பக்கம் எண் :

440
மகா-ள-ள-ஸ்ரீ பஞ்சாபகேச பாகவதர் அவர்களின 22 சுருதியின் முறை.

வழங்கும் சுருதிகளிலும் ஒன்றற்கொன்று பேதப்படுவதினாலேயே இப்போதும் அவைகளைப் பற்றி விசாரிக்க வேண்டியதாயிற்று. தற்காலத்தில் விசாரிக்கிற பல கனவான்களுடைய அபிப்பிராயத்தையும் நாம் கவனிக்கையில் ஒற்றுமையைத் தவிர மற்றவை அங்கங்கே நிறைந்திருக்கின்றன. இதை பாகவதர் அவர்கள் இனிமேலாவது கவனிப்பார்களென்று நம்புகிறேன். ஒழுங்கீனமான கற்குவியல்களை அஸ்திபாரமாக வைத்து மேல் வீடு கட்டும் புத்திசாலிகள் உலகத்தில் எவருமில்லை. சுருதிகளிலேயே ஒற்றுமையில்லாத சங்கீதம் என்றும் அஸ்திபாரமில்லாத சாஸ்திரமென்றும் மற்றவர் ஏளனம் பண்ணுவதற்கு இருபத்திரண்டே காரணமாயிற்று.

31வது அட்டவணையின் இரண்டு பக்கங்களையும் சேர்த்துப் பார்ப்போமேயானால் ஒவ்வொருவர் சொல்லும் சுருதி லக்கங்களுக்கும் அவைகளின் பெயர்களுக்கும் மிகுந்த வித்தியாசமிருப்பதாகக் காண்போம். இதில் சங்கீத பாரிஜாதத்தின் பின் அதைச் சார்ந்ததான சுரமேளகளாநிதி, சதுர் தண்டி பிரகாசிகை, சங்கீத சாராமிர்தம் என்னும் நூல்கள் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. 1, 2, 3, 4, 5, 6 எண்களுக்கும் ரிஷபத்தின் சுருதிகளும் தைவதத்தின் சுருதிகளும் வருவதை நாம் கவனிக்கையில் இவைகள் கர்நாடக சங்கீதத்தின் போக்கை அனுசரித்ததாகக் காணப்படுகின்றன. என்றாலும் பாரிஜாதக்காரரே இவற்றிற்கு முந்தினவரென்று நாம் நினைக்க வேண்டும். இவரும் அளவுகணக்கின்படி போனதினிமித்தம் கொஞ்சம் வித்தியாசம் ஏற்படுகிறதேயொழிய மற்றப்படி இவர் கர்நாடக சங்கீதத்தின் சுரநிச்சயம் கூடியவரை செய்திருக்கிறார் என்று தெரிகிறது. மற்றும் ஒத்துப் பார்ப்பதற்கு இலகுவாயிருக்கும்படி கொடுத்திருக்கும் அட்டவணையில் தெளிவாகக் கண்டு கொள்ளலாம்.

மொத்தத்தில் ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் தான் வரரேண்டும் என்றும் அதைவிட்டு இரண்டைக் கூட்டியாவது குறைத்தாவது சொல்வது எவருக்கும் தகாதென்று சொல்ல வந்தவர் தாம் கொடுத்த அட்டவணையினாலேயே 16, 17, 18, 19, 20, 22, 29 முதலிய சுருதி ஸ்தானங்கள் வரலாமென்று ருசுப்படுத்துகிறார். இப்படி முன் பின்னான அபிப்பிராயங்களை எவர் சொல்வார் என்பதை அறிவாளிகள் கவனிப்பார்கள்.

மேலும் ஒன்றற்கொன்று ஒவ்வாத அபிப்பிராயமுடைய வைகளாயிருப்பதினால் துவாவிம்சதி சுருதிகளைப் பற்றித் தகவல் ஏற்பட்டு அவைகள் சரியாயிருக்கலாமோ என்ற சந்தேகமும் சரியாயிருக்க மாட்டாதென்ற வாதமுமுண்டாகி ஒரு முடிவுக்கும் வராமையால் பழைய சொக்கே போதுமென்று பூர்வம் பாடிக் கொண்டிருந்தபடியே இருக்கட்டுமென்று வடநாட்டார் நின்றுவிட்டார்களென்றும் அது போலவே கர்நாடக ராகங்களையும் பாடி தங்களுக்கு இஷ்டமான சுருதிகளை வழங்கி பல தேசிக ராகங்களையும் அவற்றோடு கலந்து கர்நாடக சுத்தத்தைக் கெடுத்துக் கொண்டிருங்களென்றும், கர்நாடக சங்கீதத்தில் வழங்கி வரும் சுருதியை விசாரிக்க வேண்டாம் என்று சொல்லவும் ஆரம்பித்து விட்டார். 22 சுருதி முறைப்படி நமது கர்நாடக சங்கீதமில்லை என்பதை இதன் பின் பார்ப்போம். ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் தான் வரவேண்டுமென்று சாதிக்கிறவர்கள் செய்த தவறுதல்களை இதன் முன்னுள்ள வியாசங்களில் தெளிவாகக் காட்டியிருக்கிறோம்.