பக்கம் எண் :

59

75.

பன்னிரு பாலையும் பாலையே ழேழும்
பெரும்பண் ணான்கும் சாதி நான்கும்
உளவதில் விளரி கைக்கிளைக் கொவ்வோர்
அலகு குறைத்திரு பத்திரண் டாக்கி

இசைக்க நூல்க ளிசைத்தன வென்றும்; 

80.


பாலை நான்கிற் பன்னீ ராயிரம்
பண்கள் தமிழிற் பல்கின வென்றும்;
தென்னன் சிவனே மன்னெவை கட்கு
முன்னிறை யாக்கொ ளின்றமிழ் வழக்கால்,
தமிழ்க்கழ கங்கள் தழைக்கச் செய்த 

85.


தென்னவர் மரபிற் சிறந்து தோன்றிக்
கடல்கோட் பட்ட காலைத் தமிழகம்
மரக்கலத் துய்ந்து மறுத்து மூர்செய்த
சத்யவி ரதனெனச் சதபதப் பிராமணம்
எழிற்பா கவத மேனைப் புராணம் 

90.


பலவும் பகர்வை வச்சுத மனுவும்
அவர்வழி வந்த பாண்டிய ரனைவரும்
தமிழிசை வளர்த்த தலைவ ராதலின்
தென்னா தெனாவெனு மாளத்தி யிதுவரை
மன்னி வழங்கும் வழக்குள தென்றும்; 

95.


இருக்கு முன்னைய வெழின்மறை மூன்றும்
நாலிசை யோடு நண்ணிப் பின்னர்த்
தமிழ னிராவண னமரே ழிசையொடு
சாமம் பாடித் தண்ணருள் பெற்றனன்
அதுமுத லம்மறை யேழிசை யோடு

100.


வழங்கல் கேட்டலிற் பழம்புரை யேழிசை
தமிழர்க் குரித்தெனல் சால்பாம் என்றும்;
தமிழிசை நூலின் றகைமை விளக்கி
வடமொழி யிசைநூல்.
ஆயிரத்து நானூ றாண்டின் முன்னர்த்
தோன்றிய பரதர் சொல்வட நூலில் 

105.


பஞ்சம மிந்தளம் பாணற் கௌசிகம்
வேளா வளிசீ ராக முன்னைய
தமிழ்ப்பண் களுமறு நூற்றி யெண்ப
தாண்டுமுற் றோன்றிய சாரங்க தேவர்

இயற்றிய ரத்நா கரத்தி லிந்தளம் 

110.


காந்தாரம் பஞ்சமம் காந்தார பஞ்சமம்
சாதாரி கௌசிகஞ் சுத்த சாதாரி
குறிஞ்சியொண் தக்க ராகங் குச்சரி
நட்டபாடை மேக ராக முன்னைய

தமிழிசை நூல்கள் சாற்றிய பண்களும்