மதுரைச் சங்க வித்வானும், சீகாழி லுத்தரன் ஹைஸ்கூல் தமிழ்ப்போதகாசிரியருமாகிய, பறங்கிப்பேட்டை, மகாஸ்ரீ முத்துத்தாண்டவராயபிள்ளையவர்கள் இயற்றியவை. | 5. | மதிக்கு மிசைப்பாண மாநிலத் தெம்போற் கதிக்கும் வரையதரிற் கான்போய்த் - துதித்தக்காற் றஞ்சை நகராள் தருவனா னாபிரகாம் தஞ்ச முனக்குத் தரும். பாடாண்டிணை, பாணாற்றுப்படை.(1) மலைசேர் மதிய வதனத்தர் கூத்திற் றலைசேர் தலைவநீ சாரின் - நிலைசேருங் காரன்ன தஞ்சையர் காவல னாபிரகாம் தாரன்ன வாக்கந் தரும். . . ., கூத்தராற்றுப்படை. (2) தரைகொள் பெருவளத் தஞ்சைத்தேஞ் சாரின் மரைகொள் தமிழணங்கின் மாண - விரைகொள் அருளீந் தளிக்கு மவனா பிரகாம் பொருளீந் துவக்கும் புகழ். . . ., புலவராற்றுப்படை (3) மதியம் வதனந் தானா மதியக் கயல்பாய் தடத்துக் குவளை கண்ணா வியலர வின்பட மகல்விளக் காகப் பரம்பர னளிப்பப் பற்றினை யியலணி யெனினு மினிப்பண் விறலீ யியம்புது | | 10. | நனிமகிழ் துடவை நறுமது துளிப்பக் களிவண் டாடுங் காமர் தஞ்சை மாநகர்ச் செலீஇ யாண்டுள கோமா னாடல்சா னாயகன் கூடலம் பதிக்க ணரசு புரீஇப் பரசுமுத் தமிழைச்
| | 15. | சங்கத் திரீஇ யிங்கிதப் படுத்திய வழுதியர் செழியர் வழிவருந் தோன்ற லியலே யிசையே யியலுநா டகமே பன்னரு மவற்றின் பன்னிரு பாலே யகத்திய னிகர்ப்பச் சகத்திடை யாயுபு
| | 20. | முப்பா னூற்கு மிப்பார் பரவு மியல்பின் கரையைப் பயில்வுறுங் கலைஞன் ஆபிரா முயரிய வப்ப னென்றும் ஆபிர காம்பல் லினத்தினர்க் கப்ப னென்றும் வல்லவர் சொன்னவப் பரிசே
| | 25. | நற்றமிழ் நயத்தை யுற்றநம் மரபோ ருணர்தர வுலரத்தலிற் குணஞ்செறி பெரியோ னிருங்கட லுடீஇய பெரும்புவி வகுத்துப் புரந்தருள் தூயோன் வரந்தரு போழ்தி னுன்னைப் பெரிய வுறவின னாக்குவ
|
|