பக்கம் எண் :

6

சங்கீத ரத்னாகரருடைய 22 சுருதிமுறையையும், 22 சுருதிகளென்று சொல்லும் மற்றவர்கள் முறையையும், இப்புத்தகம் 2-ஆம் பாகத்தில் 282-ஆம் பக்கமுதல் 521-ஆம் பக்கம் வரையும் விவரமாய்க் காணலாம்.

சங்கீத இரத்னாகரரின் கருத்தின்படி, சுருதிகள் ஒன்றற்கொன்று தீவிரமாய்ப், படிப்படியாய், நடுவில் வேறு நாதம் உண்டாகாமல், ஒரு ஸ்தாயியில் வரவேண்டும் என்பதனால், Geometrical Progressionபடி வரவேண்டுமென்று தெளிவாகத் தெரிகிறது. அதல்லாமல், சுருதிகளைப்பற்றிச் சொல்லும் யாவரும், ஒரு தந்தியின் (2/3)இல் பஞ்சமமும்,(3/4) இல் மத்திமமும் வர வேண்டுமென்று சொல்வதனால், சற்றேறக்குறைய இல், பஞ்சமமும் மத்திமமும் வரவேண்டும் என்று நினைக்கவேண்டியதாயிருக்கிறது.

இன்னும், பூர்வ தமிழ் மக்கள் வழங்கிவந்த இசைத்தமிழ் நூலில் சொல்லப்படும் முறைகளைக் கவனிக்கையில், சில அரிய விஷயங்கள் காணப்பட்டன. அவர்கள் ச-ப, ச-ப முறையாகவும், ச-ம, ச-ம முறையாகவும், சுரஞானத்தைக்கொண்டு ஒரு ஸ்தாயியில் சுரங்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள் என்று, சிலப்பதிகாரத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு இராசி வட்டத்தில் 12 வீடுகள் அமைத்து, அவற்றில் ச-ப 7 ஆவது இராசியென்றும், அதற்கு 7ஆவது 7ஆவது ஆகத் தொட்ட சுரத்திற்குத் திரும்ப வரும்பொழுது, 12 சுரத்தைக் கொடுக்கிறதென்றும் நாம் தெளிவாகக்காணலாம். இதை, வலமுறை அல்லது ஆரோகண முறையென்று சொல்லுகிறார்கள். இதுபோலவே, ச-ம, ச-ம முறையாக 5 ஆவது 5 ஆவது இராசியாக, இடமுறையாய் முன் கிடைத்த பன்னிரு சுரங்களும் கிடைக்கின்றனவென்று சொல்லுகிறார்கள்.

‘வரன்முறை மருங்கின் ஐந்தினு மேழினும்
உழைமுத லாகவும் உழையீ றாகவும்
குரல்முத லாகவும் குரலீ றாகவும்’ - என்பதனால்

ஒரு ஸ்தாயியில் வரும் 12 சுரங்களும், சம அளவான ஓசையுடையவைகளாய் வருகின்றனவென்றும் ஒரு ஸ்தாயியில் வரும் 12 சுரங்களும், Geometrical Progression படியே வரவேண்டும் என்றும் காணக்கிடக்கின்றது.

இதோடு, மற்றும் சில அரிய விஷயங்கள் இங்கே காணப்பட்டதனால், இயல், இசை, நாடகமென்னும் முத்தமிழும் வழங்கிவந்த முதற் சங்கத்தைப்பற்றியும், தமிழ் மக்களின் பூர்வீகத்தைப் பற்றியும், தமிழ் மொழியின் தொன்மையைப் பற்றியும், அது ஆங்கிலோ ஜெர்மன் பாஷைகளிலும், சமஸ்கிருத பாஷையிலும், ஸீத்திய எபிரேய பாஷைகளிலும் கலந்திருந்தும், மேற்காட்டிய பாஷைகள், தமிழில் உள்ள பூர்வ நூல்களில் கலக்கப்பெறாமையால் தமிழ்மொழி ஆதிமொழியா யிருக்கலாமென்றும், இசைத் தமிழாகிய சங்கீதம், முதல் முதலில் தமிழ்மொழியிலேயே உண்டாயிருக்கவேண்டும் என்றும், ஒருகாலத்தில் மிகுந்த விருத்தி நிலையிலிருந்த சங்கீதம், பிற்காலத்தில் மெலிவடைந்த காரணம் இன்னதென்றும், பாண்டிய அரசாட்சி யற்றுப் போனபின், சோழ ராஜ்யத்தில் சங்கீதம் ஒருவாறு பேணப்பட்டு வந்ததென்றும், அச்சங்கீதத்தில் சிறந்து விளங்கிய சில வித்வான்களைப்பற்றிய குறிப்புகளும், சங்கீத வித்யா மகாஜன சங்கம் ஏற்படுவதற்குரிய காரணமும், அச்சபையில் வந்திருந்தவர்களும், அதில் சில கனவான்கள் சொல்லிய சில குறிப்புகளும், 6 கான்பெரென்ஸுக்கும் வந்திருந்த கனவான்களின் படங்