5. | திருமலர் மணமென வொருமையின் மல்கி எண்ணில் பொழிற்பயிர் பண்ணிக் காக்கும் ஒப்பில் பெருமை மெய்ப்பொரு ளன்பு பாங்கி னிலைபெற் றோங்குந் தமிழகத் தாறறி வுடைமைப் பேறுறு மக்கள் |
10. | முன்னர்த் தோன்றி மன்னிக் கெழுமி இமிழிய லொலிசார் தமிழ்மொழி பேசி மண்ணிற் பலவிட நண்ணிக் குடியிருந் தவ்வவ் விடத்துக் கொவ்விய வண்ணம் கூற்று நடையுடை வேற்றுமை யெய்தி
|
15. | பற்பல வினப்பெயர் பெற்றுப் பெருகினர். தமிழகத் தினிய தமிழ்சொல் வளர்ந்து தென்மா மதுரையின் மன்னிய பாண்டியர் ஆட்சியிற் பன்னீ ராயிர வாண்டு முன்னர் முதன்மைக் கழகந் தோன்றி
|
20. | நிகழ்ந்த ததனில் நீளறி வகத்தியர் இயலிசை நாடக மெனுமுத் தமிழுக் கொருநூ லியற்றி வரியா வழங்கப் பரிபா டல்பல வருளா லுரைத்தனர். முதன்மைக் கழக முன்னீர்ப் பட்டபின்
|
25. | ஏழா யிரத்தைநூ றாண்டுமுன் றுவக்கிய கவாட புரத்திடைக் கழக மதனிற் சிகண்டி யாரிசை நுணுக்கஞ் செய்தனர். மூவா யிரத்தெழு நூறிற் றுவக்கிய கடைக்கழ கத்துக் கவின்பரி பாடல்
|
30. | ஆற்றற் பேரிசை கூத்துச் சிற்றிசை நிமிர்வரி முன்னைய வமிழ்தெனத் தோன்றின. ஆய்ந்து காணல் முதலிடைக் கழக முன்னீர் கொள்ளப் படுதலி னிந்தியப் படியின் வளம்வலி அயனாட் டவரீ ராயிர மாண்டாப்
|