துவாவிம்சதி சுருதிகள் தற்கால கானத்திற்கு ஒத்து வரமாட்டாதென்று சொல்லும் சில கனவான்களின் அபிப்பிராயம். மேற்கண்ட காரியங்களைக் கொண்டு துவாவிம்சதி சுருதி தற்காலத்தில் வழங்கிவரும் கானத்திற்கு ஒத்து வரமாட்டாதென்று திட்டமாகத் தெரிகிறது. இது போலவே மற்றும் சிலரும் அபிப்பிராயப்படுகிறார்கள் என்பதை பின்வரும் வாக்கியங்களில் காணலாம். Introduction to study of Indian Music, by E. Clements. P. 82. "The author showed more perspicacity than the Karnatic writers, appropriating the shuddh notes of the Ratnakar to the Kafi scale, and designating the Madras "shuddh" notes "purva" but no scientific terminology could be expected of any writer who adhered to Saranga-devar's system. Nowadays, among the practical musicians of Western India, the Sangit Ratnakar is looked upon as belonging to a bygond age although no one is able to say what it is which makes its theories inapplicable to modern practice. Professional musicians have constructed their own systems; needless to say, they differ widely one from another." "பாரிஜாதம் எழுதின நூலாசிரியரானவர் கர்நாடக நூலாசிரியர்களைவிட அதிக கூர்மையான அறிவுள்ளவராய் ரத்னாகரத்தில் சொல்லிய சுத்த சுரங்களை எடுத்து இந்துஸ்தானி காப்பி ராகங்களுக்குரியவைகளாக வைத்துக் கொண்டு, சென்னையில் வழங்கும் சுத்த சுரங்களைப் "பூர்வம்" என்ற பெயரைக் கொண்டு அழைத்தார். ஆனால் சாரங்க தேவருடைய முறைப்படி யெழுதின எந்த நூலாசிரியரிடத்திலாவது பதங்களுக்கு சாஸ்திரத்தை யொத்துள்ள பத அர்த்தம் அகப்படுமோ? மேல் இந்தியாவிலுள்ள சங்கீத வித்துவான்களால் சங்கீத ரத்னாகரம் தற்காலத்துக்கு உதவாத ஒரு பூர்வகால நூலாகக் கொள்ளப்படுகிறது. ஆகையால் ஏன் அதில் சொல்லப்பட்ட முறைகள் தற்கால சங்கீதப் பயிற்சிக்கு ஒவ்வாதவைகளாயிருக்கின்றன என்பதற்குக் காரணம் சொல்லத் தெரியவில்லை. சங்கீதத்தைத் தங்கள் பிழைப்பாகக் கொண்டிருக்கும் அநேகர் தங்களுக்கு வேண்டிய முறைகளைத் தாங்களே ஏற்படுத்திக் கொண்டார்கள். ஆகையால் அவர்கள் எவருக்குள்ளும் எந்த விதமான ஒற்றுமையும் இல்லை என்பதை நாம் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை." மேற்காட்டிய வசனங்களைக் கவனிக்கையில் சங்கீதத்தைத் தங்களுக்குப் பிழைப்பாகக் கொண்டவர்கள் தங்கள் தங்கள் பரம்பரைக்கேற்ற முறைகளை எற்படுத்திக் கொண்டார்களென்றும் ஆகையால் அவர்களுக்கு ஒற்றுமையில்லையென்றும் சொல்லுகிறார். இவ்விஷயம் உண்மையே. பூர்வமாய் எழுதப்பட்ட கீதங்களை அப்பியாசித்து அவைகளிலிருந்து ஒரு உருப்படியைச் செய்கிறவர்கள் தாங்கள் கேட்டுப் பழக்கமுள்ள சில இனிமையான சுரங்களையும் சேர்த்துக் கொள்ளுகிறார்கள். இது மார்க்க முறை தவறித் தேசிகமாகிறது. இதைக் கேட்கும் மற்றவர்கள் ஆக்ஷேபனை செய்யாமலிரார். பின்னடியார்க்குக் காரணமுந் தெரிகிறதில்லை. இப்படித்தான் எங்கள் பரம்பரை பாடம் என்று சொல்லுவார்கள். கவனிக்காமல் வெறும் மனப்பாடம் செய்கிறவர்கள் தான் இப்படியிருக்கிறார்கள். இவர்களுக்கு வெகுமானமும் உபசரணையும் அதிகம். விசாரிக்கப் புகுந்த சுரஞானிகள் ‘நெய்க்குத் தொன்னை ஆதாரமோ தொன்னைக்கு நெய் ஆதாரமோவென்று சந்தேகப்பட்ட தார்க்கீகனைப்போல்’ வாய்த் தவிடும் போய் அடுப்பு நெருப்பு மிழந்த கதையாய் விழிக்கிறார்கள். இவை யாவற்றிற்கும் துவாவிம்சதி சுருதியைப் பற்றிய தெளிவான
|