பக்கம் எண் :

61

155.

இசைநூற் றொன்மை யினிது விளங்கக்
கிறித்து மறைநூல் கிளந்த பலவும்
பற்பல வறிஞர் பகர்மேற் கோளும்
எடுத்துக் கூறி யியைபுகள் காட்டி

ஈரல குகுறைத் திசைக்கும் வட்டப் 

160.


பாலைக் குரிய விருபா னிரண்டே
நிலையொன் றுக்கியல் கேள்வியா மென்னல்
செழும்பண் ணியல்திறந் திறத்திறங் கட்குறு
மிருபது பதினா றீறாறு கேள்வி

களிலொன்று கூறல் கடுக்கு மதனால் 

165.


கேள்வி யொருநிலைக் கெண்முண் றேயாம்
இன்றேல் நடைபெறு மிராகங் களிலுள
காலரை முக்கா லலகு களுக்கோர்
இடமிலை யிந்நாட் பாடக ரதற்குக்

கமக மெனப்பேர் கண்டுரைக் கின்றனர் 

170.


சாரங்கர் கமக மிசையசை வென்றனர்
இசையொன்று பிறிதி னெழிலைச் சார்தல்
கமக மெனவேங் கடமகி சாற்றினர்
இசைவினை யாகு மென்று மின்பம்

பயக்கக் குறைத்துப் பாடுதல் பாட 

175.


லமுத மென்று மறைந்தனர் தமிழர்
இசைநுண் ணலகும் பலவகை வினையும்
வெவ்வே றென்பது வெளிப்படை யதனால்
அலகி னுட்ப மடைதற் குரிய

வட்டங் கோணஞ் சதுரப் பாலைக் 

180.


கேள்வி யிலையேற் கிளக்கக் கணக்கிலை
நிலைக்கறு நான்கு கேள்வி நிகழ்த்திசை
மரபுநூல் கண்டார் மயக்கங் கண்டிலர்
என்று பகரு மென்வழக் குவந்துநூற்பயன்.
இருந்தமிழ்ப் பண்கவ ரிருள்போ யகல 

185.


அரும்பொற் பண்ணமு தமர்ந்தினி தருந்தி
அன்பி னுலகோ ரின்பந் திளைக்க
உலகெலாந் தமிழி னுயர்வுந் தொன்மையும்
கண்டுள நன்மலர் விண்டு களிக்க

பண்களுக் குரிய பயனுடன் பலிக்கத் 

190.


தெய்வந் தாழ்பவர் மெய்யன்பு பெருகிக்
கருதிப் பாடிக் கனிந்துள முருகப்
புதுவழி வாட்டி முதுதமிழ் நெறியைக்
காட்டி நிலைக்குக் கேள்வி யெண்மூன்
றேயெனத் தீட்டி யுண்மையை நாட்டி