பக்கம் எண் :

449
கருணாமிர்த சாகரம் - முதல் புஸ்தகம் - இரண்டாவது பாகம் - இருபத்திரண்டு சுருதிகள்.

இவைகள் ஏழும் சுத்த ஸ்வரங்கள்.

இனி விக்ருதி ஸ்வரங்கள் பிறக்கும் விதம் சொல்லுகிறார் :-

"மேரு ஷட்ஜத்துக்கும் ரிஷபத்துக்கும் நடுவிலுள்ள பாகத்தை மூன்று பாகம் செய்து இரண்டாம் பாகத்தில் கோமள ரிஷபம் வை.

மேரு ஷட்ஜத்துக்கும் தைவதததிற்கும் மத்தியில் தீவிர காந்தாரம் வருகிறது.

தீவிர காந்தாரத்துக்கும் தார ஷட்ஜத்துக்கும் மத்தியில் மூன்று பாகஞ் செய்து ஒரு பாகத்தில் தீவிர மத்திமம்.

பஞ்சமத்திற்கும் தார ஷட்ஜத்திற்கும் மத்தியில் மூன்று பாகஞ்செய்து முதல் பாகத்தில் கோமள தைவதம்.

சுத்த தைவதத்திற்கும் தார ஷட்ஜத்திற்கும் நடுவிலுள்ள அளவை மூன்று பாகஞ்செய்து இரண்டாம் பாகத்தில் தீவிர நிஷாதம் வை.

"இனிமேல் விக்ருதி ஸ்வரங்களின் பேர் மாறுதல்களைச் சொல்லுகிறார்:-

சுத்த காந்தாரமே தீவிரதரரிஷபம் ஆகும்.

சுத்த மத்திமமே அதிதீவிரதம காந்தாரமாகும்.

சுத்த தைவதம் பூர்வநிஷாதம் எனப்பெயர் ஆகும்.

சுத்த நிஷாதம் தீவிரதர தைவதமாகும்.

ஒரு சுத்த ஸ்வரம் அடுத்த சுருதி அடைகையில் தீவிரமென்றும் இரண்டாம் சுருதியடைகையில் தீவிர தரமென்றும் மூன்றாவது சுருதியடைகையில் தீவிரதமமென்றும் நாலாம் சுருதியடைகையில் அதி தீவிரதமமென்றும், இரண்டு சுருதி குறைந்து வருகையில் பூர்வமென்றும் அழைக்கப்படும்.

இச்சுருதிகளில்.

(1) பூர்வ ரிஷபம் (2) தீவிர ரிஷபம் (3) தீவிரதர காந்தாரம் (4) தீவிரதம காந்தாரம் (5) தீவிர மத்திமம் (6) தீவிரதர மத்திமம் (7) பூர்வ தைவதம் (8) தீவிர தைவதம் (9) தீவிரதர நிஷாதம் (10) தீவிரதம நிஷாதம். இப்பத்தையும் தள்ளி இராக லட்சணம் சொல்லியிருக்கிறேன்" என்று சொல்லுகிறார்.

மேலேகாட்டிய சுத்த சுரங்கள் ஏழும் விக்ருதி சுரங்கள் ஐந்தும் ஒன்றின் பின் ஒன்றாய்த் தந்தியின் நீளத்தில் மொத்தத்தில் எவ்வளவு பங்கில் நிற்கிறதென்று பின்வரும் அட்டவணையின் முதல் கலத்தில் காண்பிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவது கலம், முழு எண்களாகப் பாவிக்கப்படும் காலத்தில் இப்பின்னங்கள் யாவற்றுக்கும் பொதுவாகக் கிடைக்கும் 216ஐ ஆதார ஷட்ஜமாக வைத்துக் கொண்டு அதன் பின்வரும் சுரங்கள் ஒவ்வொன்றும் இன்னின்ன அளவில் வருகிறதென்று காண்பிக்கிறது. மூன்றாவது கலத்தில் சங்கீத பாரிஜாதக்காரர் சுரம் நிர்ணயிக்கும் முறைப்படியே அமிடாபாத்திலுள்ள Mr. கணபதிராவ் கோபால் ராவ் பார்வு என்பவர் அர்த்தம் செய்திருப்பதில் 204, 198, என்ற ரிஷபஸ்தானங்கள் மாத்திரம் பேதப்பட்டிருக்கின்றன என்று காண்பித்திருக்கிறது. இவர் பாரிஜாதக்காரரின் கருத்தின்படி கூடியவரை நுட்பமாகச் செய்திருக்கிறாரென்று மிகவும் சந்தோஷப்படுகிறேன். இது தவிர ரிஷபஸ்தானத்தில் ஸ்வரங்களைக் குறித்த விஷயத்திலும் நாம் மிகவும் கவனிக்கத்தக்க ஒரு விஷயமுள்ளது. ஆதார ஷட்ஜத்திற்கும் ரிஷபத்திற்கும் நடுவிலுள்ள தந்தியின் நீளத்தைப் பாகஞ் செய்து கோமள ரிஷபம் போட வேண்டுமென்று சொன்ன பாரிஜாதக்காரரின் சூத்திரம், ரிஷபத்திற்கு மூன்று சுருதி உண்டென்று சொன்ன சாரங்கதேவரின் கருத்தை அனுசரித்து மூன்று பாகமாகச் செய்ய வேண்டுமென்று சிலரும், இரண்டு பாகமாகச் செய்ய வேண்டுமென்று சிலரும் அபிப்பிராயப்படக் கூடிறயதாயிருக்கிறது. இதில் மூன்று சுருதியாகப் பாகிக்க வேண்டுமென்று அச் சூத்திரங்களுக்கு அர்த்தம் செய்த