பக்கம் எண் :

7

களும், மற்றும் சிலவிஷயங்களும் இன்னின்னவை என்றும், இப்புத்தகம் முதல் பாகத்தில் 1 முதல் 253 பக்கங்கள் வரையும் சொல்லப்பட்டிருக்கின்றன.

மூன்றாவது பாகத்தில், இசைத் தமிழைப்பற்றிச் சொல்லும் முக்கிய குறிப்புகளைப்பற்றியும், அக்காலத்தில் வழங்கிவந்த 4 பாலைகளைப் பற்றியும், நாற்பெரும் பண்களைப்பற்றியும், 4 ஜாதிப் பண்களைப் பற்றியும், 7 பாலைகள் பிறப்பதைப் பற்றியும், கிரகமாற்றி 16 ஜாதிகள் பிறப்பதைப் பற்றியும், கிரக சுரம் பிடித்துப் பாடுவதற்குரிய முறையைப் பற்றியும் சொல்லப்படும் மேற்கோள்களும், அவற்றின் கருத்துரையும், சொல்லப்பட்டுள்ளன.

முதலாம் நூற்றாண்டின் கடைசியில் அதாவது இற்றைக்குச் சுமார் 1800 வருடங்களுக்கு முன் நடந்த கோவலன் சரித்திரத்தில், இளங்கோவடிகள் சங்கீத விஷயமாய்ச் சொல்லும் சொற்ப பகுதியின் சாரத்தைக் கவனிப்போமானால், பூர்வ தமிழ் மக்களின் கானத்தின் உயர்வும், உலகத்தவர் எவரும் இன்னும் அறிந்துகொள்ளாத நுட்பங்களும், சொல்லப்படுகிறதை நாம் காண்போம். பூர்வ தமிழ் மக்கள் வழங்கிவந்த சிறந்த இசைத்தமிழின் விதிமுறைப்படியே, தென்னிந்திய சங்கீதமென்று தற்காலத்திற் சொல்லும் கானமும் இருக்கிறதென்றும், அந்நுட்ப விதிகளை அறியாதிருந்தாலும், அம்முறைப்படியே நாளது வரையும் பாடிக் கொண்டிருக்கிறோமென்றும், நாம் அறியும்பொழுது மிகுந்த சந்தோஷமடைவோம்.

சிலப்பதிகாரத்தின் கதாநாயகனாகிய கோவலன், யாழ் வாசிப்பதில் மகத்தேர்ந்தவனாயிருந்தானென்றும், அப்படியே, யாழ் வாசிப்பதில் மிகத்தேர்ந்த நடன கன்னிகையாகிய மாதவியிடம் அன்பு வைத்தானென்றும் சொல்ல வந்தவிடத்தில், நடனத்தைப்பற்றியும், யாழைப் பற்றியும், குழலைப் பற்றியும், தண்ணுமையைப் பற்றியும், ஆளத்தியைப் பற்றியும், அவி நயத்தைப் பற்றியும், மற்றும் அவைகளைச் சேர்ந்த சில அங்கங்களைப் பற்றியும், இளங்கோவடிகள் சொல்லுகிறார். இளங்கோவடிகள் எழுதிய இந்த நூலுக்குச், சற்றேறக்குறைய 1000 வருடங்களுக்குப் பின் ஜெயங்கொண்டான் கவிச்சக்கிரவர்த்தி பதவுரையும், அதற்குச் சுமார் 100 வருடங்களுக்குப் பின் அடியார்க்கு நல்லார் உரையும் எழுதியிருக்கிறார். இவ்விருவருடைய உரைகளில், பல இசைத்தமிழ் நூல்களின் மேற் கோளும், அனுபோகமும் சொல்லப்படுகின்றன. இசைத்தமிழைச் சொல்ல வந்த அநேக நூல்கள், அவர்கள் காலத்திலேயே இறந்துபோனதாகவும் அரை குறையாயிருந்ததாகவும் எண்ண இடமிருக்கிறது.

சிலப்பதிகாரத்தில் அரங்கேற்று காதையில் காணப்படும் அகவல்களும், வேனிற்காதையிலும் ஆய்ச்சியர் குரவையிலும் மற்றும் சில இடங்களில் வந்துள்ள அகவல்களும், சொற்பமாயிருந்தாலும், எந்த தேசத்துத் தேர்ந்த சங்கீத வித்வான்களும் இன்னும் அறிந்து கொள்ளாத இராகம் உண்டாக்கும் முறை, நாற்பெரும் பண்களில் கிரகம் மாற்றி இரண்டு அலகு குறைத்துக் கமகமாய்ப் பிடிக்கும் 16 ஜாதிப் பண்களின் முறை, நுட்ப சுருதிகள் இன்னின்ன இடங்களில் சேர்ந்து வருகின்றனவென்ற முறைபோன்ற பல அரியவிஷயங்கள் நிறைந்திருக்கின்றனவென்று நிச்சயமாய்ச் சொல்லலாம்.

அவைகளில், ஒரு இராசிவட்டத்தைப் பன்னிரு கூறாகப் பிரித்து, ச-ப முறையாகவும் ச-ம முறையாகவும் 12 சுரங்கள் கண்டுபிடித்து, அம்முறையை ஆயப்பாலை யென்றும், பெண்களுக்குப் பிரியமானதென்றும் சொன்னார்கள். அதில் 12ஆவது இராசியில் நின்ற குரலிலிருந்து அதற்கு இரண்டாவது இராசியினின்ற ரிஷபத்தையும், நாலாவது இராசியினின்ற காந்தாரத்தையும், 5ஆவது இராசியினின்ற மத்திமத்தையும், 7ஆவது இராசியினின்ற பஞ்சமத்தையும், 9ஆவது இராசியினின்ற தைவதத்தையும், 11ஆவது இராசியினின்ற நிஷாதத்தையும், 12ஆவது