இந்த மெட்டின் மேல் பஞ்சம தந்தியில் பிடித்து அதற்கு சமதையான சுரத்தைச் சாரணையிற் கண்டுபிடித்து அந்த ஸ்தானத்தின் கீழ் 1ம - என்னும் மெட்டைப் பதிக்கவும். ஆகவே இப்போது பதிக்கலான பன்னிரண்டு மெட்டுகளும் சேர்ந்து சாரணை தந்தியில் மத்யஸ்தாயி ஒன்று சம்பூர்ணமாய் ஏற்பட்டிருக்கிறது. அதாவது மேற்படி பன்னிரண்டு மெட்டுகளும் மேலே பதித்தபடியாயின் அடியிற் கண்டபடி நிற்கும். சாரணைத் தந்தியே தக்கு ஷட்ஜத்தையும், 1ரி-சுத்த ரிஷபத்தையும், 2ரி- சுத்த காந்தாரம் அல்லது சதுஸ்ருதி ரிஷப்ததையும், 2 க-சாதாரண காந்தாரம் அல்லது ஷட்ஸ்ருதி ரிஷபத்தையும் 3 க-அந்தர காந்தாரத்தையும், 1 ம-சுத்த மத்யமத்தையும், 2ம-ப்ரதி மத்யமத்தையும், ப-பஞ்சமத்தையும், 1 த-சுத்த தைவதத்தையும், 2 த. சுத்த நிஷாதம் அல்லது சதுஸ்ருதி தைவதத்தையும், 2நி - கைசிகநிஷாதம் அல்லது ஷட்ஸ்ருதி தைவதத்தையும் 3.நி- காகலி நிஷாதத்தையும், ஹெச்சு ஷட்ஜத்தையும் குறித்து நிற்கின்றன. மேலே எழுதியிருக்கும் தந்திப் படத்தில் புள்ளி வைத்திருக்கும் வீடுகள் தான் பிரதம சரளி வரிசைகள் வாசிக்கும் வீடுகளாகும். இப்பன்னிரண்டு மெட்டுக்களுக்கும் சமதையான ஹெச்சு சுரங்களைக் கண்டுபிடித்து, மற்றப் பன்னிரண்டு மெட்டுகளும் இவைகளைத் தொடர்ந்து பதிக்கப்பட்டால் அவை வீணைக்குரிய இருபத்து நான்கு மெட்டுகளுமாகின்றன. வீணையின் வலது புறமிருக்கிற (b) குதிரையும் அதாவது பானையின் மேல் தந்திகள் நிற்கும் மெட்டும், இடது புறமிருக்கிற (a) கட்டையும் அதாவது தண்டின் மேல்கோடியாகிய மெட்டும் மேலே சொன்ன இருபத்துநான்கு சுரஸ்தானங்களைக் காட்டும் இருபத்து நான்கு மெட்டுகளும், மற்ற மூன்று தந்திகளாகிய பஞ்சமத்துக்கும், மந்தரத்துக்கும், அநுமந்தரத்துக்கும் லக்ஷணத்தின் படியே அமையும். அதாவது அநுமந்தரத்தில் தக்குமந்தரஸ்தாயி சுத்ததைவதமுதல் மத்யஸ்தாயி பஞ்சமம் வரையிலுள்ள இருபத்துநான்கு சுரஸ்தானங்களையும், மந்தரத்தில் மந்தரஸ்தாயி சுத்தரிஷபமுதல் தாரஸ்தாயி ஷட்ஜம் வரையிலுள்ள இருபத்துநான்கு சுரஸ்தானங்களையும், பஞ்சமத்தில் மந்தரஸ்தாயி சுத்ததைவதமுதல் தாரஸ்தாயி பஞ்சமம் வரையிலுள்ள இருபத்துநான்கு சுரஸ்தானங்களையும், சாரணையில் மத்யஸ்தாயி சுத்தரிஷபமுதல் தாரஸ்தாயி ஹெச்சு ஷட்ஜம் வரையிலுள்ள இருபத்துநான்கு ஸ்வரஸ் தானங்களையும் வீணையிலுள்ள இருபத்துநான்கு மெட்டுகளும் முறையே காட்டி நிற்கின்றன. ஆகவே வீணை மேளஞ் செய்யும் முதல் விதம் சம்பூரணமாயிற்று. 2.வது அளவுபிரமாண லக்ஷணம் இதற்கு முன் வீணை மேளம் செய்யும் விதம் சொன்னது சுருதி ஞானமுள்ளவர்களுக்கேயன்றி அந்நியர்களுக்கல்ல. சுருதி ஞானமில்லாதவர்களுக்கும் எளிதில் வீணை மேளம் செய்யும் பொருட்டு அடியிற் கண்ட விதத்தையும் கூறலாயிற்று. அடியில் வரைந்திருக்கும் வீணை சாரணை தந்திப் படத்தைக் கவனித்துக் கொண்டு மேளம் செய்யவும். சாரணையை, அதாவது அந்தரத்தில் சாரணைத் தந்தி எவ்வளவு நிற்கிறதோ அந்த நீளத்தை அதாவது a முதல் b வரையிலுள்ள நீளத்தை இரண்டு சமபாகமாகப் பிரித்து அந்த ஸ்தானத்தின் கீழ் ச் என்னும் மெட்டைப் பதிக்கவும். இந்த இரண்டு சமபாகங்களில் வலது புறத்திலிருக்கும் ஒரு (ச்-b) பாகத்தை இரண்டு சமபாகமாகப் பிரித்து அந்த ஸ்தானத்தின் கீழ் ஷ் என்னும் மெட்டைப் பதிக்கவும். மற்றொரு (a-ச்) பாகத்தையும் இரண்டு சமபாகமாகப் பிரித்து அந்த ஸ்தானத்தின் கீழ் 1 ம - என்னும் மெட்டைப் பதிக்கவும். ச்-க்கும் ஷ்-க்கும் இடையிலுள்ள நீளத்தை அதாவது ச்-ஷ் நீளத்தை, அதாவது ச்-ஷ் வை இரண்டு சமபாகமாகப் பிரித்து அந்த ஸ்தானத்தின் கீழ் 1 ம்- என்னும் மெட்டைப் பதிக்கவும். 1 ம- 1 ம்-வை இரண்டு சமபாகமாகப் பிரித்து அந்த ஸ்தானத்தின் கீழ் 2நி- என்னும் மெட்டைப் பதிக்கவும். ச்-2 நியில் அரைவரிசை யளவிற்கு ஷ் விலிருந்து கீழ்புறம் அதாவது இடதுபுறமாக 2 நி என்னும் மெட்டைப் பதிக்கவும்.
|