பக்கம் எண் :

66

80.

தாவின்றி நிறுவுந் தமிழ்நர் கோமான்
தாழிசை வண்டுந் தமிழ்யாழ் முரலும்
ஏழிசைக் சூழ லிடமென வாழ்வோன்
முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து
பாலை யாமெனும் பான்மை வறிதாகப்

85


பயினின் முரம்புடைப் பாலை திரிந்து
வண்டு வரிபாடத் தண்போ தலர்ந்து
தாதுந் தளிரு மேதகத் துவன்றிய
பல்பூஞ் சோலையும் பயன்றரு மரனும்
நாண்மலர்க் கொடிகளு நனந்தலை மயங்க

90.


மயிலொடு குயில்கூஉங் குரலும் பயிலப்
பன்னிறங் கஞலிய வின்சுவைக் கரும்பும்
களிறு மாய்க்குங் கழனியுங் செறிதர
முல்லையு மருதமு மென்னச் சொல்லியல்
கருணா னந்த புரங்கா ணுரவோன் 

95.


ஒருகுடை நிழற்றி யிருநிலம் புரக்கு
மன்னவர் மனங்கொளு நன்மதிப் புடையோன்
பயன்மரம் பழுத்தென வூருணி நிறைந்தென
நயனுடைச் செல்வம் பிறர்க்கென வாழ்வோன்
இல்ல முதலா வெல்லாப் பொருள்களும்
 

100.


அருட்குரு நாதற் காக்கியொன் றேனுந்
தனக்கென வாழாத் தகைமை யாளன்
திருத்தகு மரபின் மருத்துநூ லன்றி
யெல்லாம் வல்ல பண்டித னிவனென
மீப்புக ழுலகெலா மோங்கும்

ஆப்பிர காம்பெய ரறிஞர்பெரு மானே.