9. | பூவின் மணமென வெள்ளினு ணெய்போல் இயங்குவ நிலைப்பவென் றிருபாற் றிணையினும் உள்ளும் புறமும் வெள்ளிடை யின்றி நீக்கற நிறைந்த போக்கறு மொருவன் ஒப்புயர் விகந்த வருளா லொலிகெழும் |
10. | ஆழி மானிலம் வாழிய வென்னப் பகைக்களி றுள்ளம் பதைபதைத் தொடுங்க படங்கற படாமெண் டிசையினு நுடங்க உருகெழு மேரித் திருமக டன்னொடு நந்தா வென்றி ஐந்தாம் ஜார்ஜு மன்
|
15. | அரியணை மேவிய யாண்டே ழதனில வரமிகு கிறித்துப் பரமன் பிறந்தபின் பத்தொன்ப தடுக்கிய நூற்றப் பதினா றாட்டையி லிருநான் காஅந் திங்களில் ஒன்றொழி யிருபதி லிருபதிற் கூடிய
|
20. | மஞ்சினந் தவழு மிஞ்சிசூழ் தஞ்சை சங்கீத வித்தியா சபைக்கள மதனில் வயவா ளுழவன் சயமா கீர்த்தியன் நிலந்தரு திருவிற் பாண்டிய னிரீஇய படுதிரை வாய்க்கொளு நடுவ ணவைக்கண்
|
25. | அகத்திய னோடிருந் தருந்தமி ழாய்ந்த வலருங் கேள்வித் துவரைக் கோமான் திசைமயக் கறாத விசைப்புல வோர்கடம் பிணக்கந் தீர்த்திசை நுணுக்கங் காட்டுவான் மேவினன் போன்மெலா நானில மிசைப்பத்
|
30. | திருவுங் கல்வியு மருவதி காரமும் ஒருங்கு படைத்த பெருந்தகை விசும்பின் வானவர் கோமான் மணிக்கலப் பேழையின் வாய்திறந் தென்ன வயங்கிடு பரோடா மாட்சிமை மிக்க சூழ்ச்சிசா லமைச்சர்
|
35. | வீ. பி. மாதவ ராவ். ஸி. ஐ. இ. அக்கிரா சனத்தி லமர்ந்தினி திருப்ப இயலு மிசையுங் கணிதமு மென்னு முத்துறை போகிய வித்தகர் குழீஇ நுண்ணிதிற் றெரிந்து பன்முறை வியப்பக்
|