Introduction to study of Indian Music, by E. Clements, P. 5. "Now the modern system of tuning throughout India has Shadj as the principal drone accompanied by Pancham or Madhyam. Not only this but Shadj and Pancham are regarded as fixed notes which may never become "Vikrit," or in other words, sharpened or flattened, and Shadj has acquired the privilege of being regarded as the basis of all scales. All Jatis, therefore, start from Shadj, and all the scales of all the Ragas. It is clear therefore, first that the modern srutis and the ancient srutis must differ in many cases and secondly, that there are no longer strings of shuddh notes from which to construct Jatis and scales of Ragas." "இந்தியா முழுவதும் சுருதி சேர்க்கும் முறையில் ஷட்ஜமத்தையே ஆதார சுரமாய் வைத்துக் கொண்டு அதோடு பஞ்சமத்தையாவது மத்திமத்தையாவது சேர்ப்பது வழக்கம். இது மாத்திரமல்ல, ஷட்ஜமமும் பஞ்சமமும் விக்ருதி ஏற்காத சுரங்களாகவும் ஷட்ஜமமே எல்லா ஆரோகணத்துக்கும் மூல சுரமாகவும் கொள்ளப்படுகிறது. ஆகையால் எல்லா ஜாதிகளும் எல்லா ராகங்களின் ஆரோகணங்களும் ஷட்ஜமத்தில் ஜனிக்கின்றன. ஆகையால் இதிலிருந்து நமக்குத் தெளிவாய்த் தெரிகிறது என்னவென்றால் முதலாவது தற்கால சுருதிகளுக்கும், முற்கால சுருதிகளுக்கும் அநேக விஷயங்களில் வித்தியாசமிருக்கிறது. இரண்டாவது சுரஜாதிகளையும் இராகங்களுக்குரிய ஆரோகண அவரோகணங்களையும் உண்டாக்குவதற்கு வேண்டிய சுத்த சுர வரிசைகள் யாதொன்றும் இல்லை யென்பதே." சுருதி சேர்க்கும் முறையை நாம் யாவரும் அறிவோம். ஆதார ஷட்ஜம் வைத்துக் கொண்டு அதிலிருந்து பஞ்சமத்தையும் ஆதார ஷட்ஜத்திலிருந்து தார ஷட்ஜத்தையும், தார ஷட்ஜத்திலிருந்து மத்திமத்தையும் சேர்ப்பது வழக்கம். இதினின்று ஷட்ஜமத்திற்குப் பஞ்சமம் போலவும் ஷட்ஜமத்திற்கு மத்திமம் போலவும் சுரங்களைக் கண்டுபிடிக்க ஆதார சுரங்கள் கிடைக்கின்றன என்பது உண்மையே. இப்படிக் கிடைக்கும் சுரங்களில் ஷட்ஜமத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு எல்லா ராகங்களும் துவங்குகின்றன. இப்படித் துவங்கும் ராகங்களுக்குரிய ஆரோகண அவரோகணங்களும் சுரஜதிகளும் முற்காலத்திலுள்ள துவாவிம்சதி சுருதிகளுக்கு முற்றிலும் ஒத்துவரவில்லையென்று சொல்லுகிறார். இது நாம் யாவரும் கவனிக்க வேண்டியதே. தற்கால கானத்தின் ஷட்ஜமம் நீங்கிய மற்ற எந்த சுரமாவது ஒத்திருக்கவில்லையென்று முன் காட்டிய அட்டவணையில் பார்த்திருக்கிறோம். பஞ்சமமே சரியாய் வரவில்லையானால் ஷட்ஜம பஞ்சமங்களைக் கொண்டு கண்டுபிடிக்கும் மற்றைய சுரங்களைக் கேட்பானேன்? அணுத் தவறினால் மகமேருவின் அடிவாரம் வந்தாற்போல மிகுந்த பேதத்தை உண்டாக்கி விடுகிறது. மத்திமமும் அப்படியே. ஒரு ஸ்தாயியில் மத்திம பஞ்சமங்கள் ஆதார ஷட்ஜமத்தோடாவது தார ஷட்ஜமத்தோடாவது சேராமல் போனால் காதிற்கு அபஸ்வரமாயிருக்குமே. பாலிற் கரைத்த பழம் நாவிற்கு இனிமையாயிருப்பதையும் உப்புக் கலந்த பால் நாவிற்கு அருவருப்பாயிருப்பதையும் நாம் அறிவோம். ஒற்றுமையில்லாத பஞ்சம மத்திமங்கள் ஒரு ஜீவனை அலக்கழிக்கும் பேய்போல் ஷட்ஜமத்தின் சுஸ்சுரத்தையும் கெடுத்துவிடுமே. ஸப்த சுரங்களும் ஒன்றற்கொன்று பொருத்தமில்லாதிருக்குமானால் அதன் அழகைச் சொல்லவும் வேண்டுமோ? அளவும் ஒழுங்குமற்ற சுர வரிசைகள் எப்படி ஒன்று சேர்ந்து இன்பந்தரும்? ஒருக்காலும் தரமாட்டாதென்பது உண்மையே. Introduction to the study of Indian Music, by E. Clements. P. XIV. "When asked whether he (the head of one institution who finds the tempered harmonium an excellent means of teaching beginners 'the scale',) follows the teaching of Sarangadev, the
|