷையில் எழுதப்பட்டவைகள் எவையும் தவறுதலாயிருக்க மாட்டாதென்று ‘தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால்’
|