பக்கம் எண் :

530
தென்னிந்தியாவில் வழங்கி வரும் இசைத் தமிழ் சுருதிகள். முகவுரை.

அனுகூலமான விதிகளும் லக்ஷணங்களும் இரண்டாம் புத்தகத்தில் தெளிவாகச் சொல்லப்படும். இதைக் கவனிக்கும் தமிழ் மக்கள் தங்களால் இயன்றளவு முயன்று அங்கங்கே தேடுவாரற்றுச் சிதைந்து கிடக்கும் பூர்வ தமிழ் நூல்களைத் தேடி முன்னுக்குக் கொண்டு வர மிகவும் கேட்டுக் கொள்ளுகிறேன். பூர்வ காலத்திலுள்ள பல விஷயங்களையும் அறிந்து கொள்ள ஏதுவாய் நிற்கும் சிலப்பதிகாரமென்ற இப்பழமையான நூலைத் தேடி அச்சிட்டு வெளிப்படுத்திய மகா மகோபாத்தியாயர் வே. சாமிநாதையர் அவர்களுக்குத் தமிழ் மக்கள் நன்றி செலுத்த மிகவும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

இப்பகுதியில், பின்வரும் விஷயங்கள் அடங்கியிருக்கின்றன.

I. இசைத்தமிழில் வழங்கிவருகிற சுரங்களும் சுருதிகளும் இன்னின்னவை யென்று (நூற்படி) சொல்லும் பூர்வ முறை.

1. பூர்வ தமிழ் மக்கள் பயின்று வந்த இசைத் தமிழில் சுரங்கள் நிற்கும் அளவு.

2. தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கி வருகிற சுருதிகளைப் பற்றிப் பண்டைத் தமிழ்
      நூல்களில் சொல்லப்படும் அபிப்பிராயம்.

3. ஆயப்பாலையில் 14 பாலை பிறக்கும் விபரம்.

4. செம்பாலை முதலிய ஏழுபாலையும் அவை பிறக்கும் விபரமும்.

5. கோடிப் பாலையில் பிறக்கும் ஏழு பாலைகள்.

6. மந்தரம், மத்தியம், தாரம் என்னும் ஸ்தாயிகள்.

7. இசைத் தமிழில் வழங்கி வந்த வட்டப் பாலை.

8. கிரகம் மாற்றும் முறையில் வட்டப் பாலையில் பிறக்கும் பன்னிரு பாலையும் அவற்றின்
      சக்கரங்களும் (வலமுறை.)

9. இடமுறை திரிந்த வட்டப் பாலையின் பன்னிரு சக்கரங்கள்.

10. பூர்வம் தென்னிந்தியாவில் வழங்கி வந்த பாலை, மருதம், குறிஞ்சி, நெய்தல் என்னும்
       நால் வகை யாழ்களைப் பற்றி.

10(a). நாற்பெரும் பண்கள் ஒவ்வொன்றிலுமிருந்து 4 ஜாதிப் பண்கள் பிறக்கும் விபரம்.

II. பண்டைத் தமிழ்மக்கள் தேர்ச்சிப் பெற்றிருந்த இசைத்தமிழில்வழங்கிவந்த சில கலைகளின் விபரம்.

1. யாழ்வகை.

2. யாழ் வாசிக்கும் பொழுது தமிழ் மக்கள் கவனித்து வந்த சில முக்கிய குறிப்புகள்.

3. தென்னிந்தியாவில் வழங்கி வந்த அபிநயத்தின் சுருக்கம்.

4. தென்னிந்தியாவில் வழங்கி வந்த கொட்டுங் கருவிகள்.

5. தென்னிந்தியாவில் வழங்கிய தாளத்தைப் பற்றியச் சுருக்கம்.

6. ஆளத்தி செய்யும் முறை; அதாவது இராகம் ஆலாபனஞ் செய்யும் முறை.