சிலப்பதிகாரம் வேனிற்காதை பக்கம் 202. "பிழையா மரபி னீரேழ் கோவையை யுழைமுதற் கைக்கிளை யிறுவாய்க் கட்டி" (இ-ள்) மயங்கா மரபினையுடைய இப் பதினாற்கோவையாகிய சகோடயாழை உழை குரலாகக் கைக்கிளை தாரமாகக் கட்டியென்க. (14 சுரமுள்ளது மந்தர ஸ்தாயி நி முதல் தார ஸ்தாயி த வரை) இக் குரன் முதலேழினும் முற்றோன்றியது தாரம்; "தாரத்துட் டோன்று முழையுழை யுட்டோன்று மோருங் குரல்குரலி னுட்டோன்றிச்-சேருமிளி யுட்டோன்றுந் துத்தத்துட் டோன்றும் விளரியுட் கைக்கிளை தோன்றும் பிறப்பு" என்பதனால் தாரத்தில் முதற் பிறப்பதாகிய உழை குரலாய்க் கைக்கிளை தாரமாகிய கோடிப்பாலை முதற் பிறக்கக் கட்டியென்க. சகோடயாழில் உழை குரலாக அதாவது (ம) வை (ச) வாகத் தொடங்கிக் கைக்கிளை அதாவது (க) வை தாரம் அதாவது (நி) யாகச் சேர்க்க ம, ப, த, நி, ச, ரி, க என்பதாகும். மேலும் உ.ழை (ம) குரலாக (ச) வைத்துக் கொள்ளுங் காலத்தில் ச, ரி, க, ம, ப, த, நி என்பதாக வரும். தாரத்தில் (நி) உழை (ம) தோன்ற என்பதைக் கொண்டு நி, ச, ரி, க, ம, ப, த என்ற வரிசையுண்டாம். அவை நி ச ரி க ம ப த ம ப த நி ச ரி க ச ரி க ம ப த நி என்பவைகளாம். இவ் வரிசைகளைக் கவனிக்கையில் "தாரத்துட்டோன்றும் உழை" என்னும் சூத்திரம் நன்கு புலப்படும். (ச-ப முறையாய்) | தாரத்தில் | .... (நி) | உழை | .... (ம) | ....தோன்றும் | | உழையில் | .... (ம) | குரல் | .... (ச) | .... | " | | குரலில் | .... (ச) | இளி | .... (ப) | .... | " | | இளியில் | .... (ப) | துத்தம் | .... (ரி) | .... | " | | துத்தத்தில் | .... (ரி) | விளரி | .... (த) | .... | " | | விளரியில் | .... (த) | கைக்கிளை | .... (க) | .... | " | | கைக்கிளை | .... (க) | தாரம் | .... (நி) | .... | " |
இவை குரலே இளியாய் இரட்டித்தது என்பதாம். இப்படியே மேற்காட்டிய அடுக்குகள் ச-ப முறைப்படி வருகிறதாகத் தெளிவாய்த் தெரிகிறது. உழை (ம) குரலாய் (ச) துவக்கும் பொழுது உழைக்கு (ம) முந்தின கைக்கிளை (க) தாரம் (நி) ஆகிறது. இதைக் கோடிப் பாலை என்கிறார்.
|