195. | யாவரு முணர நற்றமிழ் நடையில் கருணா மிருத சாகர மென்னும் லொன் றியற்றி ஞாலம் புகழதை அரங்கேற்றல். அஞ்சு பகுப்பினு மஞ்சா தாட்சி நண்ணிச் செலுத்து மண்ணற் கோமான் |
200. | ஐந்தாம் ஜார்ஜெனு மைந்தர் பெருமை மன்னிறை யன்பு துன்னிச் சான்ற கல்வி பொருளெனுஞ் செல்வ நிரம்பிய மராட மாகிய பரோடா நாட்டை துய்க்கநன் றாளுங் கெய்க்கவா ரிறைவன் |
205. | கிறித்தா யிரத்துத் தொள்ளா யிரப்பதி னாறா மாண்டி லனைவரும் வேண்ட இனிது நடாத்திய விசைப்பே ரவையில் பற்பல கொள்கைய ரொப்பி மகிழ நன்றரங் கேற்றி மன்றினி லுள்ளார் |
210. | ஐயந் தீர மெய்யெலாம் விரித்து எல்லாம் வல்ல விறைவன் மெச்சிய வண்மைப் பாணர் மரபிற் றோன்றித் தமிழ்மறைப் பண்கள் தழைக்கச் சோழன் அவையிற் பாயி வருட்பெண் மணியெனத் |
215. | தோன்றி யறிவு சான்று தெய்வ அன்புங் கல்வி வன்புங் கற்பும் தேனினு மினிமை யானநற் பாட்டும் நிறைந்து பண்பிற் சிறந்து விளங்கும் மரகத வல்லி கனகவல்லி யென்ற |
220. | தன்பெண் மணிகள் யாழொடு பாடி நூற்படி வழங்கும் நுட்பங் காட்டச் செய்து தெளித்து மெய்ம்மைக் கடவுள் அருளுஞ் செல்வமு மலகில் நல்லோர் நன்கு போற்று நலமுங் களிப்பும் |
225. | அறமும் புகழு மடைந்து சிறந்தனன் ஆக்கியோன். மனுவின் குலத்து வந்த பாண்டியர் ஆண்டநன் னாட்டி லமைந்து சிறந்த சாம்பூர் வடகரைச் சாம்புவ னோடையிற் சான்றா ரினத்திற் றலைமைபூண் டோங்கிய |
230. | பல்லக் கூர்ந்த செல்வர் வழிவரு மெத்துநற் சீர்த்தி முத்துச் சாமிவேள் நன்மனை யாந்திரு வன்னம்மை யின்பால் அன்புங் கொடையும் அறமும் அருளும் ஒருங்குரு வெடுத்திவ் விரும்புவி வந்தெனத் |