பக்கம் எண் :

65

40.

கழக மிரண்டுங் கார்கோள் கொண்டபின்
அருந்தமி ழிசைநூல் பெருவழக் கொழிய
மூன்றாங் கழகமு முடிந்த பின்றை
இளங்கோ வடிக ளுளங்கனிந் துரைத்த
தேன்படு சுவையின் மூன்றுதமிழ் விராய 

45


உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுளில்
இலைமறை காயென மறைபடக் கிடந்த
இசைநுணுக் கங்க ளசைவி லூக்கமுஞ்
சுருளியெ மடிகள் கருணா னந்தர்

கான்மலர் பொழிந்த கருணையுங் காட்ட 

50.


யாண்டுபல கழியத் துரீஇக் கண்டு
செந்தமிழ் நிலத்தொடு முந்துறு மக்கள்
வழிவழி யாக முறையினிற் பயின்ற
பல்லியந் தழூஉம் பாடலி னியல்பும்

நாற்பெருப் பண்ணெனு நால்வகை யாழதன் 

55.


பாற்படு நான்மைச் சாதியின் றிறனும்
பண்ணொடு பண்ணியம் பண்டிறந் திறத்திறம்
என்னும் பெற்றியிற் பண்ணி னீர்மையும்
சிறுமை பெருமைக் கிருவரம் பெய்தி
ஐந்தினு மேழினும் வந்திடு நெறியிற் 

60.


பன்னிரு வகைக்கடூஉம் பாலையி னேர்மையும்
முந்நான் கிரட்டி கேள்வியு மவற்றினு
நுண்ணிய வாய சுருதியும் விளக்கும்
ஆய முதலா வட்டமீ றாகப்
பாலைகள் வரைதரு பான்மையும் பிறவும் 

65.


எவ்வ நீங்கி யெத்தகை யோருங்
கைப்படு நெல்லியிற் காணத் தொகுத்து
மேற்கோண் முதலா வேற்பன தோற்றிப்
பிறர்மதங் களைஇத் தன்கோ ணிரீஇப்
பரீஇக் கழக மிரீஇயரங் கேறிய 

70.


பாண்டிய ரென்ன மேவி யீண்டவை
இன்னிசை மாட்சியி னியல்புண ராரு
மயலற நாடி மாண்பொரு டேறக்
கருணா னந்த சாகரம் எனுமிசை
யுரைசா னூலரங் கேற்றினன் புரைதபு 

75.


தென்னவர் நாடு செய்தமா தவத்தான்
முரண்பகை பனிக்கு மரண்டகு காப்பி
னாவலொடு பெயரிய வூர்வட கரைக்கண்
நலனொருங் குற்றென நண்ணிய சீலன்
தமிழ்மொழி யேமொழி தமிழிசை யிசையெனத்