பக்கம் எண் :

63

235.

தோன்றிய வின்சொ லான்றநற் றோன்றல்
மெய்ப்பொரு ளின்பா லுய்த்த மனத்தன்
கல்வியுஞ் செல்வமு மல்கிய நல்லோன்
நத்துமொண் பெருமைச் சித்தர் குழுமிய

 சுருளி மலையின் மருவி யுறையும் 

240.


கருணா நந்தத் தெருள்சான் முனிவற்
கண்டுபே ரன்பு கொண்டவ ரருளால்
வாதம் மருத்துவ மாதிநூன் முறைகள்
அண்ணாரு ஞான வுண்மை யுணர்ந்தோன்

உலக முழுவதும் நிலவத் தன்மருந் 

245.


துக்க மொடுமுயன் றாக்கம் பெற்றோன்
சென்னைக் கவர்னர் தன்னிலம் வந்து
விருந்துண் கின்ற பெருந்தகை யுடையோன்
தஞ்சைக் சங்கீத வித்யா மகாஜன

சங்கம் நாட்டிய மங்காப் புகழோன் 

250.


கிறித்து மறைநூ னிறைத்த வுளத்தன்
ஆங்கில வாட்சிய ரறிந்துயர் வண்மை
பணித்தராவ் சாஹிப் பட்டம் புனைந்தோன்
ஆகிநற் றஞ்சையி லமுதேன வோங்கும்

ஆபிர காமெனு மருந்தவத் தோனே. 

த னி ய ன்.

காமணக்குந் தஞ்சைவள ராபிரகாம் பண்டிதனற் கலைக ளாய்ந்து
பாமணக்க வியற்றுகரு ணாமிருத சாகரநூற் படிக்கி லின்ப
நாமணக்குங் கேட்பவர்தஞ் செவிமணக்கும் பிழைக்கொள்கை நவியு முள்ளிற்
றேமணக்கு மிசைநூலின் றேன்மணக்கு மணக்குமிறை திருநா ரன்றே.

பொருள் முடிமுறை.

1-46 பன் னூனட்பமும் ஆய்ந்து

190 கேள்வியெண் மூன்றே யெனத் தீட்டி உண்மையை நாட்டி

47-50 கருத்திலோர்ந்தே

193 நூலொன்றியற்றி

51-98 தமிழ் இசைநூலின்றகைமை விளக்கி

194-205 அரங்கேற்றி

99-146 வடநூற்கண்ணுள வழுவெடுத்தோதி

206 மெய்யெலாம் விரித்து

147-154 கூறி இயைபுகள் காட்டி

207-218 தெளித்து

155-179 என்வழக்குவந்து

221 புகழுமடைந்து சிறந்தனன்

180-188 புதுவழிவாட்டி

222-250 ஆபிரகாமெனு மருந்தவத்தோனே.

189 தமிழ்நெறியைக்காட்டி