பக்கம் எண் :

60

115.

எடுத்துக் கூறலி னிவைதே வாரத்
துளவெனச் சாரங்க தேவர் குறித்தலின்
அன்னவர் தமிழிற் பண்களை யாய்ந்து
வடமொழி யினினூல் வகுத்த காலை

ஈரல குகுறைத் திசைக்கப் பெற்ற 

120.


வட்டப் பாலையி லிளிகுர லான
நெய்தல் யாழ்க்குரிய நான்மூன் றிரண்டு
நானான் மூன்றிரண் டாகிய கேள்வி
இருபத் திரண்டினை யொருநிலைக் குரிய

அலகென மயங்கி யாக்கம் பேசி 

125.


யுரைத்தன ரம்முறை யொத்த பகுப்பிற்
கொவ்வா தன்றிக் கோணஞ் சதுரப்
பாலையி னாற்பத் தெட்டுந் தொண்ணூற்
றாறுமாப் பகுத்தற் கியலா தம்முறை

முன்னர்க் கூறி நானூ றாண்டு 

130.


முந்தி யகோபிலர் பாரிஜா தத்திற்
பின்னர் யாழிற் பன்னீ ரிசையே
நாரதர் வழியென் றிராகம் வகுத்தனர்
முன்னூற் றறுப தாண்டு முன்னர்

நனித்தமிழ் வெறுத்த ராமா மாத்தியர் 

135.


தனிச்சர மேள களாநிதி சாற்றினர்
முன்னூ றாண்டு முன்சுதா நிதிநூல்
கோவிந்த தீக்ஷிதர் குயிற்றின ரதன்பின்
இருநூற் றைம்பதி யாண்டு முன்னர்

விளங்கிய வேங்கட மகிப்பேர் மிக்கோன் 

140.


பேண்சதுர்த் தண்டிப் பிரகா சிகையில்
ஏழுபா லையில்வரு பன்னிரு வட்டத்
தியலு மெழுபத் திரண்டு மேளம்
வகுத்தசை கட்கு வடமொழிப் புதுப்பெயர்

வழங்கின னன்னவர் முன்னைய பல்லோர் 

145.


இசைக்குள கேள்வி யிருபத் திரண்டென்
றுரைத்தமை முற்று மொவ்வா தென்றும்,
அளந்தோ ராம லவ்வழி நம்பிப்
பற்பல ரிந்நாட் பாடகர் சொற்ற
கணக்கு களிலுள கறையிவை யென்றும், 

150.


வடநூற் கண்ணுள வழுவெடுத் தோதி
மேற்கோள்.
ஆங்கில வல்லா ரளவிட் டறிந்து
கேள்வி யலையிற் கிளக்குங் கணக்கும்
பிரம மேளத் திருபா னான்கு
கேள்வி முறையிற் கிளர்ந்த நலமும்