2 நி- 2 நியை இரண்டு சமபாகமாகப் பிரித்து அந்த ஸ்தானத்தின் கீழ் 2 க் என்னும் மெட்டைப் பதிக்கவும். ச்-2க் க்கு இரண்டு பங்கு அளவிற்கு இடது கைப்புறம் தண்டின் கடைசியிலிருக்கும் கட்டை (a) யிலிருந்து மேற்புறமாக அதாவது வலதுபுறமாக 2க என்னும் மெட்டைப் பதிக்கவும். 2க - 2க்- வை இரண்டு சமபாகமாகப் பிரித்து அந்த ஸ்தானத்தின் கீழ் 1 த -என்னும் மெட்டைப் பதிக்கவும். 1த-ச் வில் அரைவரிசையளவிற்கு ஷ் - விலிருந்து கீழ்புறமாக 1த் என்னும் மெட்டைப் பதிக்கவும். 1த-1த் வை இரண்டு சமபாகமாகப் பிரித்து அந்த ஸ்தானத்தின் கீழ் ரி என்னும் மெட்டைப் பதிக்கவும். ச்-1ரி க்கு இரண்டு பங்கு அளவுக்கு இடது புறமிருக்கும் கட்டை (a)யிலிருந்து மேற்புறமாக 1ரி என்னும் மெட்டைப் பதிக்கவும். 1 ரி - 1 ரி-யை இரண்டு சமபாகமாகப் பிரித்து அந்த ஸ்தானத்தின் கீழ் 2-ம் என்னும் மெட்டைப் பதிக்கவும். 1ம - 2ம - க்கு அரைவரிசை அளவிற்கு 1ம் விலிருந்து மேற்புறமாக 2ம் என்னும் மெட்டைப் பதிக்கவும். 2ம - 2ம் - வை இரண்டு சமபாகமாகப் பிரித்து அந்த ஸ்தானத்தின் கீழ் 3நி என்னும் மெட்டைப் பதிக்கவும். 3நி - ச் - க்கு அரைவரிசையளவிற்கு ஷ் விலிருந்து கீழ்புறமாக 3நி என்னும் மெட்டைப் பதிக்கவும். 3நி - 3நி யை இரண்டு சமபாகமாகப் பிரித்து அந்த ஸ்தானத்தின் கீழ் 3க் என்னும் மெட்டைப் பதிக்கவும். 2க் - 3க் - க்கு இரண்டு பங்கு அளவிற்கு 2க விலிருந்து மேற்புறமாக 3க என்னும் மெட்டைப் பதிக்கவும். 3க - 3க் - வை இரண்டு சமபாகமாகப் பிரித்து அந்த ஸ்தானத்தின் கீழ் 2த என்னும் மெட்டைப் பதிக்கவும். 1த - 2த - வில் அரைவரிசை அளவுக்கு 1த் விலிருந்து மேற்புறமாக 2த் என்னும் மெட்டைப் பதிக்கவும். 2த - 2த் - வை இரண்டு சமபாகமாகப் பிரித்து அந்த ஸ்தானத்தின் கீழ் 2ரி என்னும் மெட்டைப் பதிக்கவும். 1ரி - 2ரி க்கு இரண்டு பங்கு அளவுக்கு 1ரி - யிலிருந்து மேற்புறமாக 2ரி என்னும் மெட்டைப் பதிக்கவும். 2ரி - 2ரியை இரண்டு சமபாகமாகப் பிரித்து அந்த ஸ்தானத்தின் கீழ் ப என்னும் மெட்டைப் பதிக்கவும். 2 ம-ப வில் அரை வரிசை யளவிற்கு 2ம்-விலிருந்துமேற்புறமாக ப் என்னும் மெட்டைப் பதிக்கவும். ஆகவே மேற்சொன்ன 1 ரி, 2 ரி, 2 க, 3 க, 1 ம, 2 ம, ப, 1 த, 2 த, 2 நி, 3 நி, ச், 1 ரி, 2 ரி, 2 க், 3 க், 1 ம், 2 ம், ப், 1 த், 2 த், 2 நி, 3 நி, ஷ், என்னும் இருபத்து நான்கு மெட்டுகளும் மேற் சொன்னபடி பதிக்கப்பட்டால் இதே வரிசைக் கிரமத்தில் அடியிற் கண்டபடி நின்று அவை மத்திய தார ஸ்தாயிகளின் இருபத்து நான்கு சுர ஸ்தானங்களையும் காட்டுகின்றன." சுரஞானம் உள்ளவர்கள் தாங்களாய் சுருதி சேர்த்துக் கொள்ளும் முறையொன்றும், சுரஞானம் இல்லாதவர்கள் அளவைக் கொண்டு சுருதி சேர்க்கும் முறையொன்றும் ஆக இரண்டு விதம் சொல்லுகிறார். இவற்றில் சுரஞானம் உள்ளவர்கள் சேர்த்துக் கொள்ளும் முறையே சரியான முறையென்று நாம் ஒப்புக் கொண்டாலும் சுரஞானம் இல்லாதவர்கள்
|