பத்தாவது. தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுருதிகள் செய்யும் விதத்தைப் பற்றிச் சங்ககிரி துருக்கம், மகா- - -ஸ்ரீ S. மாணிக்க முதலியார் அவர்கள் அபிப்பிராயம். இவர் சங்கீத சந்திரிகையென்றொரு தமிழ் இசை நூல் 1902ம் வருஷம் அச்சிட்டிருக்கிறார். அந்த நூல் இன்ன நூலின் உதவியைக் கொண்டு செய்யப்பட்டதென்று சொல்லப்படவில்லை. இவர் சுருதிகளைப் பற்றிச் சொல்லும் கணக்குகளை இங்கே எடுத்துச் சொல்வது நல்லதென்று தோன்றுகிறது. வீணை மேளஞ் செய்யும் விதம். 1-வது சுருதி பிரமாண லக்ஷணம். "வீணையின் ஸப்த தந்திகளின் நாமதேயங்களைப் பற்றி விவரமாய் முன்னிட்டே (15) லக்கத்தில் சுருதியின் கீழ்ச் சொல்லப்பட்டிருக்கிறதல்லவா? அதன்படி அனுமந்தரம், மந்தரம், பஞ்சமம், சாரணை, தாள மந்தரம். தாளபஞ்சமம், தாளசாரணை ஆகிய தந்திகளைச் சுருதி செய்து கொண்டு வீணையின் சாரணையை மீட்டி அந்தத் தந்தியில் எந்த ஸ்தானத்தில் தாளசாரணை அல்லது ஹெச்சு ஷட்ஜத்துக்குச் சமதையான ஸ்வரம் பேசுகிறதோ அந்த ஸ்தானத்தின் கீழ் வீணாதண்டத்தின் மெழுகில் என்னும் மெட்டைப் பதிக்கவும். அடியில்வரைந்திருக்கும் வீணை சாரணைத் தந்திப் படத்தைக் கவனித்துக் கொண்டு மேளம் செய்யவும், அதே சாரணையில் எந்த ஸ்தானத்தில் தாள பஞ்சமம் அல்லது ஹெச்சு பஞ்சமத்துக்குச் சமதையான ஸ்வரம் பேசுகிறதோ அந்த ஸ்தானத்தின் கீழ் ப - என்னும் மெட்டைப் பதிக்கவும். இந்த மெட்டின் மேல் பஞ்சம தந்தியைப் பிடித்து அந்த ஸ்வரத்துக்குச் சமதையான சுவரத்தைச் சாரணையிற் கண்டுபிடித்து அந்த ஸ்தானத்தின் கீழ் 2 ரி - என்னும் மெட்டைப் பதிக்கவும். இந்த மெட்டின் மேல் பஞ்சம தந்தியில் பிடித்து அதற்குச் சமதையான ஹெச்சு சுவரத்தைச் சாரணையிற் கண்டுபிடித்து அந்த ஸ்தானத்தின் கீழ் 2. த. - என்னும் மெட்டைப் பதிக்கவும். இந்த மெட்டின் மேல் பஞ்சம தந்தியில் பிடித்து அதற்குச் சமதையான சுரத்தைச் சாரணை தந்தியில் கண்டுபிடித்து அந்த ஸ்தானத்தின் கீழ் 3க என்னும் மெட்டைப் பதிக்கவும். இந்த மெட்டின் மேல் பஞ்சம தந்தியில் பிடித்து அதற்குச் சமதையான ஹெச்சு சுரத்தைச் சாரணையிற் கண்டுபிடித்து அந்த ஸ்தானத்தின் கீழ் 3நி - என்னும் மெட்டைப் பதிக்கவும். இந்த மெட்டின் மேல் பஞ்சம தந்தியில் பிடித்து அதற்குச் சமதையான சுரத்தைச் சாரணையிற் கண்டுபிடித்து அந்த ஸ்தானத்தின் கீழ் 2ம என்னும் மெட்டைப் பதிக்கவும். இந்த மெட்டின் மேல் பஞ்சம தந்தியிற் பிடித்து அதற்குச் சமதையான சுரத்தைச் சாரணையிற் கண்டுபிடித்து அந்த ஸ்தானத்தின் கீழ் 1ரி - என்னும் மெட்டைப் பதிக்கவும். இந்த மெட்டின் மேல் பஞ்சம தந்தியிற் பிடித்து அதற்குச் சமதையான ஹெச்சு சுரத்தைச் சாரணையிற் கண்டுபிடித்து அந்த ஸ்தானத்தின் கீழ் 1த - என்னும் மெட்டைப் பதிக்கவும். இந்த மெட்டின் மேல் பஞ்சம தந்தியிற் பிடித்து அதற்குச் சமதையான ஹெச்சு சுரத்தைச் சாரணையிற் கண்டுபிடித்து அந்த ஸ்தானத்தின் கீழ் 2க - என்னும் மெட்டைப் பதிக்கவும். இந்த மெட்டின் மேல் பஞ்சம தந்தியிற் அதற்குச் சமதையான ஹெச்சு சுரத்தைச் சாரணையில் கண்டு பிடித்து அந்த ஸ்தானத்தின் கீழ் 2-நி-என்னும் மெட்டைப் பதிக்கவும்.
|