பக்கம் எண் :

532
தென்னிந்தியாவில் வழங்கி வரும் இசைத் தமிழ் சுருதிகள். முகவுரை.

13. 22 அலகுகள் ஒரு இராசி வட்டத்தில் பூர்த்தியடையாவென்பது.

14. ஒரு ஸ்தாயியில் துவாவிம்சதி சுருதிகள் உண்டென்று சொல்வது தவறுதலான அபிப்பிராயம்.

15. வட்டப் பாலையின்படி ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வருமானால் வாதி சம்வாதியாகச் சுரங்கள் சரியான அளவில் வரமாட்டாவென்பது.

16. சங்கீத ரத்னாகரர் சொல்லும் துவாவிம்சதி சுருதி முறையில் வாதி சம்வாதியாகச் சுரங்கள் சரியான அளவில் வரமாட்டா என்பது.

17. வாதி சம்வாதி பொருந்துவதற்குச் சுருதிகளின் அலகு முறை.

18. ஒரு ஸ்தாயியில் 22 சுருதிகள் வழங்கி வந்தன என்பதைப் பற்றி.

19. ஒரு இராசி மண்டலத்தில் 22 சுருதிகளும் இடைவிடாமல் தொடர்ந்து நிற்குமானால் வட்டப்பாலை முறைப்படித் தாரத்துழை தோன்றும் உழையிற் குரல் தோன்றுமென்ற ஒழுங்கில் சப்த சுரங்களும் வராவென்பது.

20. தமிழ் மக்கள் கிரகசுரம் பிடித்துப் பாடி வந்த முறை.

21. இசைத் தமிழில் வழங்கி வரும் சுரங்களுக்குச் சோதிடப் பொருத்தம்.

22. இளங்கோவடிகள் காலத்திற்கு முன் கடைச் சங்கத்திருந்த ஆசிரியர் நல்லந்துவனார் பரிபாடலில் காணப்படும் சுரப் பொருத்தம்.

23. பூர்வம் தமிழ் மக்கள் வழங்கி வந்த இசைத் தமிழில் சில மறைப்பு வழங்கி வந்ததென்பதைக் காட்டும் மேற்கோள்.

24. இருபத்திரண்டு சுருதிகளில் கானம் செய்தார்களென்பது.

25. ஆயப்பாலை முறை.

26. பூர்வம் வழங்கி வந்த யாழ்களும் அவற்றின் உட் பிரிவுகளும்.

27. நால்வகை யாழ் பிறக்கும் சுரம் இன்னதென்பது.

28. மறைப்பு நீங்கிய பின் ஒவ்வொரு யாழிலும் நவ்வாலு ஜாதிகள் உண்டாகும் முறை.

29. நால் வகை யாழில் நால் வகை ஜாதிகள் விபரம் காட்டும் சக்கரத்தைப் பற்றி.

30. தமிழ் மக்கள் பாடி வந்த ஆறு தாய் இராகங்களைப் பற்றி.

31. பூர்வ தமிழ் மக்கள் கைக்கிளை தாரத்திற்கு ஆறு அலகுகள் அல்லது சுருதிகள் வழங்கி வந்தார்களென்பது.

32. ஒரு ஸ்தாயியிலுள்ள 24 சுருதிகளில் வட்டப்பாலை முறையாய் த-க வில் இரண்டு சுருதி குறைத்துப் பூர்வம் தமிழ் மக்கள் கானம் செய்தது போலவே தற்காலத்திலும் கானம் செய்து வருகிறோமென்பதற்குச் சில மேற்கோள்.

33. சுரம் சுருதிகளைப் பற்றிச் சில பொதுக் குறிப்புகள்.

34. ஒரு ஸ்தாயியில் சுருதிகள் 24 என்ற முடிவுரை.