பக்கம் எண் :

528
தென்னிந்தியாவில் வழங்கி வரும் இசைத் தமிழ் சுருதிகள். முகவுரை.

பேரின்பத்திற்கு முக்கிய துணையாயிருந்த இயல், இசை, நாடகமென்னும் முத்தமிழும் சிற்றின்பத்திற்கும் காரணமாயிருக்குமென்று நாம் சொல்ல வேண்டியதில்லையே. ஆன்மார்த்தமாக வழங்கி வந்த சங்கீதம் அர்த்த லாபத்துக்காக உபயோகிக்கப்பட்ட பொழுது கேவலம் கூலித்தொழிலாக மதிக்கப்படுவது நியாயந்தானே. தங்கள் வயிற்றுப் பிழைப்பிற்காகச் சங்கீதத்தை உபயோகிக்கிறவர்கள் ஆன்மலாபத்தைப் பெரிதாக எண்ணுவதும் மிக அரிதாமே. இப்படிச் சங்கீதம் கெட்டுப் போன பின் அதைக் கேவலமென்று படியாதிருப்பதும் இல்லாமலே சிரசில் தங்குவதையும் பாதரட்சையிலுள்ள பொன்னிழை காலில் தங்குவதையும் நாம் அறிவோம். இது போலவே பூர்வ காலத்தில் முடிமன்னர்களால் கொண்டாடப்பட்ட சங்கீதமும் தற்காலத்தில் ஏழைகளால் படிக்கப்படும் சங்கீதமும் மதிக்கப்படுகின்றன.

வித்தைகளில் சிறந்ததாகிய சங்கீதத்தை உண்மையில் ஆராய்வோமானால் அதை மிகுந்த மேன்மையுடையதென்று நாம் அறிவோம். மிகுந்த மேன்மையுடையதாகிய சங்கீதத்தின் விருத்திக்குத் தகுந்தபடியே ஒரு தேசமும் அதன் குடிகளும் நாகரீகமுடையவர்களாயிருப்பார்களென்று தற்காலம் அறிவுடையோர் சொல்லுகிறதைக் கொண்டு சீர்தூக்கிப் பார்ப்போமாகில் தமிழர்கள் மிகுந்த நாகரீகமுடையவர்களாயிருந்திருக்கிறார்க ளென்பது தோன்றும், தென் மதுரையிலுள்ளோர் ஏழு சுரங்களில் வரும் ஏழு மூர்ச்சனைகளுக்குப் பதில் 14, 49, 84, 103 என்னும் மூர்ச்சனைகளுடன் 12,000 ராகங்களைப் பாடி வந்தார்களென்றும் 1000, 100, 27, 17 முதலிய தந்திகள் பூட்டிய வீணைகளை வாசித்து வந்தார்களென்றும் சொல்லப்படுகிறது. இப் பெருமைக்கேற்ற விதமாகவே அவர்கள் சங்கீத சாஸ்திரமும் இருந்ததென்று அங்கங்கே காண்கிறோம்.

சிலப்பதிகாரத்தில் சங்கீதத்தைப் பற்றிய சில வசனங்கள் ஒரு பெருங் கதையின் சிறிய பாகமாயிருந்தாலும் சங்கீதத்தின் முக்கிய அம்சத்தின் ஒரு பாகத்தை அவற்றில் பூரணமாய்க் காட்டியிருக்கிறதென்று மிகவும் சந்தோஷப்படக் கூடியதாயிருக்கிறது. அவ்வசனங்கள் விளங்கிக் கொள்வதற்குக் கடினமாயிருப்பதோடு கூட சில வார்த்தைகள் எந்த நூலிலும் அகப்படாமல் மறைந்து போய்விட்டனவென்று தெரிகிறது. மிகவும் அருமையான அநேக வார்த்தைகள் வழக்கத்தில் வராமல் ஒழிந்து போயினவென்று மிகத் தெளிவாகக் காணலாம். அக்காலத்தில் வழங்கி வந்த ராகங்கள் உண்டாவதற்குரிய கணக்கும் அறிந்து கொள்ளக் கூடியதாயில்லை. மேலும் உரையாசிரியர்கள் தங்களுக்கும் தங்கள் காலத்தவருக்கும் தெரிந்த தான சில மேற்கோள்களை 1,000 வருஷத்துக்குப் பின்னுள்ளவர்களும் அறியக் கூடுமென்று எண்ணி தலைப்பைச் சொல்லிப் புள்ளி போட்டுவிட்டிருப்பதினால் அவர்கள் கருத்தை நாம் பூரணமாய் அறிந்து கொள்வதற்கு ஏதுவில்லை. பூரணமாய் எழுதியிருப்பார்களேயானால் சங்கீதத்தின் முக்கிய அம்சங்கள் யாவும் நன்கு புலப்படும். அங்கு காணப்படும் சில வசனங்கள் தற்காலத்தில் சுருதிகளைப் பற்றி உண்டாகிய பல அபிப்பிராயங்களுக்கும் மேலான போக்குடையனவாகத் தெரிகிறது.

அதோடு 22 சுருதிகள் என்ற பெருஞ் சொல்லும் அங்கே காணப்படுகின்றன. ஆனால் 22 சுருதிகள் சுரங்களின் அலகுகளை மாற்றும் முறையைப் பற்றியும் அவைகள் கிரக மாறுவதினால் உண்டாகும் அளவிறந்த மூர்ச்சனைகளைப் பற்றியும் நாம் கவனிக்கும்பொழுது சங்கீத ரத்னாகரத்தில் எழுதப்பட்டவை மிகச் சொற்பமென்றே சொல்ல வேண்டும். சிலப்பதிகார வசனங்களில் எனக்குத் திட்டமாகத் தெரிந்ததென்று நான் எண்ணியவைகளை மாத்திரம் இங்கு எழுதினேன் மற்றவைகளை நான் எழுதவில்லை. என்றாலும், முக்கியமாய்ச் சுருதிகள் சேர்க்கும் முறையையும்