35. | படையெடுத் துத்துன் புறுத்திய படியால் நூல்களு மவற்றி னுண்ணிய வழக்கும் அருகி மறைந்தன வாதலி னவ்வழி திருமுறை கண்ட பெருமைச் சோழன் நீல கண்டயாழ்ப் பாணர் மரபில் |
40. | வந்தபெண் வழியா யறிந்து பரப்பினன். நந்துத லில்லா வந்த முறையில் தேவா ரப்பேர் மூவாத் தமிழ்மறை நசையொழி மேலோ ரிசைதிரு விசைப்பாப் பண்ணொடு படிக்கு மண்ணின் வழக்கும்.
|
45. | இசைநூன் முறைதே ரிளங்கோ வடிகள் சிலப்பதி காரச் செவ்விய மொழியும், படிமேற் புலவ ரடியார்க்கு நல்லார் உரையிற் கூறிய வுயர்மேற் கோளும், பரிபா டல்பயில் பண்ணின் முறையும்,
|
50. | மற்றுள பன்னூ னுட்பமும், ஆய்ந்து; சிற்பநூல் வல்லார் சிறிதோ ருறுப்புக் கைப்பெறின் மற்றெலாங் கண்டு கணக்காற் றேர்தல் போலத் தெய்வ நல்லருள் காட்டப் பொருளெலாங் கருத்தி லோர்ந்தே;
|
55. | தமிழிசை நூல். ஆடு முதலாம் பன்னிரு வீட்டில் குரலிளிக் கொன்றொன்று கொடுத்தைந் தினுக்கும் இரண்டிரண் டாக வீயிற் பன்னிரண் டிலநிறை வெய்து; மிதுவே யாழி ற் பன்னிரு வீட்டிற் பயிலிசை யாகும்;
|
60. | அதையிரட் டிக்க விருபத்து நான்கு கேள்வி வருநிலை மூன்றினுங் கெழுமும்; ஒத்த வளவிற் பாத்தற் கொவ்வும்; இணைகிளை நட்புப் பகைமுறைக் கியலும்; பழந்தமி ழிசைநூற் பாலைக ணான்கிற்
|
65. | பன்னீ ரில்லிற் பயில்வ தாயம்; ஆய மிரட்டிக்கி லாகும் வட்டம்; வட்ட மிரட்டிக்கில் வருந்திரி கோணம்; கோண மிரட்டிக்கிற் குலவுஞ் சதுரம்; அறுநான் கலகுக ளிலையே லொன்றுமூன்
|
70. | றைந்தே ழலகி லொன்றா கேள்வி; கோணஞ் சதுர மிலையேற் கேள்விக் காலரை முக்காற் கணக்குக் கிடமிலை; ஆதலி னுள்கி யறிமி னென்றும்; வட்டப் பாலையில் யாழ்வகை நான்கும்
|